- Saturday
- November 22nd, 2025
யாழ். போதனா வைத்தியசாலையானது பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் குறிப்பாக தாதியர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. வைத்தியசாலையின் சேவையை மேம்படுத்தி அதன் தரத்தை உயர்த்த பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்த ஆண்டு வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வழங்கும் 6 மாடிக் கட்டடத் தொகுதி அமைக்கும் வேலைகள் சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மேல்...
கிளிநொச்சி மாவட்டத்தில் மின்சாரம் பெறுவதற்காக, மின்சார சபையின் கடன் திட்டத்துக்குள் மாட்டிக்கொள்ள வேண்டாம் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் இணைத்தலைவர்களில் ஒருவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். பூநகரி பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (02) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பூநகரிப் பிரதேச செயலர்...
'சில மாதங்களுக்கு முன்னர் ஒருசில அமைச்சர்களும் அரசியல்வாதிகளும், தமிழ் அரசியல் கைதிகள் - புனர்வாழ்வுக்குச் செல்ல விரும்பவில்லை என்று ஜனாதிபதியிடம் கருத்துப்படத் தெரிவித்திருந்தனர். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. நாங்கள் எப்பொழுதும் புனர்வாழ்வுக்குத் தயாராக இருக்கின்றோம். போராட்டத்தில் சம்பந்தப்படாத ஒருசிலர் மாத்திரம், தமக்கு புனர்வாழ்வு தேவையில்லை என்றும் தாம் விடுதலை செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்....
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கத் தவறின் ஏற்படப்போகும் அனர்த்தத்துக்கு, ஜனாதிபதி தொடக்கம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரும் பதில் கூற வேண்டிவரும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர், விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு, கடந்த...
தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்க முடியாது எனவும், அவர்களின் விடுதலை குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. ஆனால், அரசியல் கைதிகள் குறித்து சட்டமா அதிபரின் அறிக்கையை தாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், குறித்த அறிக்கையின் பிரகாரமே...
யாழ். மாநகர சபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் நிரந்தர நியமனம் வழங்க கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். மாநகர சபையின் முன்பாக நேற்று வியாழக்கிழமை காலை முதல் நண்பகல் வரை இந்த ஆர்ப்பாட்டத்தினை இவர்கள் முன்னெடுத்தனர். யாழ்.மாநகர சபையின் கீழ் 180 பேர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக சுகாதார ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றார்கள்....
பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் வலது காலில் செய்ய வேண்டிய சத்திரசிகிச்சையை இடது காலில் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், சுகாதார அமைச்சு விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபாலவின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிலிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி...
தண்ணீர் போத்தலில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் சுன்னாகம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோண்டாவிலைச் சேர்ந்த இளைஞரொருவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாருக்கு அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 19 லீற்றர் நீர் கொள்ளளவுடைய குடிநீர்ப் போத்தலை சுன்னாகம் நகரிலுள்ள மருந்தகமொன்றில் கொள்வனவு செய்திருந்தார். இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட குடிநீர்ப் போத்தலிற்குள் இறந்த கரப்பான் பூச்சி...
வடக்கில் புதிதாக திருமணபந்தத்தில் இணையும் ஐந்து ஜோடிகளுள் நான்கு ஜோடிகளுக்கு குழந்தைப்பாக்கியம் இல்லாமல் போகின்றதாக தென் மாகாண ஆளுநரான கலாநிதி ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் இரசாயன உரங்களின் பாவனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வடமத்திய மாகாணத்தில் மட்டுமே காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு என நாடளாவிய...
பலாலி விமான நிலைய அபிவிருத்தியை நிறுத்துமாறு கேட்கவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களை மீளக்குடியமர்த்திய பின்னர் அபிவிருத்திகளைமுன்னெடுக்குமாறே தான் கோரிக்கை விடுத்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். “யாழ். குடாநாட்டில் பலாலியை அண்டிய பகுதியே விவசாயத்துக்கு அவசியமான செம்பாட்டு மண்ணைக் கொண்ட செழிப்பான பிரதேசமாகும். இங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீள் குடியமர்த்தப்படவேண்டும். அவர்களின் மீள்குடியேற்றத்தின் பின்னர்...
இணுவில் பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவரும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது, மயக்கமருந்து தெளித்து அவர்களின் 8 அலைபேசிகள், 2 துவிச்சக்கரவண்டிகள் மற்றும் 8 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியன திருடப்பட்ட சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மலையகத்தைச் சேர்ந்த 13 மாணவர்கள், யாழ்ப்பாணப்...
பருத்தித்துறை கடற்பரப்புக்குள் 20க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள், அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த தென்னிலங்கை மீனவர்களின் படகுகளை சேதமாக்கியதுடன் வலைகளையும் அறுத்து, 600 கிலோகிராம் நிறையுடைய மீன்களை எடுத்துச்சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் முறைப்பாடு செய்ததாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, செவ்வாய்க்கிழமை (01) இரவு திருகோணமலை பகுதியிலிருந்து வந்த...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் உணவு வழங்கலும் விநியோகமும் சுற்றாடலும் கூட்டுறவும் அமைச்சர் பி. ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக, முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. வடமாகாண சபை உறுப்பினர்களே, நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. வடமாகாண...
கடந்த வருடம் நடந்த ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்துப் பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு: கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் நாடளாவிய ரீதியில் நடந்த ஜீ.சி.ஈ சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 6...
திருமணம் செய்வதாகக் கூறி காதலித்து யுவதி ஒருவரை ஏமாற்றிய இளைஞருக்கு 2 வருடங்களுக்கு ஒத்திவைத்த 7 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்ததுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிட்டார் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன். கடந்த 2015 ஆம் ஆண்டு தென்மராட்சி வரணி, இடைக்குறிச்சியை சேர்ந்த...
யாழ் மாவட்டத்தின் கல்வி நிலையை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பான் அரசாங்கம் பல்வேறு நிதி உதவிகளை வழங்க தயாராகவுள்ளது என ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்தார். நேற்று (02) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் கெனிச்சி சுகனுமா வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரேவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். வடமாகாணத்தின் அபிவிருத்தி...
கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் சுமார் 300 மில்லியன் ரூபா செலவில் பாரிய உணவுக் களஞ்சியமொன்று அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பபாளர் அ.கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்டத்தில் இபாட் திட்டத்தின் கீழ் மூன்று நெற்களஞ்சியங்கள் அமைக்கப்படவுள்ளன. கிளிநொச்சி அறிவியல்...
அரச முகாமைத்துவ இணைந்த சேவைக்கு மேலும் 1286 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கான நியமனக்கடிதத்தினை பொது நிர்வாக முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வழங்கி வைத்தார். அரச முகாமைத்துவ சேவையில் அரச துறையின் ஏழு பிரிவுகள் ஒன்றிணைக்கப்பட்டு அதிலுள்ள வெற்றிடங்களுக்கு மேற்படி 1286 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தோடு கடந்த ஒரு வருடத்தில் அரச சேவைக்கு...
இலங்கையில் இயங்கும் சகல செய்தி இணையதளங்களும் இம்மாதம் 31-ம் திகதிக்கு முன்னதாக ஊடக அமைச்சில் பதிவுசெய்துகொள்ளப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஊடக தர்மங்களுக்கும் தராதரங்களுக்கும் உட்பட்டவகையில் செய்தி இணையதளங்கள் தடையின்றி இயங்குவதற்கு இந்த பதிவு அவசியம் என்று நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் கீழ்...
கோண்டாவிலைச் சேர்ந்த இளைஞரொருவர் சுகவீனமுற்றிருந்த தனது தாயாருக்கு 19 லீற்றர் நீர் கொள்ளளவுடைய தண்ணீர்ப் போத்தலைக் கொள்வனவு செய்துள்ள நிலையில் அப் போத்தலிற்குள் இறந்த நிலையில் கரப்பான் பூச்சியொன்று காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து கோண்டாவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து குறித்த தண்ணீர்ப் போத்தல் கோண்டாவில் சுகாதார வைத்திய...
Loading posts...
All posts loaded
No more posts
