Ad Widget

யுத்தத்தின் பின்னரே இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது: பொன்சேகா

யுத்தத்தின் பின்னரே இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்தம் இடம்பெற்றபோது இராணுவத்தினர் சட்டவிரோத குற்றங்களிலோ, மனித உரிமை மீறல் செயற்பாடுகளிலோ ஈடுபடவில்லை. யுத்த காலத்தில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இராணுவத் தலைமை மற்றும் அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை.

ஆனால் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில், அதாவது யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சில சட்டவிரோதச் செயல்கள் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனவே அக்காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றங்களுக்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் அவற்றிற்கான தீர்வுகள் உள்நாட்டு நீதிமன்றத்தினூடாகவே பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்” என சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts