காக்கைதீவு கடற்கரையில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு

யாழ் காக்கைதீவு கடற்கரைப்பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ் விசேட பொஸிசார் தெரிவிக்கின்றனர்.

கடற்கரைப் பகுதியில் மீனவர்கள் தொழிலுக்கு சென்று கொண்டிருந்து போது நேற்று மாலை 04.00 மணியளவில் இக் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொஸிசார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணையினை பொஸிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இக் கைக்குண்டு வெடிக்கப்படாத நிலையில் காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Related Posts