- Wednesday
- August 5th, 2026
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், இது குறித்து வடக்கு முதல்வரிடம் வினவியபோது, ஆயரின் நலம் குறித்து விசாரிக்கவே அவரைச் சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அண்மையில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த...
அரசியல் கைதிகள் உருவாக கடந்த கால அரசியல் தலைமைகளே காரணம். அரசியல் தலைமைகள் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் அரசியல் கைதிகள் உருவாகி இருக்க மாட்டார்கள் என ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்ட சிவராஜா ஜெனிகன் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்ட சிவராஜா ஜெனிகன், கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி அரசியல் கைதிகளை...
வலிவடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலய எல்லைப் பகுதிகளில் வெடிப்பொருட்கள் இருப்பதற்கான அபாய எச்சரிக்கை காணப்படுவதால் மக்கள் குடியேறுவதில் அச்சம் வெளியிடுகின்றனர். அத்துடன் இராணுவத்தினர் அமைத்திருந்த பதுங்கு குழிகள் மற்றும் மண் மூட்டைகள் அடுக்கப்பட்ட பாதுகாப்பு அரண்கள் போன்றனவும் அகற்றப்படாமல் இருப்பதால் அவற்றிலும் வெடி பொருட்களின் அபாயம் இருக்கலாம் என கருதி...
விஸ்வமடு பகுதியில் இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் முல்லைத்தீவு பதில் நீதவான் பரஞ்சோதியின் அனுமதியோடு இராணுவ வீரரின் சடலம் என சந்தேகித்து அகழ்வு நடைபெற்று வருகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படியே அகழ்வு நடைபெறுவதாக கூறப்படுகிறது. நிட்டம்புவ அல்கம பகுதியைச் சேர்ந்த ஒருவர் இராணுவ சிவில் படைப்பிரிவில் விஸ்வமடுவில் கடமையாற்றி...
வடமாகாண கல்வி அமைச்சின் கீழுள்ள மும்மொழிக் கற்கை நிலையத்தினால் நடாத்தப்படும் இரண்டாம் மொழி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையத்தினால் நடத்தப்படும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் டிப்ளோமா மற்றும் அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன் இரண்டாம் மொழி சித்தியடைய வேண்டிய அரச அலுவலர்கள், மூன்றாம் நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள், பாடசாலையில்...
இன்று காலை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஹிருனிகா பிரேமசந்திர ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தெமட்டகொடை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக...
புதிய அரசியலமைப்பு முறை ஒன்றை உருவாக்குவதற்கான பாராளுமன்ற அரசியலமைப்பு சபை அமைப்பது குறித்த இந்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை ஆரம்பமாகின. இதன்போது அரசியலமைப்பு சபை ஒன்றை உருவாக்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்பித்தார். புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அரசின் கொள்கைகள் மற்றும் பாராளுமன்ற அரசியலமைப்பு சபைக்குறிய உறுப்பினர்கள்...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று சனிக்கிழமை சற்று முன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு ஹெவ்லொக் நகரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவரை தனது டிபன்டர் ரக வாகனத்தில் கடத்தி, துன்புறுத்திய குற்றச்சாட்டுக்காகவே ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைதுசெய்யும்படி கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று...
கடந்த ஒரு வருட காலத்தினுள் நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பது குறித்து கேள்வியெழுப்ப வேண்டியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இக்கேள்வியை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நல்லாட்சி அரசாங்கம் கடந்த ஒருவருட காலத்தினுள் நாட்டுக்காகவும்,...
தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வைத் தரும் சபையாக பாராளுமன்றம் அமையவுள்ளதோடு தீர்வைத்தரும் ஆண்டாக இவ்வருடம் அமைய வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்றைய அரசியல் சூழலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் என்ற விடயங்கள் தொடர்பில் மக்களுடனான கலந்துரையாடலொன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
புகைப்படக் காட்சியில் வைக்கப்பட்டிருந்த தனது புகைப்படத்தினைப் பார்த்து பிரம்மித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 'ஜனாதிபதி அபிமங்கள வருட புகைப்படநினைவுகள்' கண்காட்சி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது. இக் கண்காட்சியை திறந்து வைத்து விட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளுடனான போரில் வென்றிருக்கலாம் ஆனால் போரின்போது மேற்கொண்ட குற்றங்களை மறைக்க முடியாது. இந்த வெற்றியின் மூலம் துப்பாக்கிகள் மௌனமாகிய அதேநேரம் சமாதானப் பேச்சுக்களும் மெளனமாகி விட்டன.இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி. மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஓர் ஆண்டு பூர்த்தி விழா நேற்று கொழும்பில்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நல்லாட்சி அரசு ஏற்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த நல்லாட்சி அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) நேற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது. 'மக்கள் ஆணைக்கு மதிப்பளி' என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்பாட்டம் நேற்றுக் கொழும்பில் நடத்தப்பட்டது. இதில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் பதிவு செய்யப்பட்ட பாலியல் துஷ்பிரயோக சம்பங்களில் சுமார் 93 சதவீதமானவைக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. ருவான் குணசேகர தெரிவித்தார். கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களுக்குள் மட்டும் 1,850 பாலியல் குற்றங்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவற்றுள் 93 சதவீதமானவை அதாவது...
பொது மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு நேரடியாக முன்வைக்கும் வகையில் ´ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்´ என்ற வேலைத் திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த திட்டம்...
வாழ்க்கையில் தான் அதிகமாக சந்தோஷப்பட்ட நாள் எதுவென்று யாராவது என்னிடம் கேட்டால், அது கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம் திகதி அப்போதைய அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய தினமாகும். ஜனநாயக அரச நிவாகத்தின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு நேற்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால...
பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன மற்றும் பிரதான கட்சிகள் என்று இல்லாமல் அனைத்து கட்சிகளையும் எம்முடன் இனைத்துகொண்டு நல்லாட்சியை முன்னெடுப்போம். அனைத்து மக்களும் எம்மோடு இருப்பதால் நல்லாட்சியை ஒரு போதும் கைநழுவ விட மாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த ஆண்டில்...
மின்வழங்கியோடு இணைக்கப்பட்டிருந்த கைப்பேசி சார்ஜரின் வயரை தவறுதலாக வாயில் வைத்தமையால், ஏழு மாத பெண் சிசுவின் உடலில் மின்சாரம் பாய்ந்து பரிதாபகரமாக பலியான சம்பவமொன்று நேற்று பிற்பகல் திவுலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது. மின்சாரம் தாக்கப்பட்ட நிலையில், அச்சிசுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குறித்த சிசுவை காப்பற்ற முடியவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு பலாலி கட்டளை தலைமையகத்தில் சந்தன மரக்கன்று இன்று வெள்ளிக்கிழமை (08) நாட்டப்பட்டது. பிரிகேடியர் டி.எஸ்.வீரமணி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சந்தனமரம் நாட்டப்பட்டதைத் தொடர்ந்து, 1,000 பயன்தரு மரக்கன்றுகளை கட்டளை பணியகத்தின் கீழ் உள்ள இராணுவ வீரர்கள் நாட்டிவைத்தனர்.
08.01.2016 முதல் 25.07.2017ஆம் தேதி வரையிலான ராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன் மற்றும் ராசிப் பலன்களை ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார். மேஷம் எதிலும் முதலிடத்தை பிடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப்...
Loading posts...
All posts loaded
No more posts
