- Saturday
- November 22nd, 2025
கைதடி - நாவற்குழிப் பாலத்தில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதனால் பயணிப்போர் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விரைவாக குறித்த பாலத்தை சீர்செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ்.மாவட்டப் பிரதான பொறியியலாளர் வி.சுதாகர் தெரிவித்தார். கைதடி - நாவற்குழிப் பாலம், கடந்த 2000ஆம் ஆண்டு போர் நடவடிக்கை காரணமாக அழிக்கப்பட்டது....
மகேஸ்வரி நிதியத்தால் தங்களுக்கு வழங்க வேண்டிய 10 மில்லியன் ரூபாய் பணம் இன்னமும் தராமல் இழுத்தடிக்கப்படுவதைக் கண்டித்து யாழ்.மாவட்ட பாரவூர்திகள் உரிமையாளர் சங்கத்தால் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகேஸ்வரி நிதியத்துக்கு மணல் ஏற்றியிறக்குவதற்காக பாரவூர்தி உரிமையாளர்கள் வழங்கிய 5,000 ரூபாய் அங்கத்துவ வைப்புப் பணம் மற்றும் ஒவ்வொரு முறையும் மணல் ஏற்றியிறக்கும்...
மருத்துவ தேவைகளுக்காக ஆளுநர் நிதிய நிதியுதவி வழங்கும் வைபவம் வட மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தலைமையில் நேற்று (01) யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது மருத்துவ தேவைகளுக்காக 76 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இதன்போது பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மற்றும் மாகாண செயலாளர்கள் அரசாங்க அதிபர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
நீண்டகாலமாக இலங்கையின் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான வெகுசன அமைப்பின் எற்பாட்டில் கவனீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று யாழ் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. நீண்டகாலமாக விசாரணைகளின்றி மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 14...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தொடர்புபட்டவர்கள் என குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும், நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒருவர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மற்றையவரை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் விடுவித்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தில் புங்குடுதீவைச் சேர்ந்த இந்த இருவரும்...
செங்கை ஆழியான் என அறியப்பட்ட பிரபல எழுத்தாளர் கலாநிதி கந்தையா குணராசாவின் இறுதிக்கிரியைகள் இன்று காலை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக அவரது உடல் கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அன்னாரின் பூதவூடலுக்கு அரச அதிகாரிகள், கல்விமான்கள் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பெருமளவான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
'இராணுவச் சுற்றிவளைப்பின் போது ஒரு மகனையும், இந்தியாவுக்குச் சென்ற இன்னொரு மகனையும் இழந்து வருந்துகின்றேன்' என தச்சந்தோப்பைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற தாயார் கூறினார். காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவில் காணாமற் போனவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு, பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை...
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலுள்ள 88 ஏக்கர் காணிகளையும் சுவீகரிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்து வருவதாக கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் தெரிவித்தார். கண்டாவளை பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டம், தர்மபுரம் நெசவுச்சாலை மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் நேற்று செவ்வாய்க்கிழமை (01)...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில், வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புச் சொல்வதற்கு அனுமதிக்கமாட்டேன் என காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாவகச்சேரி அமர்வு பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது. அமர்வு முடிவடைந்தப் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துக் தெரிவிக்கையிலேயே...
நீண்டகாலமாக விசாரணைகளின்றி மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி இன்று ஒன்பதாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறான நிலையில் அவர்களின் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையிலும் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது....
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரை சகோதரர்களும் உறவினருமாக வாள்கள் கத்தி சகிதம் சென்று குத்திக் கொலை செய்த வழக்கில் எதிரிக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபா தண்டமும் விதித்துள்ளார். தண்டப் பணம் செலுத்தத் தவறினால் ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்...
உடல்நல மேம்பாட்டு வாரத்தினை முன்னிட்டு முதியோருக்கான உடற்பயிற்சி நிகழ்வு நேற்று முன்தினம்(29) யாழ் மாவட்டச்செயலகத்துக்கு எதிரே உள்ள பழைய பூங்காவில் காலை 9.30 மணி தொடக்கம் காலை 11 மணிவரை நடைபெற்றது. முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் யாழ் மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த உடற்பயிற்சி நிகழ்வில் யாழ் மாவட்ட மட்ட மற்றும் பிரதேச...
யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் பணிபுரியும் இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். தனது துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு இவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த அவர் யாழ் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், குறித்த இராணுவச் சிப்பாய் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதான...
ஐ.நா. அமைப்பின் இன்னர் சிட்டி பிரேஸ் என்ற இணையத்தின் சர்வதேச ஊடகவியாளர் மாத்தியூ லீ ஐ.நா அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமையை கண்டித்து இன்று யாழ் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. காணாமல் போனோரின்...
கீரிமலை, வலித்தூண்டல் பகுதியில் அமைந்துள்ள சென்.ஆன்ஸ் தேவாலயத்தின் 4 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக, நிலஅளவை செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட நிலஅளவையாளர் பி.சிவநந்தன் அறிவித்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே - 222 கிராமஅலுவலர் பிரிவிலுள்ள காணியே இவ்வாறு நிலஅளவை செய்யப்படவுள்ளது....
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி காணொளிக் காட்சி மூலம் விசாரணை நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு அரசு தரப்பு சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராக ஏற்பாடுகள் செய்யவேண்டும் என நீதிபதி எம்.சாந்தி, உத்தரவு கடிதம் அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...
யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள செம்மணி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. இதனைக் கருத்தில் கொண்ட நல்லூர் பிரதேச சபை மற்றும் மாநகர சபை ஆகியன செம்மணி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு தடை விதித்தன. தற்போது அங்கு விசேட கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு, அவ்விடத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது....
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் கடந்த 20ம் திகதி அதிகாலை வேளையில் குறுகிய நேரத்திற்கள் ஏழு வீடுகளில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதானது, குடாநாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டிய நிலையை மீண்டும் உருவாக்கியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இவ் விடயம்...
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மேலும் 2 சந்தேகநபர்களை கொழும்பிலிருந்த வந்த குற்றப்புலனாய்வு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுடன், தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம்...
Loading posts...
All posts loaded
No more posts
