மோட்டார் சைக்கிள் குழு அட்டகாசம்! வாள்வெட்டில் சிறுவன் படுகாயம்!!

யாழ். நகருக்கு அண்மையாக தட்டார் தெரு சந்திக்கு அண்மையில் பாடசாலை சிறுவனை 12 பேர் கொண்ட குழு வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

நேற்று மதியமளவில் 8 மோட்டார் சைக்கிள்களில் வந்தோரே. மரக்காலையில் நண்பர்களுடன் நின்ற சிறுவனை வெட்டிக் காயப்படுத்தியது.

இதில் க.ஹேமராஜன் (வயது 17) என்பவரே காயமடைந்தவராவார்.

குறித்த சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அயலவர்கள் அப்பகுதியில் கூடியதையடுத்து மோட்டார்சைக்கிள் ஒன்றையும் கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related Posts