- Monday
- August 10th, 2026
முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயம் திருவிழாவிற்குச் சென்றவர்கள் குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ் வடமராட்சியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்குச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஐவரே பளைப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையில் இருந்து பொங்கல்த் திருவிழாவுக்காகச் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரால் வழிமறிக்கப்பட்டனர். இதன்போது, பொலிஸாருக்கும் வானில்...
யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 9 வயதுச் சிறுவன் உயிரிழந்தமைக்கு மருத்துவ சிகிச்சை வழங்கலில் உள்ள கவனயீனம் காரணமா? என முழுமையான விசாரணையை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கிளிநொச்சி தர்மபுரத்தைச் சேர்ந்த 9 வயதுச் சிறுவனுக்கு இருதயத்தில் துவாரம் இருப்பதாக மருத்துவ நிபுணரால்...
சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் மிகவும் ஆபதான ஆயுதம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத் செயற்பாட்டாளர் ஒருவரிடமிருந்து விசேட சென்டிநெல் (Sentinel) ரக ட்ரோன் கமரா ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த விசேட ட்ரோன் கமராவில் ஆபத்தான வெடி பொருட்களை வைத்து பாரிய தாக்குதல்களை மேற்கொள்வதற்கு ஐ.எஸ் அமைப்பினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஐ.எஸ் அமைப்பினர்...
யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் 2000ஆம் ஆண்டு 8 தமிழர்களைப் படுகொலை செய்த குற்றத்துக்கு இராணுவ அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனைத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இராணுவ அதிகாரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 19 குற்றச்சாட்டுக்களில் சட்டவிரேதக் கூட்டம் ஒன்றைச் சேர்ந்தவர் உள்ளிட்ட 1 தொடக்கம் 10 வரையான குற்றச்சாட்டுக்களை நிராகரித்த...
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நாளை சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்போவதாக அநாமதேயக் கடிதத்தை அனுப்பி வைத்தவர் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு அவரைக் கைது செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இந்த அநாமதேயக் கடிதம் ஆளுநரின் அலுவலகத்துக்குக்...
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 3 தடவைகள் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார். எனினும் அவரது கோரிக்கையை தான் ஏற்கவில்லை என்றும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என...
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமா அதிபரிடமிருந்து தொலைநகல் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு...
சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் இணைந்து மூன்று இலங்கையர்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையர்கள், அண்மையில் இலங்கைக்கு அனுப்பியதாக கூறப்படும் சுமார் 40 இலட்சம் ரூபாய் பணம் குறித்தும் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளது. அண்மையில் தெஹிவளை வீடொன்றில் வைத்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின்...
யாழ்ப்பாணத்தில் அண்மையில் பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் தளம் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடையது என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணம் ஐந்துசந்திப் பகுதி மற்றும் நாவாந்துறைப் பகுதி ஆகியன பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் சோதனைக்கு உள்ளாகின. இதன்போது ஒஸ்மானியாக் கல்லூரி வீதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் வீட்டைச் சோதனையிட்டபோது அங்கு நிலக்கீழ் தளம் ஒன்று...
சந்தேகத்திற்கு இடமான இலத்திரனியல் பொருள்களுடன் ஜெர்மனி குடியுரிமை பெற்ற பெண்ணொருவரை இன்று புதன்கிழமை காலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த தொடருந்தில் வந்த பெண் மீது சந்தேகம் கொண்ட இராணுவத்தினர் அவரை விசாரணை செய்துள்ளனர். அத்துடன் அவரது உடமைகளையும் சோதனையிட்டுள்ளனர். அதன் போது அவரது உடமையில் சில இலத்திரனியல்...
குருணாகல் மாவட்டத்தில் மூன்று பள்ளிவாசல்கள் மீது இன்று (13) திங்கட்கிழமை காலை இனந்தெரியாதோரால் தாக்குதல்கள் நடப்பட்டுள்ளன. கின்னியம மஸ்ஜிதுல் தக்வா ஜும்மா பள்ளிவாசல் , மஸ்ஜிதுல் அப்ரார் தக்கியா பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் ஆயிஷா தக்கியா பள்ளிவாசல் ஆகியவை மீதே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தியோர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, சிலாபத்தில்...
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவால் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு சிறியரக பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன், கச்சாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த சிறியரக பயணிகளை ஏற்றும் பேருந்து ரயில் கடவையை கடக்க...
எதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்நேற்று (வெள்ளிக்கழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், “வரும் திங்கட்கிழமை சிறுவர்களுக்கான பாடசாலைகள் ஆரம்பமென அரசு அறிவித்துள்ளது. ஆனால் அன்று தாக்குதல்கள் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறை...
யாழ்ப்பாணம் தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மற்றும் வயர் சுற்று என்பன மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் பொது இவை மீட்கப்பட்டுள்ளன 9 மில்லி மகசின் ஒன்று, 5 தோட்டக்கள் மற்றும் வயர் சுற்று ஒன்று என்பனவே தாவடி பத்திரகாளி கோவில் வளாகத்தில் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்....
யாழ்ப்பாணம், மன்னார் உள்பட 10 மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை வெப்பநிலை கடுமையாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களின் வெப்பிநிலை 33 தொடக்கம் 36 செல்சியஸாகப் பதிவாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதிகூடுதலாக திருகோணமலை மாவட்டத்தில் 36 செல்சியஸ், மட்டக்களப்பில் 35 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். யாழ்ப்பாணம் 33 செல்லியஸ்சும்...
எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற பகுதிகளில் குண்டு வெடிக்கும் அச்சம் உள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக பீல்மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். அத்துடன் பயங்கரவாதிகளில் 150 பேரில் 50 பேர்வரை கைதுசெய்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அப்படியாயின் இன்னும் 100 பயங்கரவாதிகள் இருக்கின்றனர். இது மிகவும் எச்சரிக்கையான நிலையாகும்....
அம்பாந்தோட்டையில் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடியைச் சேர்ந்த தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களான நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட குறித்த ஏழ்வரும் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடியில் இருந்து சென்ற பொலிஸ் அதிகாரிகளின் குழுவொன்றே இவர்களைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் உயிர்த்த்...
மாத்தளையில் பயங்கரவாத அமைப்பான தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் அந்தப் பகுதி முஸ்லிம் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) வரகாமுர பிரதேசத்திலுள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற...
குண்டு வெடிப்பு அச்சத்தால் இரவில் மக்கள் வெளியே போக அச்சப்படுகிறார்கள். ஆனால் இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி புலோலி, சிறுப்பிட்டி, அச்சுவேலி மூன்று இடங்களில் நேற்று திங்கட்கிழமை ஆயுதமுனையில் வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை அதிகாலை பருத்தித்துறை-புலோலி, சிறுப்பிட்டி, அச்சுவேலி பகுதியில் மூன்று வீடுகளில் 27 பவுண் நகைகள் மற்றும் பணம் என்பன ஆயுத முனையில்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். ஏப்ரல் 30ம் திகதியிடப்பட்ட கடிதத்தில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி இடைநிறுத்தம் வழங்கப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். மேற்படி...
Loading posts...
All posts loaded
No more posts
