Ad Widget

மன்னாரில் ஒரு கோடி 87 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு

மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாபத்துறை பகுதியில் செவ்வாய்கிழமை (15) காலை ஒருகோடி 87 லட்சம் ரூபா பெறுமதிமிக்க கேரளா கஞ்சாவிணை மன்னார் மது வரி திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

சிலாவத்துறையில் 56 வீட்டு திட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள. கடற்கரையை அண்டிய சிறு ஓடையில் நிலத்துக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 187 கிலோ கிராம் எடையையுடைய கேரளா கஞ்சாப் பொதிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இதன் பெறுமதி இலங்கை ரூபாய்களில் ஒரு கோடி 87 லட்சமம் ரூபாவாகும்.

மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையிலான மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து சிலாவத்துறை பகுதியில் தேடுதலை நடத்தி இக்கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

எனினும் குறித்த கஞ்சா தொடர்பாக சந்தேகத்தின்பேரில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

Related Posts