பட்டதாரி போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

வடமத்திய மாகாணப் பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞானம் கணிதம் ஆங்கிலம் சங்கீதம் (கீழைத்தேய) நாட்டியம், சிற்பம், சித்திரம், தகவல் தொழில்நுட்பம், றோமன் கத்தோலிக்க ஆரம்ப மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு காணப்படும் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வடமத்திய மாகாணத்தில் மூன்று வருடங்களுக்கு குறையாத நிரந்தர வதிவிடத்தையும், 18 வயதிற்கும் 35...

இன்று மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். அவ்வகையில் இன்று (07) திங்கட்கிழமை உலகளாவிய ரீதியிலுள்ள அனைத்து இந்து மக்களாலும் பக்தி பூர்வமாக சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும்...
Ad Widget

மாகாண சபையை வினைத்திறனாக செயற்படுத்த மாதாந்தம் கலந்துரையாடல்

வடக்கு மாகாண சபையை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு மாதாந்தம் உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடி முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுடன் கடந்த சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சுமார் 6 மணித்தியாலயங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக...

காதலர்களை விரட்டிய பாதுகாப்பு ஊழியர்கள் – நிறுவனத்துக்கு சிக்கல்

சுதந்திர சதுக்கத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த, அரசசார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு கலாச்சார அமைச்சுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அண்மையில் சுதந்திர சதுக்கத்தில் காதலர்கள் இருவர் அமர்ந்திருந்தபோது, பாதுகாப்பு கடமைகளில் இருந்தவர்கள் அவர்களை வௌியேற்றியுள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவின. இதனையடுத்து, அமைதியான முறையில் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்தே...

ETCA உடன்படிக்கைக்கான எதிர்ப்பு குறித்து சின்ஹா ஆச்சரியம்

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் மேற்கொள்ளப்படவுள்ள எட்கா (ETCA) உடன்படிக்கை தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிரணியினர் வௌியிடும் எதிர்ப்பு தொடர்பாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா ஆச்சரியம் வெளியிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வர்த்தக சேவை...

(வீடியோ) மின்கம்பத்தில் ஏறி சாவு-தமிழ்நாட்டு அகதி முகாமில் அதிர்ச்சி சம்பவம்

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை, டொயோட்டா ஷொ ரூம் பின்புறமுள்ள உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி ராஜேந்திரன் என்பவர் , முகாமிற்குள் சோதனையிட்டபோது முகாமில் இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த இலங்கை தமிழர் ரவி என்பவரின் பெயரை அகதி முகாம் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார். மருத்துவமனையில் பேரனை சிகிச்சைக்கு...

உண்ணாவிரத போராட்டத்தினைக் கைவிடுமாறு கூட்டமைப்பு அரசியல் கைதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்கட்சித்  தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற முக்கிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினைத்  தொடர்ந்தே தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளது. இது  தொடர்பில் தமிழ்த்  தேசியக்  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்துத்  தெரிவிக்கையில், 'இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல்...

போலி பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

பளை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் என தன்னை அடையாளப்படத்திக்கொண்டு, வரணி பகுதியை சேர்ந்த பெண்ணிடம் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்ற நபரை, எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டார். அத்துடன், அன்றையதினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரை...

தொடர்கின்றன துப்பாக்கிச்சூடுகள்! – வெலிக்கடை சிறை முன் கர்ப்பிணிப் பெண்ணும் இலக்கு!!

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 03.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரை பார்ப்பதற்காக வந்திருந்த பெண் ஒருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ள பெண் தற்போது...

கைதான இந்தியர்களின் உடல் உறுப்புக்கள் நீக்கப்பட்டுள்ளனவா என ஆராய உத்தரவு!

சில நாள்களுக்கு முன்னர் கொழும்பு நகரில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்களின் உடல் உறுப்புக்கள் ஏதும் நீக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. கொழும்பு, வெள்ளவத்தை மற்றும் ஹவ்லொக் வீதி ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சிலரைக் பொலிஸார் சில நாட்களுக்கு முன்பாகக் கைதுசெய்தனர்....

சூளைமேட்டுச் சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை!

தமிழ் நாட்டின் சூளைமேட்டில் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை சூளைமேட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான சென்னை செசன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து வீடியோ கொன்பரன்ஸிங் மூலமாக சாட்சியமளித்துவிட்டு வருகை...

சுவிச்சர்லாந்தில் இருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அனுப்ப எதிர்ப்பு

சுவிச்சர்லாந்தில் உள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கான சரியான தருணம் இதுவல்ல என்று சுவிட்சர்லாந்தில் உள்ள சில அரச சார்பற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சுவிச்சர்லாந்திற்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்திருந்தார். மீண்டும் நாட்டிற்கு திரும்பி நாட்டின் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஒத்துழைக்குமாறும்,...

இலங்கையிலிருந்து பாதுகாப்பு பணியாளர்களை எதிர்பார்க்கிறது மலேசியா

இலங்கையர்களை பாதுகாப்பு காவலர் பதவிகளில் இணைத்துக்கொள்ள மலேசியா அரசு தீர்மானித்துள்ளது. மலேசியாவில், இதுவரை காலமும் பாதுகாப்பு காவலர் பதவிகளில் நேபாள நாட்டவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும், இலங்கையர்களையும் இவ்வாறு பாதுகாப்பு காவலர் பதவிகளில் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக மலேசியாவின் பிரதி உள்துறை அமைச்சர் டட்டுக் நூர் ஜஸ்லான் மொஹமட் கூறியுள்ளார். நேபாளத்திலிருந்து இந்தப் பணிகளுக்கு வருவோரின் தொகை...

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது!

சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்ட 17 பேருடன் கூடிய படகு ஒன்றை காலி கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் நீர்கொழும்பில் இருந்து படகு மூலமான பயணத்தை ஆரம்பித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 17 பேருடன் கூடிய படகு நேற்று மாலை காலி கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

வெள்ளைக் கொடியுடன் அத்துமீறி செல்வோம் உண்ணாவிரதம் இருக்கும் மக்கள் எச்சரிக்கை

''சித்­திரைப் புத்தாண்டுக்குள் எம்மை எமது சொந்த இடங்களில் மீள்­கு­டி­யேற்றம் செய்­யா­விடின், வெள்ளைக் கொடிகளுடன் எமது பகுதிக்குள் அத்­து­மீறி பிரவேசிப்போம்'' என வலி.­வ­டக்கில் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட வேண்­டிய மக்கள் சூளு­ரைத்­துள்­ளனர். வலி.வடக்கு நலன்­புரி நிலைய பொது நிர்­வாக அமைப்­பி­னரின் ஏற்­பாட்டில்இ யாழ். சபா­ப­தி­பிள்ளை மற்றும் கண்­ணகி நலன்­புரி நிலை­யங்­களில் வாழும் மக்கள் நேற்று வெள்­ளிக்­கி­ழமை மீள்­கு­டி­யேற்­றத்­தினை வலி­யு­றுத்தி...

மகிந்த அணியினர் காளி கோயிலில் தேங்காய் உடைத்தனர்

அரசுக்கு எதிராக நேர்த்திக்கடன் வைத்து தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொது எதிர்க்கட்சியினர் நேற்று நான்காம் கட்ட தேங்காய் உடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதற்கமைய கொழும்பு முகத்துவாரம் காளி அம்மன் கோயிலில் பந்துல குணவர்தன எம்.பி. தலைமையில் நேர்த்திக் கடன் வைத்து தேங்காய் உடைக்கும் போராட்டம் இடம்பெற்றது. ஒடுக்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும், அரசியல் சுதந்திரத்தையும்...

எனது அமைதியை கெடுத்தவர் அமைச்சர் மனோகணேசன்- வடமாகாண முதலமைச்சர்

நல்லதொரு சூழலில் அமைதியான முறையில் எனது இளைப்பாறல் காலத்தைக் கழித்து கொண்டு இருந்த என்னை அரசியலுக்கு அழைத்து என் அமைதியை கெடுத்தவர் அமைச்சர் மனோகணேசன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி பழைய மாணவர்களால் அமைக்கப்படவுள்ள மாணவர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் பிரதம...

இன்று முதல் கொழும்பில் விஷேட சோதனை நடவடிக்கைகள்

அண்மைய நாட்களாக தலைதூக்கியுள்ள பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை இல்லாதொழிக்கும் விசேட நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் நேரடி மேற்பார்வையின் கீ்ழ் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 102 தொலைபேசி வீதித் தடைகள் ஏற்படுத்தி...

எம்மீதான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை வன்மையாக கண்டிக்கின்றோம் – ஈ.பி.டி.பி

காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. காணாமற்போதல் மற்றும் கொலைகள் தொடர்பான சம்பவங்களுடன் ஈ.பி.டி.பியை தொடர்புபடுத்தி கூறப்படுகின்ற கதைகள், அடிப்படை ஆதாரமற்றவையாகவும், எமது அரசியல் எதிராளிகளின் சதிகள் நிறைந்த உள்நோக்கத்துடன் திட்டமிடப்பட்டதாகவும் காணப்படுகின்றன என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி விடுத்துள்ள செய்திக் குறிப்பில்...

மஹா சிவராத்திரி தினத்தில் புனிதம் பேணப்பட வேண்டும்!

சைவ சமய விரதங்களில் சிவனைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் மஹா சிவராத்திரி விரதம் தலையாயது. இந்த விரதம் விளையாட்டாகவோ அன்றி வேடிக்கையாகவோ அனுஷ்டிக்கப்படக் கூடாது. இந்த விரதம் மஹா சிவராத்திரி தினத்தின் முன் தினமாகிய திரயோதசி தினத்தன்று ஒரு வேளை பகல் உணவுண்டு சிவராத்திரி தினத்தன்று இரவு நித்திரை செய்யாமல் எல்லாம் வல்ல பரம் பொருளான சிவனைப்...
Loading posts...

All posts loaded

No more posts