- Saturday
- November 22nd, 2025
அரச உத்தியோகத்தர்களை ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை மீளாய்வு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சுக்கள், திணைக்களங்கள், மற்றும் பிரதேச செயலகங்களில் காணப்படுகின்ற கடமைகள் மற்றும் பொருத்தமான விடய அறிவு மற்றும் தேர்ச்சி என்பன இந்த உத்தியோகத்தர்களிடத்தில் இல்லாதபடியினால் எதிர்பார்க்கப்படுகின்ற பெறுபேறுகளை அடைந்து கொள்வதில் பிரச்சினைகள் தோன்றியுள்ளதையடுத்தே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த முன்மொழிவிற்கு அமைச்சரவை...
யாழ் மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்து 491 அங்கவீனர்கள் உள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 10 பேருக்கு மட்டும் மத்திய அரசினால் மாதாந்தம் மூவாயிரம் ரூபா நிதி உதவி வழங்கப்படுகிறது. ஏனையோருக்கும் இதே கொடுப்பனவை வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்ட போது அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில்...
இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் பறங்கியர் இனத்தின் அடையாளமும் தனித்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் சாசனம் ஒன்றை இயற்றுவது தொடர்பிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரச குழுவினர் கிழக்கு மாகாணத்தில் தமது அமர்வைகளை நடத்தியபோது, பறங்கியர் சமூகத்தினர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். சிறுபான்மையினரிலும் சிறுபான்மையினராக இருக்கும் பறங்கியர் போன்றவர்களின் அபிலாஷைகள்,...
யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவி நேற்று பிற்பகல் இனந்தெரியாத இளைஞர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ் பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற இத் தாக்குதலில் மாணவி அப்பகுதியில் டெனிம் மற்றும் ரீசேட்டுடன் சென்று கொண்டிருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது. மாணவி பொலிசாருக்கு தெரிவித்ததை அடுத்து உடனடியாக அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டு...
பிறப்பிலே முள்ளந்தண்டு வளைந்திருந்த பாடசாலை மாணவனை சத்திர சிகிச்சையின் மூலம் மீண்டும் சாதாரண நிலைமைக்கு கொண்டு வந்து சாதனை புரிந்துள்ளனர் இலங்கை மருத்துவர்கள். காலி கரம்பிடிய வைத்தியச்சாலையிலே இந்த சத்திரசிகிச்சை மேல்கொள்ளபட்டுள்ளது. இரண்டு கட்டமாக நடந்த இந்த சத்திரசிகிச்சையின் பின் குறிந்த மாணவனுக்கு வழங்கப்பட்ட விஷேட மருத்துவ உடையின் உதவியுடன் நிமிர்ந்து சாதாரண மனிதர்களை போல்...
அண்மையில் இலங்கை மக்களை மன ரீதியாக பெரிதும் பாதித்த வவுனியா சிறுமியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் விசாரணையின் போது ஒப்புக்கொண்டதாக அங்கிருந்து வரும் சில தகவல்களில் தெரிய வருகிறது. எனினும் குறித்த செய்தி தொடர்பான உண்மைத்தன்மையை அறியமுடியவில்லை. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட 13 வயது...
வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழ்கின்ற மக்கள் தங்களைச் சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடாத்துவதெனத் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று முற்பகல்-11 மணியிலிருந்து பிற்பகல் 12.30 மணி வரை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமின் மகாதேவன் பொதுமண்டபத்தில் நலன்புரி நிலையங்களின் பொது நிர்வாகக் குழுத்தலைவர் எஸ். அன்ரனிக் குயின் தலைமையில்...
இலங்கையில் இயங்கி வரும் செய்தி இணையத்தளங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஊடக அமைச்சில் செய்தி இணையத்தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக செய்தி இணையத்தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டுமென நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சு சகல செய்தி இணையத்தளங்களுக்கும்...
ஒரு சேவையில் இணைந்தால் அதிலே எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஏனோதானோ என இருந்து ஓய்வுபெறுவதைத் தவிர்த்து, எமது வடமாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும்' என்ற நோக்குடன் முன்னேற்றகரமாக செயற்படுங்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் இணையத்தள அங்குரார்ப்பணம் நேற்று வெள்ளிக்கிழமை (26) யாழ்ப்பாணம் மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றபோது, இணையத்தளத்தை...
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெற்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை கொல்ல கோட்டாபய ராஜபக்ஷவால் 5 கோடி ரூபா கருணா குழுவுக்குக் கூலியாக வழங்கப்பட்டதாக புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரி லியனாச்சி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் அவர் நேற்று இதனைக் குறிப்பிட்டார். இந்த கொலை கடந்த அரசாங்கத்தின் சூழ்ச்சித்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு...
காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று தொடக்கம் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை யாழ் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. கடந்த வருடம் மார்கழி மாதம் இவ் அமர்வுகளின் இரண்டாம் கட்ட விசாரணைகள் இடம்பெற்றிருந்த நிலையில் அதன்போது யாழ் மாவட்டத்தில் இடம்பெறாத பிரதேச செயலக பிரிவுகளில் இவ் அமர்வுகள் இடம்பெறவுள்ளது. அந்தவகையில்...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றய தினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை எமது நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருந்து வந்துள்ள தேயிலை ஏற்றுமதித் தொழில்துறையை தமது தோள்களில் சுமந்து வந்துள்ள தொழிலாளர்களின் வாழ்வு இன்னும் இருளுக்குள்ளேயே இருந்து வருகின்றது. வெள்ளைக் காரர்கள் ஏற்படுத்திய லயன் குடியிருப்புக்களே இன்னும் அவர்களின்...
மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையான நேரத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அநாவசியமான மின் உபகரணங்களை பயன்படுத்துவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை பொது மக்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீள செயற்படுத்தும் வரையே இதனை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாவலராக கடமையாற்றிய மேஜர் நெவில் வண்ணியாரச்சியின் மனைவிக்கு சொந்தமானது எனக் கூறப்படும் காணியில் பாதுகாப்பு தரப்பினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தெரிவிக்கையில், தனது மனைவியின் தந்தையுடைய உடல் புதைக்கப்பட்டுள்ள வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் உள்ள கல்லறைக்கு அருகில் இவ்வாறு அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். நேற்று...
வடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்கள் படிப்படியாக குறைக்கப்படும் என்ற உறுதிமொழியை வடமாகாணத்திற்காக புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ரெஜினோல்ட் குரே வழங்கியுள்ளார். கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூஜை வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்படி உறுதிமொழியை வழங்கினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்கள் மற்றும்...
மன்னார் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடிப் படகொன்றின் மீது, மற்றுமொரு படகில் வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டதால், அப்படகில் இருந்த மூன்று மீனவர்களில் ஒருவர், கடலில் குதித்து சுமார் 10 கிலோமீற்றர் தூரம் நீந்தி கரை சேர்ந்துள்ளார். ஏனைய இருவரும் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தின் போது, மேற்படி மீனவர்கள் மூவர்...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை (26) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். மாநகர ஆணையாளர் பொன்னம்பலம் வாகீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் jaffna.mc.gov.lk என்ற மாநகர இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. பொதுமக்கள் குறைகேள், பொதுமக்கள் ஆலோசனைகள் ஆகியவற்றை பதிவிடக்கூடிய வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாநகர...
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடலிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனக் கூறி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் என்பன இன்று வெள்ளிக்கிழமை (26) நடைபெற்றது. வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர்கள் ஒன்றியத்தின் பிரதான ஏற்பாட்டிலும், வடமராட்சி அபிவிருத்தி ஒன்றியம், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேவை ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பொதுமக்கள் சந்தித்து தமது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி புதன்கிழமை முதல் இது நடைமுறைக்கு வருகின்றது. வடமாகாணத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் இன மற்றும் மத பேதமின்றி ஆளுனரைச்...
Loading posts...
All posts loaded
No more posts
