கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், பாணின் விலை அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 7 ரூபாய் 20 சதத்தால் நேற்று அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக 1 இறாத்தல் பாணின் விலை 4 ரூபாயால் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இருந்த போதிலும் மார்ச் 14ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியை வாடிக்கையாளர் வாரமாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அனுஷ்டிப்பதால் பாணின் புதிய விலை அடுத்த வாரமே அமலுக்கு வரும் என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் கட்டாயமாக பாணின் விலையும் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.