Ad Widget

தமிழக மக்களுக்கு வட மாகாண சபை ஊடாக உதவலாம்!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவராணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னேடுக்க வடமாகாண சபை இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட மாகாணத்தில் இருந்து எவ்விதமான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பான கலந்துறையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.

வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி உறுப்பினர்கள், வங்கித் துறையினர், வர்த்தக துறையினர், கல்வி சார் துறையினர் கூட்டுறவு சார் துறையினர், மேலும் பல்வேறு துறைசார்ந்தவர்கள், பங்களிப்பையும் பெற்று எதிர்வரும் 21.12.2015 அன்று யாழ் இந்திய உதவித் துணைத்தூதுவரிடம் இவற்றிக்கான நிவராண கொடுப்பனவுகளை கையளிக்கயுள்ளதாக தெரிவித்தார்.

இதற்காக வங்கி கணக்கையும் ஆரம்பிக்க இருக்கின்றோம். மேலும் நிதி செலுத்துபவர்களுக்கு வடமாகாண சபையின் பேரவை செயலகத்தினால் பற்றுசீட்டும் வழங்கப்படும். ஊடகங்கள் வயிலாகவும் எமது கணக்கு இலக்கங்கள் தெரிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று வெளிநாட்டு உறவுகளும் இதற்காக உதவிகளை வழங்க முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts