- Saturday
- November 22nd, 2025
"புதிய அரசமைப்பினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பணிகளை குழப்பவோ, தாமதப்படுத்தவோ கூடாது'' என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற அரசமைப்புப் பேரவையாக நாடாளுமன்றத்தை மாற்றுவதற்கான சட்டமூலம் மீதான விவாதத்தில் சர்ச்சை ஏற்பட்டபோதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். விவாதத்தில் உரையாற்றிய...
மனித உரிமைகள் தொடர்பான வாக்குறுதிகளை இலங்கை அரசு செயற்படுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. குற்றச் செயல்களுக்குப் பொறுப்பு கூறுதல் தொடர்பில் இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகள் செயன்முறைப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அது தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ள நிலையில்...
வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13 வயது மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு நீதிகேட்டும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான வன்புனர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் நடவடிக்கைக்கு, இன, மத, மொழி பேதங்களை கடந்து முழுமையாக ஓத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வன்முறைக்கு எதிரான சமூக அமைப்பு சார்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...
இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் எம்.ஓ.எச்.டி. தார் சயிட் பாயிட் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று புதன்கிழமை சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கூட இருந்தனர்.
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீக்கு, அரசு ஒரு குட்டி யானையை பரிசாக அளிக்க முடிவு செய்திருப்பதை வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் விமர்சித்திருக்கிறார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் நடந்த ஒரு விழாவில் ஜோன் கீயிடம் இந்த யானைக்கான உரிமப் பத்திரத்தை வழங்கினார். இந்த நடவடிக்கையை விமர்சித்த வன விலங்கு ஆர்வலர்கள்...
யாழ். மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியே பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள படைத்தரப்பினர், மற்றும் பொலிஸார் அக்காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகிறது. இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸாரின் ஆக்கிரமிப்பில் உள்ள சுமார் 60 வீதமான காணிகளே இவ்வாறு நிரந்தரமாகச் சுவிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டச்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய கொழும்பு நீதவானால் இன்று புதன்கிழமை (24) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாணவி ஹரிஸ்ணவி படுகொலையைக் கண்டித்தும் அவரின் மரணத்துக்கு நீதி கேட்டும் விடுக்கப்பட்ட ஹர்த்தாலால் வடக்கு மாகாணம் இன்று புதன்கிழமை ஸ்தம்பித்தது. வவுனியாவில் கடந்த 16 ஆம் திகதி மாணவி ஹரிஸ்ணவி வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டார். இவரின் படுகொலையைக் கண்டித்தும் அவருக்கு நீதி வேண்டியும் இன்று புதன்கிழமை வடக்கு மாகாணம் எங்கும் ஹர்த்தாலுக்கு அழைப்பு...
பனை அபிவிருத்தி சபையினால் இது வரைக்கும் நிர்வகிக்கப்பட்டு வந்த திக்கம் வடிசாலையை மீண்டும் வடமராட்சி கூட்டுறவு சங்கத்தின் கொத்தணிக்கு மீண்டும் பாரப்படுத்துவதாக நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தில் கூடிய அமைச்சரவையின் பொருளாதார உபகுழு தெரிவித்துள்ளது. ஊழியர்கள், மற்றும் கூட்டுறவு சங்கத்தினர் கடந்த 13ஆம் திகதி நெல்லியடியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைச் சந்தித்து இதற்கான விண்ணப்பத்தை செய்திருந்தனர்....
வவுனியாவை சேர்ந்த 14 வயது சிறுமி க.ஹரிஸ்ணவி பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி வட மாகாணத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேநேரம் யாழ்.பல்கலை சமூகத்தால் முன்னெடுக்கப்படவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த...
கடந்த 16.02.2016 அன்று வவுனியாவில் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹரிஷ்ணவி என்ற மாணவிக்கு நடந்த கொடூர சம்பவத்தை கண்டித்து இன்றைய தினம் 24.02.2016 வட மாகாணத்தில் நடைபெற இருக்கும் ஹர்த்தாலை பூரணமாக அனுஸ்ரிக்குமாறு பொது மக்களை கேட்டு நிற்கின்றார் வட மாகாண போக்குவரத்துக்கு அமைச்சர் பா. டெனிஸ்வரன். மேலும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், கடந்த...
வவுனியாவில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவிக்கு நீதி வேண்டி இன்று புதன்கிழமை வடக்கு மாகாணம் முழுவதும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்ட்டுள்ளது. வவுனியா பிரஜைகள் குழுவின் அழைப்பின் பேரில் இடம்பெறும் இந்த ஹர்த்தாலுக்கு பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் பலவும் தமது ஆதரவை தெரிவித்துள்ளன. யாழ். வணிகர் கழகம், இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட சில...
மகஸின் சிறையில் 15 அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்! அநுராதபுர சிறையில் இருவரின் போராட்டமும் தொடர்கிறது!!
கொழும்பு, மகஸின் சிறைச்சாலையின் 'ஜே' பிரிவில் உள்ள 14 ஆண் தமிழ் அரசியல் கைதிகளும், பெண்கள் பிரிவிலுள்ள ஒரு பெண் தமிழ் அரசியல் கைதியுமாக 15 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி நேற்றுக் காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், நடேஸ் குகநாதன், மு.சிவநாதன், மா. நீதிநாதன், க.வேதநாயகம்,...
வவுனியாவில் மாணவி ஹரிஷ்ணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்த குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசமைப்பு பேரவையை நியமிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே...
சாமாதானத்திற்கான செய்தி என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் 9வது தேசிய சாரணர் ஜம்பொறியை முன்னிட்டு சாரணர்களுக்கான விசேட கணட்காட்சியொன்றும் இடம்பெறுகின்றது. இலங்கை சாரணர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 9வது தேசிய சாரணர் ஜம்பொறியானது உள்நாட்டுவெளிநாட்டு சாரணர்ககள் 10.000 பேரின் பங்குபற்றலுடன் மாசி மாதம் 20 திகதி முதல் 26 வரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது. இதற்கு இணைவாக...
கோப்பாய், நீர்வேலி பகுதியில் கடந்த 20ஆம் திகதி அதிகாலை, ஏழு வீடுகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு சந்தேக நபர்களை இன்று கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கோண்டாவில், திருநெல்வேலி மற்றும் உரும்பிராய் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சனிக்கிழமை (20) அதிகாலை வேளையில், கூரிய ஆயுதங்களுடன்...
வடமராட்சி, மணற்காட்டு, சவுக்குக் காட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (23) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வல்லிபுரம் ஆழ்வார் ஆலய சமுத்திரத் தீர்த்தம் இடம்பெறும் பகுதியிலுள்ள சவுக்குக் காட்டிலே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெருமளவான மணற் பாங்கான பிரதேசமாக இருப்பதால் தீயணைப்பு வாகனத்தையோ பிற வாகனத்தையோ கொண்டு சென்று தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து...
கடந்த 16 ஆம் திகதி வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவிக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் நாளைய தினம் (24) ஹர்த்தால் அனுஷ்டிக்க கோரப்பட்டுள்ளது. யாழ் திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபார நடவடிக்கை அனைத்தையும் முற்றாக நிறுத்தி ஹார்த்தால் இடம்பெற வேண்டும் என கோரிய துண்டு பிரசுரங்கள் இன்று திருநெல்வேலி சந்தையில் ஒட்டப்பட்டுள்ளன....
வவுனியாவில் அண்மையில் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவியின் கொலையை கண்டித்து வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டடோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டம் வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரை பேரணியாக கோஷங்களையும் பதாதைகளையும் ஏந்தியவாறு சென்றிருந்தது....
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வழமைக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டதாக மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.வழக்கத்தை விடவும் 4பாகை செல்சியல் அதிகமாக வெப்பநிலை காணப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வழமையை விடவும் அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம், மட்டக்களப்பு, குருநாகல், மகாஇலுப்பல்லம, புத்தளம், இரத்மலான, வவுனியா ஆகிய பகுதிகளில் வழமையை...
Loading posts...
All posts loaded
No more posts
