Ad Widget

மின்சார தடை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு – மின்சார சபை

நாட்டில் சமீப காலமாக நிலவிவரும் மின்சா தடை தொடர்பாக முக்கிய அறிவித்தல் வெளியாகவுள்ளது.

அதன்படி நாளொன்றுக்கு 4 மணி நேரம் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது குறித்து இலங்கை மின்சார சபை இன்று (திங்கட்கிழமை) அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளது.

நாட்டில் வெப்பமான காலநிலை நிலவுகின்ற நிலையில், மின்சார தடை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் நாளொன்றுக்கு 4 மணிநேர மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்த நேரிடும் என மின்சார பொறியிலாளர் சங்கம், இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய, காலை 8.30 முதல் முற்பகல் 11.30 வரையும், முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 வரையும், பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 வரையும் மின்சார விநியோக தடையை அமுல்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மாலை 6.00 மணிமுதல், இரவு 7.00 மணிவரையும், 7.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரையும், 8.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையும், 9.00 மணிமுதல் இரவு 10.00 மணி வரையும் ஒரு மணித்தியாலத்திற்கு மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேநேரம், சனிக்கிழமை காலை 8.30 முதல் முற்பகல் 10.45 வரையும், முற்பகல் 10.45 முதல் பிற்பகல் ஒரு மணிவரையும், ஒரு மணி முதல் பிற்பகல் 3.15 வரையும், பிற்பகல் 3.15 முதல் மாலை 5.30 வரையும் மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

எனினும், ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார விநியோகத் தடை இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts