கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்த மருத்துவ பீட மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
சிங்கள மாணவர்களால், சித்த மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 9 தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு தகுந்த நீதி கிடைக்கும் வரை வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக வளாக முதல்வருக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் மாணவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சித்த மருத்துவ துறையில் கல்வி கற்கும் 21 மாணவர்களும் இவ்வாறு வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும், தொடர்ச்சியாக தமக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பாக முறையான விசாரணை செய்து தமக்கான நீதி கிடைக்கும் வரை இந்த பகிஷ்கரிப்பு தொடரும் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.