- Monday
- April 27th, 2026
புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலையின் பின்னர் இவ்வாறான வழக்குகளை விசாரிப்பதற்கென தனியான விசேட நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை நிறுவ முடியாத நிலைமை காணப்படுவதாக மகளிர் – சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்று முன் தினம்...
விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்திருந்த நிலையிலேயே எனது கணவன் படையினரிடம் சரணடைந்தார். என்னைப்போல் பலர் தங்கள் கணவனை, பிள்ளையை ஒப்படைத்தார்கள். இப்போ அவர்கள் காணாமல்போய் விட்டார்கள் என கூறுவதை நாம் ஒத்துக்கொள்ள முடியாது. என்று விடுதலைப் புலிகளின் அரசியல் நிர்வாகத்துறை பொறுப்பாளர் விஜிந்தனின் மனைவி சாட்சியம் அளித்தார். காணாமல்போனவர்களை...
வெள்ளை வானில் வந்த இரணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்ட எனது மகனை தேடி யாழ். ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்திற்குச் சென்றபோது அம்மா அம்மா என்று எனது மகன் உரக்கக் கத்திக் கொண்டிருந்தான். எனினும் அங்கிருந்த இராணுவத்தினர் என்னை மிரட்டி அனுப்பி வைத்துவிட்டனர் என தாயொருவர் சாட்சியமளித்தார். காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்தாம் நாள்...
தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் எவையும் நடைபெறாது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் வடக்கில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் வைத்திருந்த குற்றச்சாட்டை நாம் ஒருபோதும் மறுக்கவில்லை. முன்னைய அரசாங்கம் வடக்கில் பல ஏக்கர் நிலங்களை தமது சொந்த நிலங்களைபோல் பாவித்தனர். அதேபோல்...
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இன்று பாகிஸ்தானுக்கு சொந்தமான சீமெந்து தொழிற்சாலையாக செயற்பட்டு வருகிறது. அத்தொழிற்சாலையின் இரும்புகள் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்து கொள்ளுப்பிட்டியில் 25 மாடி அலுவலகம் அமைக்கப்படுவதாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹத்துன்நெத்தி நேற்று பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின்...
காணாமற்போனோர் தொடர்பில் விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணை செய்யப்படுவார்கள் என காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். ஆணைக்குழுவின் சங்கானை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்டவர்களுக்கான அமர்வு சங்கானை பிரதேச செயலகத்தில் நேற்று (15) நடைபெற்ற போது, ஆணைக்குழுவின் விசாரணையின் முடிவில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காணாமற்போனோரின் உறவினர்கள்...
கொழும்பில் இன்று அதிகாலை ஒன்றரை மணிநேரத்தில் 114.5 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இலங்கையில் வெறுப்புணர்வு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை குற்றமாக அறிவிக்கும் புதிய சட்டத்திருத்த முன்வரைவுகளை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஆனால், இந்த சட்டத்திருத்தத்தை கடும்போக்கு பௌத்தவாத அமைப்பான பொதுபல சேனா எதிர்த்துள்ளது. அதேபோல சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும், அரசாங்கம் அந்த சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும் என்று கோரியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும்...
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கம் மேம்போக்கான நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தினாலும் மாகாண சபைகள் மீது கட்டுப்பாடுகளை விதித்து அதன் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சுமத்தியுள்ளார். வடமாகாண சபையின் 41ஆவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறுகின்றது. இதில் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சபையில்...
புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட, சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஜெயவர்த்தன ராஜ்குமார் என்ற 10ஆவது சந்தேகநபரை இன்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். மாணவியின் கொலை வழக்கு, விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 10ஆவது சந்தேகநபரும் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வித்தியாவின் வீட்டுக்குச் சென்றார், மரணச் சடங்கில் கலந்துகொண்டார் மற்றும்...
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைகளில் ஆள்மாராட்டம் செய்த ஒருவர் பூநகரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற கணித பாடத்திற்கு பரிட்சார்த்திக்கு பதிலாக சந்தேகநபர் பரீட்சை மத்திய நிலையத்திற்கு வந்திருந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கண்காணிப்பாளரினால் பூநகரி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து இவர் கைதாகியுள்ளார். மேலும் இவர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒருவராவார். இவரை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டு ஜனாதிபதியினால் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்துக்கு, மாவை.சேனாதிராஜாவும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு சி.சிறீதரனும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு க.சிவமோகனும், மன்னார் மாவட்டத்துக்கு சாள்ஸ் நிர்மலநாதனும், வவுனியா மாவட்டத்துக்கு செல்வம் அடைக்கலநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு க.சிறீநேசன் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்....
வங்கித்துறையில ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பாதீட்டில் தீர்வு கிடைக்காமை மற்றும் வங்கித்துறைக்கு ஒவ்வாத அழுத்தங்கள் தொடர்பாகவும் இன்று நாடளாவிய ரீதியாக பணிநிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. குறித்த பணிநிறுத்தப் போராட்டத்தில் 8 அரச வங்கிகள் மற்றும் 12 தனியார் வங்கிகளின் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இந்த போராட்டத்தில்...
எனது மாமனாரைத் துப்பாக்கியால் வாய்க்குள் சுட்டுக் கொலை செய்து விட்டு எனது 14 வயது மகளை விடுதலைப்புலிகள் பிடித்துக்கொண்டு சென்றார்கள் எனக் காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தந்தையார் ஒருவர் சாட்சியமளித்துள்ளார். காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 4 ஆம் நாள் அமர்வு யாழ். பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது....
பாடசாலை மாணவர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்துள்ள இலவச சீருடைக்குப் பதிலாகத் தற்போதய அரசு வவுச்சர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய முறைமையைப் பயன்படுத்தி வடக்கில் பல பாடசாலைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுவருவதாக தெரிய வருகிறது எனவே இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின்...
பிஸ்கட் புரையேறியதால் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணம் ,3ஆம் குறுக்குத் தெருப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஐந்து மாதங்களேயான உதயபாலன் காசினி என்ற பெண் குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. வழமைபோல் தாய் குழந்தைகளுக்கு வழங்கும் சத்து நிறைந்த பிஸ்கட் கொடுத்துவிட்டுத் தூங்க வைத்துள்ளார். காலை...
காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான காணாமற்போனோரின் உறவுகள் சாட்சியமளிக்கும் அமர்வு பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் சாட்சியமளித்த சிலரின் சாட்சிகள்.... 'இரத்மலானை இந்து கல்லூரியில் சேர்க்கப்பட்ட மகனைக் காணவில்லை' வவுனியா நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறுவர் நன்னடத்தை அதிகாரியால் இரத்மலானை இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட எனது மகன் அதன்...
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு வருகின்ற காதல் ஜோடிகள், ஆலய வளாகத்தில் உலாவித் திரிவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாக சபையால், இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது, ஆலயத்துக்கு வரும், காதல் ஜோடிகள் தரிசனம் செய்த பின்னர், திரும்பிச் செல்ல வேண்டும். அதனை விடுத்து ஆலய வளாகங்களில் அமர்ந்து பொழுதைப் போக்கக்கூடாது. புனிதமான இந்தப்...
சேட் கிழிக்கப்பட்டு இரத்தக் காயங்களுடன் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் 19 வயதான எனது மகனை இராணுவத்தினர் பிடித்துவைத்திருந்தனர். விட்டுவிடுங்கள் என்று கேட்கப்போன கோயில் பூசாரியாரையும் பூட்ஸ் காலால் தாக்கி ஓட ஓட விரட்டியடித்தனர் இராணுவத்தினர்.'' - இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழு முன் கதறியழுதவாறு சாட்சியம் அளித்தனர் தாயும் தந்தையும். பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று...
"மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் வடக்கு, கிழக்கு விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ளி தன்னிச்சையாக தனிவழியில் செயற்படுகின்றார்'' என்று இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பியுமான மாவை சேனாதிராஜா நேற்றுச் சபையில் குற்றஞ்சாட்டினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
