Ad Widget

முல்லைத்தீவில் மழை வெள்ளத்தால் மக்கள் பெரும் அவதி!- உதவி கிடைக்காமல் தவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணியூற்று, உற்றங்கரை, புதரிகுடா, சந்திரபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் தொடர்ச்சியான மழையினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

mullai_home-vellam

தற்காலிக வீட்டில் வசிப்பவர்களுக்கு தற்காலிக வீடுகள் கொடுத்து மூன்றுவருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் செத்தையால் அடைக்கப்பட்ட தற்காலிக சுவர்மறைப்புகள் கறையான் அரித்து சேதமடைந்துள்ளது.

அதுமட்டுமல்ல தமது முயற்சியால் மண்சுவர்களினால் கட்டப்பட்ட வீடுகளின் சுவர்கள் விழுந்து காணப்படுகின்றது. ஏனைய சுவர்களும் எப்பொழுது விழுமோ என்ற ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நவம்பர் மாதம் தொடக்கம் இன்று வரை தற்கலிக வீடுகள் அரசாங்க உத்தியோகத்தர்களின் மண்வீடுகள், தொழில் காரணமாக மண்வீடுகள் அமைத்தவர்கள் என பல்வேறு பட்டவர்களின் 500க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களை இதுவரையில் யாரும் வந்து பார்க்கவுமில்லை எவ்விதமான உதவிகளும் கிடைக்கவும்மில்லை என்று மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

Related Posts