நீண்டநேரமாக படுத்துக்கொண்டு அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த இளைஞனொருவர் உயிரிழந்த சம்பவம், ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை (12) நண்பகல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிஸ்புல்லாஹ் நகர்-மிச்நகர் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் மலிக் பௌமி (வயது 18) என்ற இளைஞன், கட்டிலில் படுத்துக் கொண்டு மிக நீண்டநேரமாக அலைபேசியில் கதைத்துக்கொண்டிருந்துள்ளார்.
எனினும் சிறுதுநேரத்தின் பின்னர், குறித்த இளைஞன் எந்தவொரு அசைவும் இன்றி கட்டிலில் கிடந்துள்ளார். இதனை கவனித்த குடும்பத்தவர்கள், இளைஞனை தட்டி எழுப்பி போதும் குறித்த இளைஞம் எழும்பவில்லை.
இதன்பின்னர், இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் ஒரு இருதய நோயாளி என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர். சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.
பொலிஸார் இச்சம்பவம் தொடர்புடைய மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.