பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வேண்டும்! -டக்ளஸ்

புதிய அரசியலமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த அரசியல் அமைப்பில், ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களைக் குறைத்தல், தேர்தல் முறைமை மாற்றம், தேசிய இனப் பிரச்சினைக்கானத் தீர்வு அடங்களாக அனைத்து விடயங்களும் உள்ளடங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும்...

சமுதாயத்தை நிர்மூலமாக்கி இளைய தலைமுறையின் சுதந்திர தாகத்தை அடக்க முயற்சி! – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

எமது சமுதாயத்தை நிர்மூலமாக்கினால் தான் எமது இளைய தலைமுறையினருக்கு சுதந்திர எண்ணம் எழாது தடுக்கலாம் என்ற நப்பாசையே சிலரிடம் இருக்கிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தால் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வு யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து...
Ad Widget

ஜெயகுமாரியின் ஆவணங்களை மீள ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, விசாரணைக்கு தேவைப்படாத பொருட்களை அவரிடம் மீளக் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி உள்ளிட்ட 9 சந்தேக நபர்கள் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற நீதவான் அருனி ஆட்டிகல முன்னிலையில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது...

கிளிநொச்சியில் வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்!

கிளிநொச்சியில் தொடர்ந்து பெய்யும் அடையால் அங்கு மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன், சிவபுரம், ஆனந்தபுரம், கனகாம்பிகைகுளம், இரத்தினபுரம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழையினால் நேற்று இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உயர்வான இடங்களிலுள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்கள் கடும் சிரமத்திற்க உள்ளாகியுள்ளதாக அங்கிருந்து...

கிளிநொச்சியில் பரீட்சை எழுதும் மாணவர்கள் மழையினால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பரீட்சை மண்டபங்களிலும் இருள் சூழ்ந்த நிலைமை காணப்படுவதனால் மாணவர்கள் மேலும் சிரமங்களை எதிர்நோக்கினர். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கல்விப் பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கு 3261 பாடசாலை பரீட்சார்த்திகளும், 2286 தனிப்பட்ட...

சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் மன்னார் ஆயர் விரைவில் நாடு திரும்புவார்!

உடல்நலக் குறைவுக்காக சிங்கப்பூருக்குச் சிகிச்சைக்குச் சென்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை விரைவில் நாடு திரும்பவுள்ளார் என மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென சுகவீனமுற்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

இனி ரயில்களில் டிக்கட் இன்றி பயணித்தால்…?

ரயில்களில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 5000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்படுவதோடு, கட்டணம் இரு மடங்காக வசூலிக்கப்படும் எனவும், போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை தற்போது ரயிலில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக வடக்கு, கிழக்கு காணமால் போனவர்களின் உறவழனர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்றய தினம் முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல்...

3 சந்தேகநபர்கள் இன்றி ரவிராஜ் வழக்கு விசாரணை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை மூன்று பிரதிவாதிகள் இல்லாது விசாரணை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அரச தரப்பு வழக்கறிஞர் வழங்கிய தகவல்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பிரணாந்து இந்த அனுமதியை வழங்கியுள்ளார். நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் அறுவருக்கு...

ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க மாட்டோம்

யாழில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் முன்பாக தாங்கள் சாட்சியமளிக்க மாட்டோம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண குடும்ப உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த காணாமற்போனோரின் உறவினர்கள், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08)...

​யாழ் சிறைச்சாலையில் உள்ள அரசியல்கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டம்!!

யாழ்ப்பாண சிறைச்சாலையில் உள்ள அரசியல்கைதியான சிவராஜா ஜெனீவன் நேற்று மாலையில் இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டுபயங்கரவாததடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இவருடைய வழக்கு 2009 ஆம் ஆண்டில் இருந்து பொலநறுவை மற்றும் யாழ்ப்பாண மேல் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகின்றது. மகசின் சிறைச்சாலையில் இருந்து வரும்...

இன்றும் இடியுடன் கூடிய மழை

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மற்றைய பகுதிகளில் இன்று மதியம் 2 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருட்களுக்கான விலைக் குறைப்பு சலுகையை வடக்கு மக்களும் அனுபவிக்க ஏற்பாடுகள் தேவை! – டக்ளஸ்

அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் நிலையில், இதன் பயனை வடக்கு மக்களும் அனுபவிக்கக் கூடிய ஏற்பாடுகள் அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிதி அமைச்சருக்கு அறிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட ஏனைய...

பாடசாலை மாணவர்கள் சீருடைகளைப் பெற்றுக் கொள்ளும் வர்த்தக நிலையங்களின் விபரங்கள்

யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலை மாணவர்கள் கூப்பன் அடிப்படையிலான சீருடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அபி றேடர்ஸ் - இல-112,கே.கே.எஸ்.வீதி .யாழ்ப்பாணம். சிறி கணேஷ் புடவையகம் - இல-20 ,நவீன சந்தை, யாழ்ப்பாணம் ஆறுமுகம் ரெக்ஸ்ரைல்ஸ் - இல-20,பெரிய கடை.யாழ்ப்பாணம். சென்னை பசன் வேல்ட்  - இல-63 ,பெரிய...

தமிழக மக்களுக்கு உதவும் வட மாகாணசபையின் ஆர்வத்துக்கு இந்தியத் துணைத்தூதுவர் நன்றி!

தமிழக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு இதுவரை அயல் நாடுகளிடம் இந்தியா உதவி கோரவில்லையென யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட மாகாண சபை உதவ முன்வந்தபோது, அதனை இந்தியா நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதன் உண்மைத் தன்மை குறித்து இந்திய துணைத்...

அரச பாடநூல்களை இணையத்தில் பெறுவதற்கான இணைப்பு

அரச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் இதுவரையில் பாடநூல்களை பெற்றுக் கொள்ளாத பாடசாலை மாணவர்கள் பாடநூல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். பொருத்தமான மொழியை தெரிவு செய்து பின்பு தரத்தை தெரிவு செய்து குறித்த பாடநூல்களை பெறமுடியும். http://www.edupub.gov.lk/BooksDownload.php

வெள்ள அனர்த்த முன்னேற்பாடுகள் செய்யப்படவுள்ளன

'யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்யும் போது ஏற்படும் வெள்ளப் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் வகையில் நீண்டகால பயனுடைய அனர்த்த தவிர்ப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படும்' என யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்...

முல்லைத்தீவில் படையினர் வசமாக 13,487 ஏக்கர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம், 13 ஆயிரத்து 487 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல், படையினர் வசமுள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உள்ள நிலங்களில், காணி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பொதுக்காணிகளாக, 12 ஆயிரத்து 785 ஏக்கர் காணிகளும், உறுதிக்காணிகளாக 702 ஏக்கர் காணிகளும் படையினர் வசமுள்ளதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. அத்தோடு, 1983ஆம் ஆண்டு...

வடக்கில் மீள்குடியேற்றத்தை ஆராய அதிகாரிகள் மட்டத்திலான குழு – ஜனாதிபதி

வடக்கில் மீள்குடியேற்றத்துக்காக அதிகாரிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் காடழிப்பதற்கு கடந்த ஆட்சியின்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். இது பற்றி ஆராய்வதற்காக இன்னும் ஒரு வாரகாலத்துக்குள் வடக்குக்கு அதிகாரிகள் மட்டத்திலான குழுவொன்று அனுப்பிவைக்கப்படும் என்றும், அவர்களின் அறிக்கை கிடைத்த பின்னர் மீள்குடியேற்றம் தொடர்பில் நடடிவக்கை எடுக்கப்படும்...

சாதாரண தர பரீட்சை : கைத்தொலைபேசிகள் எடுத்துச் செல்ல தடை

2015ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. இன்று காலை 08.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதோடு, மாணவர்களை 08.00 மணிக்கே பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. அத்துடன் மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு கைத்தொலைபேசிகள், குறிப்புகள் மற்றும் எந்தவொரு உதவி பொருட்களையும் எடுத்துச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக...
Loading posts...

All posts loaded

No more posts