- Saturday
- November 22nd, 2025
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்களின் பெயர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கெட் காப்பாளர் றிஷாந் ரியூடர் மற்றும், முதல்வரிசை துடுப்பாட்ட வீரரான எஸ்.சஞ்சீவன் ஆகியோரின் பெயரே தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய அணியை தயார்படுத்தும் நோக்கத்தில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் போட்டித் தொடரிலும்,...
ரயில் கடவைகள் இல்லாத இடங்களில் ஏதாவது விபத்துக்கள் ஏற்பட்ட பின்னர்தான் அதனைப் பற்றிப் பேசுகின்றோம். இதனைத் தடுப்பதற்கு பாதுகாப்புக் கடவைகள் அமைக்குமாறு ரயில்வே திணைக்களத்துக்குப் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அண்மையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ரயில்வே திணைக்களம் தொடர்பான விடயம்...
சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் தேடியுள்ள ஈழத்தமிழர்கள் விரைவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டிருப்பதாக சுவிஸ் அகதிகள் சபையை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் இடம்பெற்றுவரும் நல்லிணக்க மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளார். இதனையடுத்தே சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தமது நாட்டில் புகலிடம்...
யாழ்ப்பாணத்திலிருந்து மாவிட்டபுரம் வரையில் இடம்பெற்று வந்த 769 ஆம் இலக்க பஸ் சேவையானது, நேற்று வெள்ளிக்கிழமை (04) முதல் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய முன்றல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. கீரிமலை நகுலேஸ்வரத்தின் திருவிழா கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இனிவரும் நாட்களில் ஆலயத்தின் முக்கிய திருவிழாக்கள் நடைபெறவுள்ளமையால், ஆலயத்துக்கு...
“பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றி யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு விமான சேவையை நடத்த தீர்மானித்துள்ளோம். இதனை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை” என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் வீடுகள் இல்லாத 65 ஆயிரம் பேருக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின்...
நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுவிக்க அரசு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரி கொழும்பு, மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது என்று அவர்களின் உறவுகள் தெரிவித்தனர். உண்ணாவிரதக் கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளபோதிலும் இது தொடர்பில் அரசு தரப்பு பாராமுகமாகவே இருக்கின்றமை தமக்கு...
இலகு ரக விமானங்களைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது மொரட்டுவை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு. இந்தக் குழுவினால் ஆளில்லா இலகு ரக விமானங்கள் நான்கு தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களைப் பயன்படுத்தி நாட்டில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களை கண்டறியவும், வானிலை பற்றிய தகவல்களை அறியவும் விவசாய பயிர்ச் செய்கைகளின் சேதம் குறித்த ஆய்வுளை செய்ய இந்த விமானங்களைப் பயன்படுத்த...
இன்று கல்விமான்களினதும் புத்திஜீவிகளினதும் பொறுப்பு, சம்பளம் மற்றும் சிறப்புரிமைகள் போதாது எனக்கூறி நாட்டை விட்டு வெளியேறுதலன்றி எதிர்கால சந்ததியினருக்காக அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதற்காக நாட்டை பொறுப்பேற்றலாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (04) முற்பகல் கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள பௌத்த நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அரச சேவை பொறியியல் சங்கத்தின்...
சித்திரைப் புது வருடத்திற்குள் வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யாவிடின், வெள்ளைக் கொடியுடன் வலி வடக்கிற்குள் அத்துமீறி நுழைவோம் என வலிவடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய மக்கள் சூளுரைத்துள்ளனர். வலி.வடக்கு நலன்புரி நிலைய பொது நிர்வாக அமைப்பினரின் ஏற்பாட்டில், யாழ். சபாபதிபிள்ளை மற்றும் கண்ணகி நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத...
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் இந்து மத விவகார அமைச்சினால் 65,000 வீடுகளை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிர்மானிப்பதற்கான அங்குராப்பண நிகழ்வு நேற்று கோப்பாய் பிரதேச செயலகத்தின் செல்வபுர கிராமத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் இந்து மத விவகார அமைச்சர்...
இலங்கையில் வருடமொன்றிற்கு சுமார் 2,500 பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிப்புக்குள்ளாவதாகவும் இதில் 500 இற்கும் அதிக பெண்கள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்று நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார். மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனை குணப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள் என குற்றப்புலனாய்வு பிரிவினர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது இதன்போது, இதுவரை நடைபெற்ற விசாரணை அறிக்கையை கொழும்பு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கூட்டு கொள்ளை...
யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கான ஆடை ஒழுங்கு விதிகள், எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கலைப்பீட மாணவர்கள் ஒன்றிய நிர்வாகத்தின் கலந்துரையாடலொன்று, நேற்று வியாழக்கிழமை (03) இடம்பெற்ற போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், பெண்கள் சேலை அணிய வேண்டும் எனவும் ஆண்...
உயர்பாதுகாப்பு வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வலிகாமப் பகுதி மக்களின் காணிகளை விமானநிலைய விஸ்தரிப்புக்காக அபகரிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தும் முகமாகவும், தம்மை தமது நிலங்களில் குடியமர்த்தல் தொடர்பாகவும் 32 நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். அந்தவகையில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) கண்ணகி நலன்புரி நிலையத்தில் வாழும்...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் சுவிஸ்குமார் உட்பட ஆறு பேரினை கொலைக்குற்றவாளிகள் என குறித்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வரும் புலனாய்வு துறை அறிவித்துள்ளது. இன்று காலை மேற்படி வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதவான் ரியால் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே புலனாய்வு துறை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. குறித்த கொலைக்கு சுவிஸ்குமார் திட்டமிட்டார் எனவும், இரண்டாம்...
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் III ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது – வயது கட்டுப்பாடும் திருத்தப்பட்டுள்ளது. இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழிற் சங்கத்தினால் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் செய்த வேண்டுகோளுக்கு அமைய கல்வி நிர்வாக சேவையின் III ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு...
யாழில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் மோடார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் காலை வேலைக்கு செல்வதற்காக அராலி வடக்கில் பஸ்சிற்கு காத்திருந்து விட்டு, வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் கையடக்க தொலைபேசியில் மோட்டார் சைக்கிளில் கதைத்துக் கொண்டு வந்த இளைஞன் ஒருவன் குறித்த நபரை மோதிவிட்டு சென்றுள்ளான்....
திருகோணமலை சம்பூரில் கல்லில் கட்டப்பட்ட நிலையில் சிறுவனொருவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சிறுவன் தான் குற்றமிழைக்கவில்லை என நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார். இந்த கொலையுடன் ஏனைய இருவருக்கு தொடர்புள்ளதாகவும், அவர்களே குற்றத்தை ஒப்புக் கொள்ள கூறியதாகவும் சந்தேகபரான சிறுவன் நீதவானிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சம்பவம் தொடர்பான வழங்கு விசாரணை மூதூர்...
நெல்லியடி- நாவலர்மடம் பகுதியில் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டிக்குள் மோட்டார் சைக்கிள் உட்புகுந்தது. இந்த விபத்தில் இரு சாரதிகளும் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் பணியாற்றிய விமானப் பணிப்பெண் ஒருவருக்கு, விமானத்தில் பயணிப்பதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணியாற்றிய, விமானப் பணிப் பெண் ஒருவர் ஜனாதிபதி காரியாலத்தில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார். இந்தப் விமானப் பணிப்பெண்ணுக்கு, விமானப் பயணங்களின் போது அதற்காக வழங்கப்படும் 15...
Loading posts...
All posts loaded
No more posts
