Ad Widget

அரசின் மீது எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

இலங்கையில் நடந்த போரின் போது, காணாமல் போன மற்றும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க கடந்த அரசும் புதிய அரசும் தவறிவிட்டன என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

போரின் போது காணாமல்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான விவாதம், ​நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வேளையே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பில் முந்தைய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவிடம், பொதுக்களிடமிருந்து 17,379 முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சம்பந்தன், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக் குழு தவறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Related Posts