Ad Widget

தேசிய மட்ட அறிவிப்பாளர் போட்டியில் கிளிநொச்சி மாணவன் முதலிடம்!

தேசிய மட்டத்தில் இடம்பெற்ற சிறந்த அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போட்டியில் கிளிநொச்சி மாணவன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். பாராளுமன்ற அனுசரணையுடன் ஊடகத் துறையினரால், நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சிறந்த அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சித்திட்டம், கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெற்றது.

sangeeth-kili-anoncer

ஒவ்வொரு மாவட்டத்திலும் 38 போட்டியாளர்களை ஊடகத்துறையினர் தெரிவு செய்து, கொழும்பு இளைஞர் பாராளுமன்றத்திற்கு குரல் பதிவினை பதிவு செய்து அனுப்பியிருந்தார்கள். அதனையடுத்து 1ம், 2ம், 3ம் போன்ற இடங்கள் தீர்மானிக்கப்பதற்காக இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து நடுவர்கள் வருகை தந்து வெற்றியாளர்களை தீர்மானித்திருந்தார்கள்.

அப்போட்டியில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவன் உமாசங்கர் சங்கீத் நாடளாவிய ரீதியில் முதலாவது சிறந்த அறிவிப்பாளராக தெரிவாகியுள்ளார். இது தொடர்பாக உமாசங்கர் சங்கீத் தெரிவிக்கையில், நடுவர்களின் மத்தியில் தீர்மானிக்கப்பட்ட குரல் தேர்வில் தகுதியும் குரலிற்கான அடிப்படை பண்புகளோடு நடத்தப்பட்ட அந்த தெரிவில் பாடசாலை ரீதியில் வயதுக்கட்டுப்பாடின்றி நடத்தப்பட்டது.

வளர்ச்சி பெற்ற நகரங்களில் உள்ள மாணவர்களின் தொனியினை விட, வட பகுதியில் உள்ள மாணவனாகிய நான் அகில இலங்கை தமிழ் மாணவர்களில் இத் தேர்வில் முதல் மாணவனாக தேர்வு செய்யப்பட்டதை இட்டு பெரும் மகிழ்வடைகிறேன். நான் முதலில் இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும் எனது கல்லூரிக்கும் என் சார் எனை வளர்த்தெடுத்து ஊக்குவித்த ஆசான்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மற்றும் என்னுடன் இந்த வாய்ப்பினில் இணைந்து கொண்ட நண்பர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் வழங்கப்பட்ட சான்றிதழ் கிடைக்கப் பெற்றது.இதையிட்டு நான் பெரும்மகிழ்வடைகிறேன். நான் அநேகமான போட்டிகளில் பங்கெடுப்பது மிக மிக குறைவு. ஆனால் நான் எனது முதல் பயணத்திலே இந்த நிலையை எட்டியதையடுத்து மிகவும் மகிழ்வடைகிறேன். நான் எனக்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை தக்க வைத்துக்கொள்கிறேன். அதற்காக நான் முழு மூச்சாக எப்பொழுதும் செயற்படுவேன்.

இந்த தமிழ் உலகிலே தமிழிற்கான உச்சரிப்பு அந்த தொனிக்கென அப்துல் ஹமீத் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார். அவரளவில் இல்லா விட்டாலும் அவரைப்போன்று வருவதற்காக முயற்சிப்பேன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்காலத்தில் உயர்வடைய எனக்கு கடவுள் தந்த வாய்ப்பினையிட்டு உவகையடைகின்றேன் என தெரிவித்தார்.

Related Posts