- Friday
- November 21st, 2025
முன்னைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பது எமக்கு தெரியவில்லை. குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நினைத்திருந்தால் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ஆனால் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்துக் கொள்வதை ஒத்ததாக, சில அரசியல் கைதிகளை 10 லட்சம் ரூபா பிணையில் விடுவித்தது எமக்கு மனவேதனையளிக்கின்றது என வடக்கு...
“தமிழீழ விடுதலையைக் கொடு, ஒளியூட்டு” “ஒரு அரசியல் கைதியேனும் சிறைகளில் இருக்கக்கூடாது அனைவரையும் விடுதலை செய்ய வேணடும்” என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவர் ஒருவர் ரயில் முன்பாகப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அண்மையாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி...
இம்முறை வரவுசெலவில் அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலைக்குறைப்பை கண்காணிக்க நுகர்வோர் அதிகாரசபையூடாக எமது அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வரவுசெலவு 2016 இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நேற்று (26) பாராளுமன்றில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரவிக்கையைில், மக்களுக்கு...
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உயிர்நீத்த போராளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தியாகிகளுக்கும் நேற்று நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவசக்தி ஆனந்தன், சர்வதேசத்தால் வலியுறுத்தப்பட்ட இந்த உரிமையை இராணுவமும், பொலிஸாரும் தடுக்க முயற்சிக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின்...
தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும். தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு உட்பட உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் இன்று மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழர் உரிமைக்காகக் களமாடி மடிந்தவர்களை நினைவுகூருவதற்காக, மாவீரர் நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி...
இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நோர்வேக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கோஸ்ரட்சீதர் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (26.11.2015) இடம்பெற்றுள்ளது. கடந்த செப்ரெம்பர் மாதம் இலங்கைக்கான தூதுவராகப் பதவியேற்றுக்கொண்ட தோர்ப்ஜோர்ன் வடக்கில் நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக அறிந்துகொள்ளும் நோக்குடன் முதற்தடவையாக வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அதன்...
தொடர் ஏமாற்றங்களும், விரக்;திகளும் வஞ்சிப்புகளும் எஞ்சியிருக்கும் எமது இளைய தலைமுறையை மீண்டும் வன்முறைப் பாதையை நோக்கி உந்துகிறது என்பதைச் சகல தரப்புகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். செந்தூரனின் உயிரிழப்பு தொடர்பாக அவர்விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், வலிகளோடும் துயர்களோடும் வாழ்ந்து வருகின்ற தமிழினம், தன்...
பதினெட்டு வயது மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம். அவருடைய உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் உணருகிறோம். அவரது இந்த செயல் சகல தரப்பினாலும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ளப் படவேண்டிய விடயம். அவரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்க விரும்புகிறோம். இவ்விதமான ஒரு...
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா அறிவித்துள்ளார். இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் செந்தூரனை நினைவு கூரும் வகையிலும் அவரது தற்கொலை காரணமாக ஏற்படக்கூடிய நிலைமைகளை தவிர்க்கும் பொருட்டும் இவ் விடுமுறை...
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி இன்று காலை பாடசாலை மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்றைய தினம் காலை அரசியல் கைதிகள் விடுதலையை வேண்டி பாடசாலை மாணவன் ஒருவன் புகைவண்டி...
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆனையிறவு வெளியில் இன்று அதிகாலை தொடக்கம் தமிழீழத் தேசிய கொடி பறந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் மூன்று என்ற...
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதனை யாரும் தடுக்க முடியாது என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். இறந்தவர்களை வைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது. அவர்களை விற்பனைப் பொருளாக கையாள்வதையும் கைவிடவேண்டும் எனவும் அவர் கூறினார். அத்துடன், இறந்தவர்களுக்காக அவரது உறவுகள் அஞ்சலி செலுத்துவதை யாரும் தடுக்க முடியாது....
யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதியில் அமைந்துள்ள நயினாதீவின் பெயர் தொடர்ந்தும் நயினாதீவு என்று இருப்பதையே நாங்கள் வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றியிருந்தோமே தவிர பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அல்ல என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் கடந்த அமர்வின் போது, நயினாதீவு என்பதன் பெயரானது, நாகதீபம் என்று மாற்றப்பட்டுள்ளதாகவும் அது, நயினாதீவு...
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாதம் இறுதிப் பகுதியில் வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சைகளுக்காக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை ஊடாக பெறுமதி சேர் வரி (VAT) மூன்று பிரிவுகளாக்கப்பட்டுள்ளமையால், பெரும்பாலான அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளதாகவும், அதேபோல் நீர் மற்றும் மின்சாரத்திற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படாது எனவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பெறுமதி சேர் வரி இதுவரை 11% ஆக இருந்ததோடு,...
யாழ்.நகரில் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு பொதிகள் பரிமாற்று சேவை நிலையம் ஒன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவின் துரித செயற்பாட்டினால் தீ பரவுவது தடுக்கப்பட்டு சேதங்களும் தடுக்கப்பட்டது. நேற்றிரவு 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கார்த்திகை தீப திருநாளான நேற்று ஏற்றி வைக்கப்பட்டிருந்த சுட்டி விளக்கே விபத்திற்கு காரணம்...
"தமிழீழ விடுதலையைக் கொடு, ஒளியூட்டு" "ஒரு அரசியல் கைதியேனும் சிறைகளில் இருக்கக்கூடாது அனைவரையும் விடுதலை செய்ய வேணடும்" என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவர் ஒருவர் ரயில் முன்பாகப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அண்மையாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி...
"தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகும். எனவே, பொது இடங்களில் மரணித்த புலிகளை நினைவுகூருவது, புலிகளை நினைவுகூரும் சுவரொட்டிகளை ஒட்டுவது சட்டத்துக்கு எதிரானதாகும். இது தொடர்பில் பொலிஸார் அவதானத்துடன் இருக்கின்றனர். சட்டத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' - இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். "வடக்கு, கிழக்குப்...
தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள், நாளை 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில், மரணித்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை எவராலும் தடுக்கமுடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "மரணித்த தமது உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி - அஞ்சலி...
இருவேறு சம்பவங்களில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி மரணமாகினர். உதயகுமார் சுரேஷ் (வயது 23), பாலசிங்கம் மயூரதன் (வயது 23) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். முள்ளியவளையைச் சேர்ந்த உதயகுமார் சுரேஷ் கடந்த 15 ஆம் திகதி மோட்டார் சைக்கிளுக்குப் பெற்றோல் நிரப்புவதற்காக வீட்டிலிருந்த பெற்றோல் கானைத் எடுத்து வந்துள்ளார். சமையலறையால் வந்தபோது...
Loading posts...
All posts loaded
No more posts
