- Wednesday
- December 24th, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே யுத்தத்தை வெற்றிக்கொண்ட இராணுவ வீரர்கள் கைது செய்யப்படும் நிலைமை காணப்படுவதனால், அதனை தடுக்கும் செயற்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜயந்த சமரவீர...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை மேற்கோள்காட்டி இச்செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக...
பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது காவல்துறை உத்தியோகத்தரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு விளக்கமறியலில்...
கிளிநொச்சி மாவட்டத்தில் கஞ்சாகடத்தல்காரர்கள் பற்றிய தகவல் வழங்கியதற்காக பாடசாலை மாணவன் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கை பொலிசார் திசைதிருப்பியது அம்பலமாகியுள்ளது. வன்னிப் பிராந்திய பொலிஸ்மா அதிபர் நேற்று முன்தினம் முன்னெடுத்த விசாரணைகளின் போதே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தின் போது, கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாய மாணவன் ஒருவர், தமது வீட்டு சூழலில்...
காணாமலாக்கப்பட்டோருக்கான அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி மாபெரும் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், ஊடகவியலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மனித உரிமை...
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சி தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தோல்வி அடைந்தமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். கொழும்பில் தமிழ் செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிவகையில், “அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று,...
முப்படைகள் , பொலிஸ் அணிவகுப்புடன் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கொட்டும் மழைக்குள்ளும் சுதந்திர தின கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக காலை 8.45 மணியளவில் மாவட்ட செயலர் தேசிய கொடியை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து இராணுவம் , கடற்படை, விமான படையினரின் அணி வகுப்புடன், பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு...
இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர் தாயகத்தில் கரிநாளாக பிரகடனப்படுத்தி துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் விடுத்தார். அத்துடன், இலங்கையின் சுதந்திர தினம் தொடர்பான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையொன்றையும் அவர்கள்...
கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையாகி வருவதாக உளநல மருத்துவர் ஜெயராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினரின் ஏற்பாட்டில் மாணவர்களிடையே அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்...
யாழில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை கோப்பாய் பொலிஸார் சேகரித்து வருவதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, தற்பொழுது அவசரகால சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், பொலிஸார் ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனரென வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்....
யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் அமைப்பினால்நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக...
விடுதலைப் புலிகளின் கரும்புலி படையணியின் கறுமையான வரி சீருடையுடன் புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞர்களே கைதாகியுள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] வடக்கில் புலிகள் மீளக்கட்டியெழுப்பப்படுவதை போல தோற்றத்தை காண்பித்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதியை பெறவே இவர்கள் நாடகமாடியிருக்கலாமென பொலிசார் தெரிவித்துள்ளனர். தகவல் ஒன்றை...
வடக்கு மாகாணத்தில் இராணுவம் அகற்றப்படும்போதே தமிழ் மக்களிடத்தில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்த முடியுமென ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட நிர்ணர் பென் எமர்ஷன் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த அவர் பயங்கரவாதத்தை ஒழிக்கும்போது மனித உரிமைகள் பின்பற்றப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்ந்திருந்திருந்தார். இந்நிலையில் தற்போது அவ்வறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித...
யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் ஆகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கவேண்டியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது. தெற்காசியப் பிராந்தியங்களுக்குப் பொறுப்பாக இயங்கிவரும் சர்வதேச மன்னிப்புச்சபை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டில் வாக்குறுதி வழங்கியவாறு உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டினை ஈடுசெய்தல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய...
மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கதக்கதான எதனோல் போதை அமிலம் 372 எண்ணை பரல்களுக்குள் யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 21 லீட்டர் கொள்ளளவுடைய எண்ணெய் தாங்கிகளில் அது மரக்கறி எண்ணெய் போன்று கடத்தப்பட்டுள்ளது. அதன் மொத்த அளவு 7812 லீட்டர் என கண்டறியப்பட்டுள்ளது. இன்று அதிகாலை விசேட அதிரடி படையினர் சுன்னாகம் பகுதியில் பாரவூர்தி...
“நாடு எதிர்கொண்டுள்ள பெரிய பிரச்சனையான, இனப்பிரச்சனையை தீர்க்க வேண்டுமென்ற எண்ணத்துடன்தான் அரசியலுக்குள் நுழைந்தேன். அந்த முயற்சி வெற்றியளித்தாலோ அல்லது தோல்வியடைந்தாலோ, என்னுடைய அரசியல் பயணம் தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எடுப்பேன்“ என தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். “நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்காக, புதிய சமூக ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான...
கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து படகு வழியாக நியூசிலாந்தை அடையும் முயற்சியில் சென்ற தமிழர்கள் பலர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து மிகப்பெரிய நாட்டு படகு ஒன்று கடந்த 12-ந்தேதி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. மீன்பிடி படகான இந்த படகில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக பயணம் செய்தது அண்மையில்...
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இவ்வாரம் முதல் புதிய உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது...
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாகன தொடரணி முல்லைத்தீவு - புளியங்குளம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, கோடலிக்கல்லு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் இடம்பெற்ற போதைப்பொருள் தொடர்பான நிகழ்வு மற்றும் பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார். இந்நிலையில் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். இராணுவத்...
வவுனியா – ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை என ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அதிபர் கெ.தனபாலசிங்கம், கொழும்பிலுள்ள மதுவரி ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். குறித்த கடிதத்தில், ‘வேலாயுதம் சுரேந்திரனால் எமக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தின்படி, அவரால் கண்டி வீதி, ஓமந்தைப்பகுதியில் அமைக்கப்படும் பியர் விற்பனை நிலையம்...
Loading posts...
All posts loaded
No more posts
