நடிகர்களுக்கு மனோதத்துவ சிகிச்சை!

தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில், நடிகர், நடிகையருக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி, நடிகர் சங்கத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

சின்னத்திரை நடிகர்கள் முதல் வெள்ளித்திரை நடிகர்கள் வரை நடிகர்களின் தற்கொலை சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சில தினங்களுக்கு முன்னர் சின்னத்திரை நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக நடிகர்களுக்கு மருத்துவ அடையாள அட்டை வழங்கும் விழாவில், நடிகர் சங்க தலைவர் நாசர் பேசுகையில், நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை செய்தி அறிந்து வருந்தினேன்.

மருத்துவத்தை விட மேலானது, மனோதத்துவ முறையிலான சிகிச்சை. நடிகர் சங்கத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டபடி, மனோதத்துவ சிகிச்சை மையம் விரைவில் அமையும், என்றார்.

இன்றைய தினம் தொகுப்பாளினி நிரோசா என்பவரும் தற்கொலை செய்து கொண்டார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது

Related Posts