Ad Widget

இலங்கை குறித்த புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள 40/1 என்ற புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரித்தானியா, கனடா, மசிடோனியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் கூட்டாக இணைந்து குறித்த பிரேரணையை கொண்டு வந்திருந்தன. இதற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ளது.

இந்த பிரேரணைக்கு உறுப்பு நாடுகள் எதுவும் எதிர்ப்பு வெளியிடாத நிலையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related Posts