- Saturday
- November 22nd, 2025
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை உடனடியாகவே விடுவிக்கப்படவேண்டுமென யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. குறித்த பயிற்சிக் கலாசாலை தற்காலிகமாக இயங்குவதற்கு வேறு இடத்தில் இடஒழுங்குகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற தீர்மானமும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர்...
இலங்கை உட்பட 55 நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட மாஸ் சொக்லெட்டுகளை மீளப்பெறுவதற்கு மார்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அண்மைக்காலமாக மார்ஸ் சொக்லெட் தொடர்பில் நுகர்வோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரபல சொக்கலேட் தயாரிப்பு நிறுவனமான மார்ஸ் தனது இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளுக்கு விற்பனை செய்த, மில்லியன் கணக்கான மாஸ் மற்றும்...
கிளிநொச்சி வலய தொண்டர் ஆசிரியர் விபரம் வெளியாகியுள்ள நிலையில், விடுபட்டவர்களை உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள். கிளிநொச்சி கல்வி வலய நிரந்தர நியமனத்திற்கான தொண்டர் ஆசிரியர் பெயர்ப் பட்டியலில் விடுபட்டவர்களது பெயர் விபரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த பதிவு நடவடிக்கை கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தில் காலை 9 மணி தொடக்கம்...
குறைபாடான 13ஆவது தீர்வுத் திட்டத்தினைப் பெற்றுத் தந்த இந்தியா எமக்கு குறைபாடு அற்ற ஓர் சமஸ்டித் தீர்வினையும் பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையினை வடமாகாண முதலமைச்சர் இந்தியாவை கோரியுள்ளார். தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார நாள் நிகழ்வு நேற்றைய தினம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கிறீன் கிறாஸ் விடுதியில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து...
நீதிபதிகள் மற்றும் சட்டவுரைஞர்களின் சுயாதீனம் பற்றிய விசேட அறிக்கையாளர் மோனிக்கா பின்ரோவும் சித்திரவதை மற்றும் கீழ்த்தரமான தண்டனைகளுக்கான விசேட அறிக்கையாளரான யுவான் மென்டெஸூம் ஏப்ரல் 29ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர். இவர்கள், மே மாதம் 7ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர். நீதிபதிகள் மற்றும் சட்டவுரைஞர் சுயாதீனம் பற்றிய விசேட அறிக்கையாளர், நீதித் துறையின் பக்கச்சார்பின்மை மற்றும்...
'யுத்தத்தால் இடம்பெயர்ந்து மண்கும்பான் தமிழ் மகா வித்தியாலயத்தில் தஞ்சமடைந்திருந்த குடும்பங்களில் இருந்து இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட 65 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளில் ஒருவர் கூட இதுவரை வீடு திரும்பவில்லை' என இந்தச் சம்பவத்தில் தனது இரண்டு மகன்களை பறிகொடுத்த தந்தை ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்தார். காணாமற்போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி...
நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்துவைத்திருக்கும் தம்மை விடுதலைசெய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கொழும்பு, மகஸின் சிறைச்சாலையின் 14 தமிழ் அரசியல் கைதிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வடைந்த நிலையிலும் இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தைத் தொடர்கின்றனர். இந்தக் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மகஸின் சிறைச்சாலையிலுள்ள ஏனைய 75 தமிழ் அரசியல் கைதிகளும் இன்று திங்கட்கிழமை ஒரு நாள்...
யாழ்.தீவக பகுதிகளில் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்ப்பட்டு மண்டைதீவுப் பகுதியில் உள்ள 3 கிணறுகளில் போடப்பட்டிருக்கலாம். ஒரு கிணறு தோண்டப்பட்டபோது 85 மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டன மற்றைய கிணறுகளை தோண்டுவதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டது. அவற்றையும் தோண்டுங்கள் பல உன்மைகள் தெரியும். மேற்கண்டவாறு காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வேலுப்பிள்ளை பேரின்பநாயம் என்பவர்...
தீவகத்தில் பல இளைஞர், யுவதிகள் காணாமற் போனமைக்கு கடற்படையினரும் ஈ.பி.டிபியினருமே காரணம் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் காணாமற்போனோரின் உறவினர்கள் பலரும் ஆதாரங்களுடன் தமது சாட்சியங்களைப் பதிவு செய்தனர். காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் வேலணை பிரதேச செயலகத்தில் நேற்று நடந்தன. இதில் சாட்சியமளிப்பதற்காக 193 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு...
ஐநா மனித உரிமை பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர் இன்று (29) ஆரம்பமாகிறது. எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன் ஆரம்பித்து வைப்பதுடன் உரையாற்றவுமுள்ளார். இவ்வுரையில் இலங்கை விஜயத்தின் போது பெற்ற அனுபவங்கள் தொடர்பிலும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
யாழ் நகரப் பகுதியில் இளைஞனுக்கும் பொலிசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது அத்துடன் பொது இடத்தில் குறித்த இளைஞன் பொலிசாரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன் வீதியால் சென்ற பலர் பார்வையிட்டுள்ளதுடன் பின்னர் குறித்த இளைஞரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்…
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால், அதனை ஏற்க மறுத்த பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நல்லூர் பகுதியில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் தரம் 11 ல் கல்வி கற்கும் நல்லூரைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். நேற்று மாலையில் வீட்டில் யாரும் அற்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை...
ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கையாழியான் இயற்கை எய்தினார். ஈழத்து மூத்த எழுத்தாளரும், யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவனுமாகிய செங்கையாழியான் எனும் புனைபெயரால் அறியப்படும் கந்தையா குணராசா சுகவீனம் காரணமாக இயற்கை எய்தினார். இவர் பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும்...
வவுனியா, தரணிக்குளம் பகுதியில், வீட்டில் தனிமையில் இருந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய இருவரை சனிக்கிழமை (27) வவுனியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சிறுமியின் தாய் வேலைக்கென வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ளதாகவும் இவர்களது குடும்பத்தில் மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளதாகவும் தந்தை கூலி வேலை செய்பவர்; எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சம்பவ தினம் சிறுமியின் தந்தை,...
எதிர்வரும் காலத்தில் அரசாங்கம் தன்னைக் கைதுசெய்யலாம் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறு சென்றால் நாமல் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, விமல் வீரவங்க, ரோஹித அபேகுணவர்த்தன, குமார வெல்கம ஆகியோரைக் கைதுசெய்த பின், இறுதியாக தான் கைதுசெய்யப்படலாம் என, அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (28) தலதா மாளிகைக்கு சென்ற அவர்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த மாநாடு நேற்று 27-02-2016 சனிக்கிழமை யாழ் நல்லூர் சட்டநாதர் சிவன்கோவில் வீதியில் அமைந்துள்ள இளம் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமான மேற்படி நிகழ்வு துசாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. முதலாவது நிகழ்வாக தமிழ்த் தேசிய மக்கள்...
வவுனியா, தரணிக்குளம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 5 வயது சிறுமி ஒருவர் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் பூரண ஒத்துழைப்புடனேயே பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளமைக்கு சாட்சியங்கள் கிடைத்துள்ளன எனவும், அந்தக் கோணத்தில் புலன் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் வட்டாரங்கள்...
"காயமடைந்த நிலையில் மக்களுடன் வந்த எனது கணவரை வவுனியா வைத்தியசாலையில் வைத்து இராணுவத்தினரால் பிடித்துச் சென்றதைக் கண்டபோதும் தற்போது அவர் இல்லை என மறுக்கின்றனர். எனது கணவரை வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் தடுத்துவைத்துள்ளனர் என நான் கருதுகின்றேன். எனவே, எனது கணவரை மீட்டுத்தாருங்கள்" - இவ்வாறு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் உள்ளகப் புலனாய்வுப் பொறுப்பாளராக...
'இராணுவத்தினருடன் வந்த ஈ.பி.டி.பியினர் கடத்திச் சென்ற எனது மகனை கடற்படையின் சீருடையுடன் எனது உறவினர்கள் பலரும் கண்டுள்ளனர்.' இவ்வாறு காணாமல் போன நபரான நீர்வேலி வடக்கைச் சேர்ந்த அச்சுதன் வைகுந்தன் என்பவரின் தாயார் அருந்ததி காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி...
Loading posts...
All posts loaded
No more posts
