- Tuesday
- December 23rd, 2025
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இம்முறையும் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய 2016ஆம் ஆண்டின் மூன்றாவது சுற்று நிருபத்திற்கு அமைய அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் 2015ஆம் ஆண்டைவிட அரசு ஊழியர்களின் சம்பளம் 107 சதவீதம் அதிகரிக்கும் என நிதி...
சட்டவிரோதமாக தென்னிந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வருகை தந்த ஐவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி இவர்கள் நெடுந்தீவு பகுதிக்கு படகு மூலம் வருகை தந்துள்ளனர். இவ்வாறு வருகை தந்த இலங்கையை சேர்ந்த 5 அகதிகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இங்கிரிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும்...
எதிர்வரும் வருடம் 08 புகையிரதங்கள் சேவையில் இணைக்கப்படும் என புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள குறித்த 08 புகையிரதங்களில் 04 புகையிரதங்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், டிக்கெட் வழங்குவதை...
சேவையை பெற்றுக்கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வருகைதருகின்ற எந்தவொருவரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காது உடனடியாக சரியான மற்றும் வினைத்திறனான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து அரச ஊழியர்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அதேநேரம் அச்சேவைகளை வழங்கும்போது எந்தவிதமான முறைகேடுகளும் இடம்பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நேற்று (26) பிற்பகல் மோட்டார்...
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி உலக மக்களையே உருக்குளைய வைத்த சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியது. ரிக்டர் அளவுகோளில் 9.1 முதல் 9.3 மெக்னிடீயூட்டாக அந்த நில...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதன்படி கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு...
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை போன்று பிணைமுறி மோசடி தொடர்பாகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதற்கமைய ரணில் விக்ரமசிங்கவும் கைது செய்யப்படுவாறென அவர் மேலும் தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சம்பிக்க ரணவக்க...
அரியாலை பகுதியில் தனது காணியினை சட்டவிரோதமான மணல் அகழ்விற்கு வழங்கிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் மணல் அகழ்வில் ஈடுபட்டோர் வாகனங்களைக் கைவிட்டு தப்பித்துவிட்டனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ...
புலிகள் தோற்கடிக்கப்பட்டமை நல்லதே. அதற்கு சர்வதேசமும் இந்தியாவும் உதவியன ” என தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு – இலங்கைத் தமிழரசுக் கட்சி தமது கொள்கை – இலக்கை அடைய எதிர்காலத்தில் என்ன...
நாட்டின் மூன்று மாகாணங்களுக்கு டெங்கு நோய் குறித்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு தடுப்புப் பிரிவினால் இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேல் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் வட மாகாணம் ஆகியவற்றுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாகவே இவ்வாறு...
யுத்த களத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படாவிடின் அவர்கள் காணாமல்போனவர்களாகவே கருதப்படுவர். இராணுவத்தில் 6000 பேர் வரையில் இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இதேபோன்றே புலிகள் தரப்பிலும் காணாமல் போயிருக்கலாம். காணாமல்போனோர் விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டமையினாலேயே தீர்வு காணமுடியாதுள்ளது. மரணச்சான்றிதழ்களை வழங்குவதுடன் அந்த குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும். இதனைவிட அவர்களை மீள கொண்டுவர முடியாது என்று ஜனாதிபதி...
அதிகாரப்பகிர்வு என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில அரசியல்வாதிகள் செயற்படுத்த முடியாத திட்டங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி பெரும்பான்மை மக்கள் விரும்பாத ஒன்றை எப்படி கொடுப்பது எனவும் கேள்வியெழுப்பினார். கொழும்பில் நேற்று ஊடக பிரதானிகளுடன் நடந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர், அப்படி கொடுப்பதாக கூறி...
யாழில் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் டெங்கு தொடர்பான அவசர கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் முப்படையினர் மற்றும் மாவட்டத்திலுள்ள சகல அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் அடுத்த மூன்று வாரங்கள் டெங்கை ஒழிப்பதற்கான அவசர காலமாக...
இரண்டரை மாதம் நிரம்பிய பாலகன் நள்ளிரவு கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் துன்னாலையில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் துன்னாலை குடவத்தைப் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். தந்தையார் இரவு கடமைக்காக சென்றிருந்த நிலையில் தாயாருடன் பாலகன் உறங்கியுள்ளான். இந்த நிலையில் பாலகனை நேற்றிரவு 11.30 மணி முதல்...
பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த பொலிஸ் அதிரடிப்படையினர் மாணவர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், மாணவர்கள் மது போதையில் வாகனம் ஓட்டியதனாலேயே அத்துமீறி உள் நுழைந்ததாகப் பொலிஸார் சொல்வதில் உண்மையில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர்...
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் தெற்கு கடல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்க நிலை நாட்டுக்கு அப்பால் நகர்ந்து வருவதனால் நாட்டில்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள நபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க செய்ய மினுவாங்கொட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை கொல்ல இவர் சதித்திட்டம் தீட்டியதாக, நீதிமன்றத்தில் பொலிசார் தெரிவித்தனர். அவருடன் கைதானவர்கள், இந்த விவகாரத்தில் தொடர்புபட்டமைக்கான சான்றுகள் கிடைக்காதமையினால்...
புங்குடுதீவில் கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செயலாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு கிழக்கு 9ஆம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளன. 14 நாள்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு பிரதேச செயலாளரினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காணிகள் சுவீகரிக்கப்படவுள்ள உரிமையாளர்களின்...
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் நேற்றுவரை கொள்கை ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் கூறாதவர்கள் இன்று அவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத்...
நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாகவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...
Loading posts...
All posts loaded
No more posts
