புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தியது யாழ். பல்கலைக்கழகம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தாடி வளர்த்தல் மற்றும் மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் புடவை அணிதல் ஆகிய கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் விரும்பினால் மாத்திரம் அவற்றைப் பின்பற்றலாம் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, இன்று வெள்ளிக்க்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வருவதாக, கலைப் பீடாதிபதி...

கீரிமலையில் இருந்து இராணுவத்தினர் வெளியேற தீர்மானம்!

கீரிமலையில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அப்பகுதி முகாமை கைவிட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர். இன்று மாலைக்குள் கீரிமலை இராணுவ முகாம் முற்றாக கைவிடப்படவுள்ளது. அதன் பின்னர் இராணுவத்தினர் கீரிமலையை அண்டிய பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த நிர்மாணித்துள்ள அதிசொகுசு மாளிகையை இராணுவ முகாமாகப் பயன்படுத்தவுள்ளனர். ஜனாதிபதி பதவியில் இருப்பவர்கள் வடக்கிற்கு விஜயம் செய்யும் போது ஓய்வு எடுப்பதற்காக இந்த...
Ad Widget

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய ஆடைக் கட்டுப்பாட்டு அறிவித்தலால் சர்ச்சை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள், ‘கலாசாரத்தை’ பேணும் வகையில் உடை அணிந்து வரவேண்டும் என்று விடுக்கப்பட்ட அறிவித்தல் மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்கள் முகச்சவரம் (கிளீன் ஷேவ்) செய்திருக்க வேண்டும், ரீசேட் அணியக் கூடாது, மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் சேலை அணிந்து வரவேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் கலைப்பீட அறிவித்தல் பலகைகளின் ஊடாக தெரிவிக்கப்பட்டதாக மாணவர்கள்...

பணம் வசூலிக்க மல்லாவி சென்ற யாழ் இளைஞர் கொலை?

கரவெட்டியை சேர்ந்த 25 வயதான துரைசிங்கம் உதயநிலவன் என்பவர் மர்மமான முறையில் மரணமாகியுள்ளார். கிளிநொச்சி 155ம் கட்டைப் பகுதியில் உள்ள லீசிங் கம்பனி ஒன்றில் பணியாற்றும் உதயநிலவன் நேற்றுக் காலை மாதாந்த பணத்தை பெறுவதற்காக மல்லாவி சென்றுள்ளார். பணத்தை வசூலிக்கச் சென்ற போது அவர் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை...

நான்காவது நாளாக அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்! – மூவர் வைத்தியசாலையில்

நீண்டகாலமாக விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளினால் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரத போராட்டம் நேற்று நான்காவது நாளாகவும் தொடர்ந்தது. மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்த மூன்று கைதிகள் நேற்று சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கொழும்பு மகசின் சிறைச்சாலையில் நீண்டக்காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பெண் கைதி உட்பட 14 அரசியல் கைதிகளும் அனுராதபுரம் சிறைச்சாலையில்...

யாழ். பல்கலையில் ஆர்ப்பாட்டம்

வவுனியா உக்குளாங்குளத்தில் 14 வயது மாணவி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று வியாழக்கிழமை (25) மேற்கொள்ளப்பட்டது. 'கைகட்டி வேடிக்கை பார்க்க, நாம் ஒன்றும் கையாலாகாதவர்கள் அல்ல', 'சிறை என்ன குற்றவாளிகளின் பாதுகாப்பு கூடமா?' ஆகிய வாசகங்களை தாங்கியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்...

வடமாகாண சபையில் குழப்பம்

வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு கோரி, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொண்டு வந்த பிரேரணையால் வடமாகாண சபையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை (25) தாமதமாக ஆரம்பமாகியது. இதன்போது, 8 உறுப்பினர்களின்...

மனைவியை கோடரியால் கொத்திக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை!

கோடரியால் மனைவியைக் கழுத்து தலை என்பவற்றில் கொத்திக் காயப்படுத்தி கொலை செய்த கணவன் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று வியாழக்கிழமை மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். பெண்கள், சிறுமிகள் மீதான கொலை வெறி தாக்கதல்கள், காட்டு மிராண்டித்தனமான பாலியல் வல்லுறவுக் கொலைகள் இடம்பெறுகின்ற ஒரு சூழலில், அந்த அநியாயங்களுக்கு உரிய நீதி...

மாணவி ஹரிஸ்ணவியின் கொலை தொடர்பில் ஒருவர் கைது!

வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட வவுனியா, உக்ககிளாங்குளத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் அயல் வீட்டில் வசித்து வந்தவரான பாலசிங்கம் ஜனர்தன் என்ற குடும்பஸ்தரே விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தினார். கைது செய்யப்பட்ட...

மின்னல்தாக்கமே மின் தடைக்குக் காரணமாம்!

இலங்கை முழுவதும் நேற்று பிற்பகல் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இயல்வு வாழ்க்கையில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டது. லக்‌ஷபான நீர் மின்னிலையத்திலிருந்து பொல்பிட்டிய உப மின்நிலையத்தினூடாக கொழும்புக்கு மின்வழங்கும் 33,000 வோல்ட் மின் தொகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இம்மின்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்...

சரத் பொன்சேகா பிரதேச அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சர்!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதேச அபிவிருத்தி தொடர்பான அமைச்சரவை அமைச்சராக நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் மற்றும் சரத் பொன்சேகா அவர்களின் குடும்பத்தினர் ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் பவுடரால் கான்சர்!

அமெரிக்காவில் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் பவுடர் பாவித்த பெண் அண்மையில் கருப்பை புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இதனால் இவரது குடும்பத்துக்கு 72 மில்லின் அமெரிக்க டொல் நஸ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்த ஜக்குலின் (62) என்பவர் கடந்த 35 வருடங்களாக ஜோன்சன் அன்ட் ஜோன்சன் பவுடரையும், ஷவர் டூ ஷவர்...

யோசித்த உள்ளிட்ட ஐவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, யோசித்த ராஜபக்ஷ மற்றும் நால்வரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவர்களை, ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாஜூடின் மரணத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய உத்தரவு!

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதேவேளை, வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பான விசாரணைகளின் போது கைப்பற்றப்பட்ட சிசிடீவி கெமரா பதிவுகளை வௌிநாட்டுக்கு அனுப்பி பரிசோதனை செய்யும் விடயம் தொடர்பில்,...

நன்றி தெரிவிக்கின்றார் வட மாகாண போக்குவரத்து அமைச்சர்

நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலிற்கு தங்களது பூரண ஆதரவை வழங்கிய தனியார் பேருந்துஉரிமையாளர்கள் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் விசேட நன்றிகளை தெரிவித்து நிற்கின்றார். மேலும் இந்த விடயங்கள் இத்தோடு மறக்கப்பட்டுவிடாது தொடர் நடவடிக்கைகளாக மேற்கொள்ள வேண்டும் என்றும், எல்லோரும் இந்த விடயத்தில் தொடர்ச்சியாக...

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் இன்றும் தொடர்கிறது : சிலரது உடல்நிலை மோசம்!!

பொதுமன்னிப்பு அளித்து தங்களை விடுதலை செய்யுமாறு கோரி மூன்றாவது முறையாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் போராட்டத்தை தொடச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பு – மெகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 14 பேர் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 22ஆம் திகதி முதல் ஈடுபட்டு வருகின்றனர். இந்த...

இலங்கை மீனவர்கள் 9 பேர் கைது !!

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாகபட்டினம் – கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு இடையில் இந்த மீனவர்கள் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் இவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் இந்திய கடற்படையினர் கைப்பற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 9 மீனவர்களும்...

புலித் தலைவர்களில் ஒருவர் இரு வாரங்களில் ஆஜராவார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான எமில் காந்தன், இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றில் ஆஜராவாரென, அவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கூறியதையடுத்து, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம், அவர் மீதான சிவப்பு அறிவித்தல்களையும் பிடிவிறாந்துகளையும் மீளப்பெற்றுக்கொண்டது. எமில் காந்தனுக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளதால், கொழும்பு விசேட நீதிமன்றில்...

 யாழ். பல்கலையில் மாணவர்கள் தாடி வளர்க்கத் தடை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, நாளை 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமரன், நேற்று புதன்கிழமை (24) அறிவித்துள்ளார். 'யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையினால், புதிய ஆடை ஒழுங்கு விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆண் கல்விசார் ஊழியர்கள் மற்றும் ஆண் மாணவர்கள், விரிவுரை மண்டபங்களுக்கு டெனிம்...

இலங்கையில் தமிழ் பிக்குகள் 11 பேர் உள்ளனர்

இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் 22,254 பேர் உள்ளனர். அதில், 11 பேர் தமிழ் பிக்குகளாவர் என்று, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஆற்றுப்படுத்தப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பௌத்தர்கள், தமிழ் பிக்குமார்களின் உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய கேள்வியொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேற்றைய நேரத்தின் போது கேட்டிருந்தார். இக்கேள்விகான...
Loading posts...

All posts loaded

No more posts