- Saturday
- November 22nd, 2025
தமிழ்மக்கள் பேரவையின் நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்டமுன் வரைபு தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை மிகவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்கள் தோறும் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங் களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதியப்பட்டுவருவதும் இதில் மக்கள் மிகவும் உற்சாகத்துடன்...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான நவரட்ணராஜா இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சுகவீனமுற்றிருந்தார். இந்நிலையில் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகிச்சை பெற யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை இவருக்கு சத்திரசிகிச்சை நடைபெற இருந்த நிலையில் அதிகாலையில் ஏற்பட்ட மாரடைப்பினால்...
வடமேல் மாகாணத்துக்குட்பட்ட குளியாபிட்டிய பிரதேசத்தில், எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்ற வதந்தியால், பாடசாலைக் கல்வியைப் பெறும் வாய்ப்பை இழந்திருந்த 6 வயது சிறுவனை, கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இச்சிறுவனின் பாடசாலைக் கல்வி வாழ்க்கை முடிவுறும் வரையில், புலமைப் பரிசில் திட்டமொன்றை...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷவை விவசாய அமைச்சரின் செயலாளர் மீண்டும் ஜனாதிபதியாக்கிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது. 'நச்சுத்தன்மையற்ற நாடு' வேலைத்திட்டத்தின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விவசாய, கல்வி மற்றும் விற்பனைக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் நாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...
இவ்வருடத்தின் கடந்த இரு மாதகாலத்திற்குள் சுமார் 40 பேருக்கு எயிட்ஸ் தொற்று பரவியுள்ளது என்று தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் பிரசார அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 25 - 49 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகமாகவுள்ளனர் என்று தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் பிரச்சார அமைப்பின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்தார்.
தமிழ், முஸ்லிம் எல்லைப் பகுதியில் ஒரே நேரத்தில் 6 கடைகள் உடைக்கப்பட்டமை இன ஒற்றுமையைக் குழப்பும் திட்டமிட்ட சதி - நாச வேலை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஏறாவூர் 4 ஆம் குறிச்சியில்...
விடுதலைப் புலிகள் ஆனையிறவு இராணுவ முகாம் மீது ஓயாத அலைகள் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான, சந்தேகநபருக்கு எதிரான வழக்கில் வியாழனன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 2000ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையின் மூலம், ஆனையிறவு இராணுவ முகாமைத் தாக்கிய குற்றச்சாட்டில் விடுதலைப் புலிகள்...
யாழ். தெல்லிப்பளை யூனியன் சந்திப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். சாவற்காடு - ஆணைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் புவிந்தன் (வயது 21) மற்றும் அரியரட்ணம் அபிராஜ் (வயது 19) ஆகிய இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர். கோயிலுக்கு சென்று, மீண்டும் அதிவேகத்துடன் திரும்பிக் கொண்டிருந்த இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கில் வீதியை...
வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.குறித்த சிறுமி வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து பொழுதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி தனது சுய விருப்பத்துடன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 9 மாதங்களுக்கு முன்பு...
நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியில் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. உறவுகளை விடுவிக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தி மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை 7 மணிக்கு முனியப்பர் கோவில் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்...
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு தொகுதி நிலப்பரப்பு எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை ஒட்டி உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2015 இல் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு தொகுதி காணிகள் உரியவர்களிடம் வழங்கப்பட்டது. பின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிகாம...
நாட்டில் தற்போது காணப்படும் வரட்சியான காலநிலை இந்த மாதம் 15ம் திகதி வரை நீடிக்கும் என காலநிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது. தற்போது காணப்படும் வரட்சியான காலநிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் அதி கூடிய வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் என்றும் அதி குறைந்த வெப்பநிலை 26 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக காலநிலை மத்திய நிலையம்...
யாழ் மாவட்டத்தில் கடும் எதிர்ப்புக்களின் மத்தியில் நாளை செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான நில அளவை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களின்போது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தும் காணி அளவிடும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த ஆட்சியில் யாழ் மாவட்டத்தில் மாத்திரமல்லாமல் ஏனைய வடக்கு மாகாணங்களிலும் இராணுவத்தின் தேவைக்காக...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவின் உதவியுடன் சமஷ்டி அடிப்படையிலான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில் காய்நகர்த்தி வருவதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக அவர் அரசாங்கத்தைப் புறம் தள்ளி இந்திய மத்திய அரசுடன் நேரடி உறவு மற்றும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் மாகாணசபை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு...
பொலிஸ் நிலையங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இரகிசய தகவல்களை திரட்டும் புலனாய்வுப்பிரிவினை மீண்டும் இயங்கச் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகள் மற்றும் போலியான வர்த்தக நடவடிக்கைகளை இரகசியமாக வேவு பார்ப்பதற்கு இந்த குழு ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த அரசாங்கத்தினால் இரகிசய பிரிவின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இவ்வாறு இடைநிறுத்தப்பட்ட...
நாட்டில் மீண்டும் தலைதூக்கி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள பாதாள உலகக்குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கடுமையான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். நாரஹேன்பிட்டிய அபேராமையில் அமைந்துள்ள சுசரித்த தம்மா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்...
வீதியைக் கடக்க முயன்ற சிறுவனை டிப்பர் வாகனம் மோதியதில் 6 வயது சிறுவன் துடிதுடித்துப் பலியானார். நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா - செட்டிக்குளம் - நேரியகுளத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் வசந்தகுமார் விதுஷன் (வயது 6) என்ற சிறுவனே உயிரிழந்தார். டிப்பர் வாகனச் சாரதி கைது செய்துள்ள செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் சில பிரதேசங்களில் நேற்று விடியற்காலை 3.15மணியளவிலும், மதியம் 2.15 மணியளவிலும் இரண்டு சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பலாங்கொடை நகரை மையமாக கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். பல்லேகலையில் அமைந்துள்ள புவியியல் ஆய்வு மையத்தின் கட்டமைப்பில் சிறிய அளவிலான...
யாழ்.நகரப் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளின்போது, மைதானங்களில் எந்தவிதமான வன்செயல்களையும் அனுமதிக்க முடியாது, அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என, யாழ் குடாநாட்டில் கிரிக்கெட் போட்டிகளின்போது, கடந்த காலங்களில் இரண்டு கொலைகள் நடந்ததைச் சுட்டிக்காட்டி நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். பத்து கிலோவுக்கு மேற்பட்ட அளவு கேரளா கஞ்சா உடைமையில் வைத்திருந்த ஒருவருக்கான...
நல்லிணக்கத்துக்கான சிறந்த எடுத்துக்காட்டு மகா சிவராத்திரி! - ஜனாதிபதி மனிதன் மேற்கொள்ளும் தெய்வீக சமயா சாரங்கள், அனுஷ்டானங்களின் ஊடாக முழு பிரபஞ்சத்தினதும் நன்மை, நன்நெறிகள் மீதான அவனது எல்லையற்ற பக்தி வெளிப்படுகின்றதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சிவராத்திரி தின செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலுமுள்ள இலட்சக் கணக்கான இந்து பக்தர்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
