- Friday
- November 21st, 2025
அரசியல் என்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றி விட்டது. எதையும் ஆரஅமரச் சிந்தித்து ஆராய்ந்து அறிவை மேம்படுத்தக் கூடிய ஒரு அவகாசத்தை என்னிடம் இருந்து பறித்தெடுத்து விட்டது என்று வடக்கு மாகாண முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலக மண் தினமான நேற்று காலை 9.30 மணிக்கு யாழ். கிறீன் கிறாஸ் விடுதியில் ஆரம்பாமான “மண்...
"எனது கணவனின் படுகொலையுடன் தொடர்புடைய சூத்திரதாரி இந்தச் சபையில் இருப்பதாகத் தான் நான் கூறினேன்.எனினும் எவரதும் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், எனது கணவனின் பெயரைக் குறிப்பிட்டு அந்தச் சூத்திரதாரி தன்னைத்தானே இனங்காட்டிக் கொண்டார் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றிய...
ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஒரு கொலையாளி. முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன், ஊடகவியலாளர் நிமலராஜன் உள்ளிட்ட பலரின் படுகொலையுடன் தொடர்புடையவர். வடக்கில் 3000 இற்கும் மேற்பட்டோர் காணாமல்போகக் காரணமாக இருந்தவர் என்று நாடாளுமன்றத்தில் பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். நாடாளுமன்றத்தில் நேற்று கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும்...
வரவு - செலவுத் திட்டத்தில் பேக்கரி தொழிற்றுறைக்கு வரி அறவீடு அதிகரித்துள்ளதோடு எதிர்பார்க்கப்பட்ட நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால் எதிர்காலத்தில் பாண் உள்ளிட்ட பேக்கரி தயாரிப்புக்களின் விலை அதிகரிக்கும் சாத்தியமுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உரிமையாளர்களால் 2 சதவீதமாக செலுத்தப்படுகின்ற தேசத்தை கட்டியெழுப்பும் வரியானது 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே...
மீசாலை புத்தூர் வீதியில் இன்று (06) காலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். புத்தூரைச் சேர்ந்த யேசு அன்று (வயது 25), சின்னக்குட்டி உதயராசா (வயது 51) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். திருமணச்சடங்கு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்...
தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கை அகதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. எனவே, இம் மக்களுக்கு உதவ இலங்கை அரசு உரிய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கைவிடுத்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள...
கடந்த சில நாட்களாக வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தற்போது நாட்டினை விட்டு விலகி வருவதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. எனினும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நாட்டின் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, பிற்பகல்...
சென்னையில் மழை வௌ்ளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை விஷேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையால் புத்தகயாவிற்கு வழிபாட்டிற்கு சென்ற 120 இலங்கையர்கள் இவ்வாறு சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை அழைத்து வருவதற்கான விஷேட விமானம் நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் காயா நோக்கி புறப்படவுள்ளதாக இலங்கை விமான சேவைகள்...
புங்குடுதீவு பகுதியில் தனது சொந்த மகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கினார் என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்றைய தினம் சடலமாக மீடகப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளி பகுதியை சேர்ந்த எஸ்.சிவரஞ்சன்(வயது33) என்ற குடும்பஸ்தர் தனது சொந்த மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்...
வளிமண்டலத்தில் நிலவும் குழப்பநிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக பிற்பகலில் மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஒருசில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக கடும் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இடியுடனான மழை பெய்யும் சந்தர்ப்பங்களில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணியூற்று, உற்றங்கரை, புதரிகுடா, சந்திரபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் தொடர்ச்சியான மழையினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். தற்காலிக வீட்டில் வசிப்பவர்களுக்கு தற்காலிக வீடுகள் கொடுத்து மூன்றுவருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் செத்தையால் அடைக்கப்பட்ட தற்காலிக சுவர்மறைப்புகள் கறையான் அரித்து சேதமடைந்துள்ளது. அதுமட்டுமல்ல தமது முயற்சியால் மண்சுவர்களினால் கட்டப்பட்ட வீடுகளின் சுவர்கள் விழுந்து காணப்படுகின்றது. ஏனைய...
அவுஸ்திரேலியாவையொட்டியுள்ள இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால், ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10,000 USA டொலர் நிதியுதவி (6 இலட்சத்து 66 488 இந்தியன் ரூபாய்) வழங்கியுள்ளார் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரரான குமார் சங்ககார. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் சென்னையில் நடந்த IPL ல் குமார் சங்ககார மற்றும் சிங்கள இனத்தவர்கள்...
மழை என்றால் நுளம்பு வரும் தானே' என்று அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியதிகாரி அலட்சியமாக பதிலளித்து, வைத்தியசாலைக்கு சுகாதார வைத்தியதிகாரி பணிமனையால் சிவப்பு அறிவித்தல் ஒட்டவைத்துள்ளார். இது பற்றித் தெரியவருவதாவது, கோப்பாய் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை பொதுச்சுகாதார பரிசோதகர், அச்சுவேலி பொலிஸார், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அச்சுவேலி நகரப் பகுதியில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையில்...
சவூதியில் கல்லால் எறிந்து மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணுக்காக குரல்கொடுத்த சுமந்திரன் எம்.பிக்கு எதிராக முஸ்லிம் அமைச்சர், எம்.பிக்கள் கொதித்தெழுந்ததால் நேற்றுச் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் ஆரம்பித்துவைத்து உரையாற்றினார். தனது...
இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னையில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- "இந்தப் பாரிய இயற்கையின் சீற்றத்தால் தங்களது சொந்தங்களை மற்றும் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்ப...
"ஆயுதம் ஏந்திப் போராடிய புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேர் மஹிந்த ஆட்சியின்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டனர். கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவர் பதவி வழங்கப்பட்டது. இவற்றை நான் தவறு என்று கூறவில்லை. முன்னாள் அரசின் இந்த அணுகுமுறை சரி என்றால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க்...
"செந்தூரனின் தற்கொலையில் சந்தேகம் உள்ளது. எனவே, இது தற்கொலையா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என எழுந்துள்ள சந்தேகத்தைப் போக்கவேண்டும்'' என்று அரசிடம் வலியுறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, வடக்கில் இடம்பெற்ற செயற்பாடுகள் குறித்து அவதானத்துடன் இருக்கவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். தடுப்பிலுள்ள கைதிகள் குறித்து...
12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை கடந்த ஆட்சியில் விடுதலை செய்தது பாரதூரமானதா? அல்லது 38 தமிழ்க் கைதிகளை பிணையில் விடுவித்தமை பாரதூரமானதா? என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர்களின் மீதான வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts



