மண்வெட்டித் தாக்குதலுக்குள்ளான பெண் உயிரிழப்பு

காரைநகர் கல்வன்தாழ்வு பகுதியில் கடந்த 4ஆம் திகதி மண்வெட்டி தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னத்துரை தவமணிதேவி (வயது 56) என்பவர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (14) இரவு உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவரைத் தாக்கிய, இவரது சகோதரியின் கணவர் தலைமறைவாகியுள்ளார்.

மேற்படி பெண்ணுக்கும், அவரது தங்கையின் கணவருக்கும் இடையில் கடந்த 4 ஆம் திகதி பனங்கிழக்கு பிடுங்குவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, தங்கையின் கணவர் மண்வெட்டியால் அப்பெண்ணைத் தாக்கியுள்ளார்.

தலையில் படுகாயமடைந்த பெண் காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை(14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலைக்கு சென்ற யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன் விசாரணைகளை மேற்கொண்டார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய நிபுணர் உருத்திரபதி மயூரதன் மேற்கொண்ட உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய ஊர்காவற்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Posts