- Monday
- August 10th, 2026
கொரோனா (கொவிட்-19) ஒரு உலகளாவிய தொற்று நோய். இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் கொரோனா வைரஸின் பரவலை உலகளாவிய ரீதியிலான தொற்றுநோய் என உலக சுகாதார ஸ்தாபனம் உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்துள்ளது. இந்த நோயின் வியாபகம் குறித்து தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார...
அச்செழு சைவப்பிரகாச வித்தியாசாலைக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரைத் தாக்கியுள்ளது. பழைய மாணவர்கள் ஐவர் அடங்கிய கும்பல் ஒன்றே இந்தச் செயலைச் செய்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது என்று பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய மாணவர்கள் சிலருக்கும் பாடசாலை நிர்வாகத்துக்கும் உள்ள தனிப்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த தாக்குதல்...
கொரோனா தொற்றுடன் இலங்கையில் முதலாவது இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா வழிகாட்டியான அவர் இத்தாலி சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கையில் நடமாடியமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையிலேயே அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் பங்களாதேஷ், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிபைன்ஸ், தென் கொரியா, சிரியா மற்றும்...
இலங்கை உள்நாட்டு யுத்தக் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் மறந்து, முன்னோக்கி செல்வதே சிறந்தது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். இலங்கை ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (05) பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி, ராணுவத்தைச் சேர்ந்த...
நியமனம் வழங்குவதை தேர்தல்கள் ஆணையாளர் இடைநிறுத்துவார் எனத் தெரிந்தே வேலையற்ற பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றம் கலைப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன என்றும் அரசாங்கம் வாக்குறுதியளித்த காலத்துக்குள் நியமனம் வழங்கியிருந்தால் தேர்தல் ஆணையாளர் இடைநிறுத்தியிருக்கமாட்டார்...
நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை தொடர்பாக மக்கள் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளும் கர்ப்பிணி தாய்மார்களும் அவதானத்துடன் இருத்தல் அவசியம் எனவும் அந்த அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அதிக வெப்பம் நிலவுவதால், பல்வேறு நோய்களும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள்...
வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சரத் பிரேமசிறி இதனைத் தெரிவித்துள்ளார். வளிமண்டலத்தின் தூசு துகள்கள் தொடர்பான அமெரிக்க குறியீட்டின் அடிப்படையில், 50 முதல் 100 வரையிலான அளவு தூசு துகள்கள் வளிமண்டலத்தில் உள்ளன. இந்த நிலையில், சில சந்தர்ப்பங்களில் அந்த நிலைமை 100...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் மார்ச் 11ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. மாவட்டச் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பிரதேச...
நாடாளுமன்ற தோ்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னா் இடம்பெற்ற பட்டதாாிகள் நியமனத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு தோ்தல் ஆணைக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. தோ்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னா் நாடளாவிய ரீதியில் வேலையற்ற பட்டதாாிகளுக்கு அவசர அவசரமாக நியமனம் வழங்கப்பட்டது. இதன் கீழ் வடக்கு மாகாணத்தில் மட்டும் 237 பட்டதாாிக ள் நியமனத்தை பொறுப்பேற்றனா். இந்நிலையில் தோ்தல் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற...
யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த நால்வர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அச்சுவேலிக் காவற்துறையினர் தெரிவித்தனர். “சந்தேகநபர்களிடமிருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள், கொள்ளையிடபட்ட நகைகள் மற்றும் 2...
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , தமக்குள்ள அதிகாரத்தின் கீழ் நாடாளுமன்றத்தை இன்று கலைக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில், நான்கரை வருட நிறைவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலொன்றுக்கு அரசாங்கம் செல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமாயின் பிரதமர் மஹிந்த...
புத்தூர் மேற்கு சிறுப்பிட்டி கலைமதி கிந்துபிட்டி மாயனத்தில் உடலை தகனம் செய்ய வந்தவர்களை வல்லை மண்டான் மயானத்தில் தகனம் செய்யுமாறு மல்லாகம் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. சிறுப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் இயற்கை எய்திய நிலையில் அவரின் பூதவுடலை கிந்துபிட்டி மயானத்தில் தகனம் செய்ய உறவினர்கள் முயற்சித்த போது குறித்த மாயனத்தைச் சூழவுள்ள மக்கள் அதற்கு கடும்...
மோட்டாா் சைக்கிளுக்கு லீசிங் காசு கட்டத்தவறியமையினால் வீடு புகுந்து லீசிங் நிறுவன ஊழியா்கள் தரக்குறைவாக பேசியதுடன் செய்த அட்டகாசங்களால் மனம் உடைந்துபோன 5 பிள்ளைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கின்றது. யாழ்ப்பாணம்- தாவடி தெற்கு கிராமத்தில் நேற்றமுன்தினம் மாலை இந்த சம்பவம் இடம்பெற்றியிருக்கின்றது. சம்பவத்தில் சுவிதன் அனுசுயா(வயது34) என்ற குடும்ப...
நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்திற் கொண்டு அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று காலை 10.30 மணி முதல் நாளை காலை வரை நாட்டில் நிலவக் கூடிய காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வட மேல் மாகாணம், மேல் மாகாணம் மற்றும்,...
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 41 இளைஞர்களும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு 10 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 41 இளைஞர்களும் இன்று அதிகாலை ஒரு மணியளவில் விடுவிக்கப்பட்டனர். “இராணுவத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 41 பேரும் சந்தேகத்தின் அடிப்படையில்...
53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறை நிரப்பு பிரேரணைக்கும் இந்த விடயத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (24) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்...
ஐ.நா. பரிந்துரைகள் மற்றும் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ.நா. வலியுறுத்த வேண்டும் என தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். அவர்...
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமது யாப்பை மாற்றி விட்டார்களா? ஒற்றையாட்சிக்குள் ஐம்பதுக்கு ஐம்பது என்று தான் ஜீ.ஜீ. கூறிவந்தார். இப்போதைய முன்னணியினர் அதனை மாற்றிவிட்டார்களா? இப்பொழுது அவர்கள் சமஷ்டி என்று மாற்றியிருந்தால் ஜீ.ஜீ. தனது கட்சியில் இருந்த தந்தை செல்வாவிடம் மண்டியிட்டதாக அர்த்தமாகும். தனித்தமிழ் ஈழம் என்று மாற்றியிருந்தால் அவர் சி.சுந்தரலிங்கம், வி.நவரத்தினம்...
சவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தவருக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமையை வடகிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் வரவேற்கின்றார்கள் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் தீர்மானமாக போதிய நம்பத்தகு சாட்சியங்களின் அடிப்படையில் மனித உரிமை மீறல்களில் சவேந்திர சில்வா ஈடுபட்டுள்ளார் என்பதை அடையாளம் கண்டதையிட்டு...
Loading posts...
All posts loaded
No more posts
