- Tuesday
- December 23rd, 2025
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீள்குடியமர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. எனினும் மீதமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோருகின்றனர்” இவ்வாறும் யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் றுவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – பலாலி படைத் தலைமையகத்தில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட இராணுவக் கட்டளைத்...
முல்லைத்தீவு மாவட்டத்தை சோ்ந்த ஒருவா் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக் கலாம் என்ற சந்தேகத்தின் பெயாில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக சு காதார அமைச்சு அதிகாாி ஒருவா் கூறியிருக்கின்றாா். இன்று காலை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்ட சுகாதார அதிகாரியொருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,...
கொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் ஒரு சீன பெண்ணுக்கே இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 43 வயதான குறித்த பெண் சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து இலங்கைக்கு வருகை...
கொரோனா வைரஸ் காரணமாக கொழும்புக்கு வரும் அனைவரையும் மூக்கு கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நெரிசலான பகுதியில் கூடும் அனைவரும் முகத்திற்கு மூக்கு கவசம் அணியுமாறு கொழும்பு தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார். கொழும்பு நகரத்தில் உள்ள பொது இடங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்குள் நுழையும்போது இந்த முறையை பின்பற்றவும் ஊழியர்களுக்கு...
உலகை உலுக்கும் பாம்பு வைரஸ் தொற்று; வடக்கு மக்களும் விழிப்போடு இருக்கவேண்டும் – மருத்துவர் யமுனாந்தா
“சீனாவை தாக்கி அங்கு மக்களை உயிரெடுத்து வரும் கோரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, தாய்லாந்து, சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கும் தொற்றியுள்ளது. எனவே வடக்கு மாகாணத்திலும் இந்த தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விழிப்போடு இருக்கவேண்டும்” இவ்வாறு மருத்துவர் சி. யமுனானந்தா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; தற்போது உலகம் முழுவதும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கோரோனா வைரஸ் என்ற...
யாழ்ப்பாணம், பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளி யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா என்பவரே இவ்வாறு கழுத்து படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவரது கணவரே இந்தக் கொலையை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த கொலைச் சம்பவம் பண்ணை கடற்கரைப்...
யாழ்.பண்ணை கடற்கரையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றிருக்கின்றது. கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில்...
யாழ்ப்பாணத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளனர். இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தென்மராட்சி, மட்டுவில் சந்திரபுரம் வடக்கு செல்லப்பிள்ளையார் கோயிலடியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், அவரது மகள், மகளின் கணவர் ஆகிய மூவர்...
விடுதலைப்புலிகளுடனான போரின்போது காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கரை சந்தித்த ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்ததுடன், இச்சந்திப்பில் காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தனது திட்டங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். மேலும் காணாமல்போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் புலிகளால் அழைத்துச்...
தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும். எத்தனை தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து போராடுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்று 19ம் திகதி இலங்கை தமிழரசு கட்சியின் பொங்கல் விழா நிகழ்வு திருகோணமலை நகராட்சி மன்ற நகர மண்டபத்தில்...
கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா செயற்றிட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் வசத இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கடன்களைப் பெற்றுத்தருவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அரசியல் தேவைகளை கருத்திற் கொண்டு கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கடன் திட்டம் முழுமையாக...
அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களை தூரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகங்கள் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அவசியமாகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். தமிழ் ஊடகங்களின் முக்கியஸ்தர்களுடன் நேற்று முன்தினம் (14) அலரி மாளிகையில் ,இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார். தமிழ் மக்கள்...
யாழ்ப்பாணம் மாநகர் கொட்டடியில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலையடுத்து பொதுமக்கள் துரத்திச் சென்ற போது 3 மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டு குறித்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் கொட்டடி வைரவர் கோவிலடியில் நேற்றிரவு(புதன்கிழமை) 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
யாழ்.குடாநாட்டில் இன்று அதிகாலை தொடக்கம் எாிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் பெருமளவில் குவிந்து கொண்டு எாிபொருள் நிரப்புவதை அவதானிக்ககூடியதாக உள்ளது. எாிபொருளுக்கு தட்டுப்பாடு வந்துவிட்டதாகவும், தட்டுப்பாடு வரலாம் எனவும் பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அமொிக்காவுக்கும் இடையில் பதற்றமான சூழுல் உருவாகியிருக்கும் நிலையில் அதனை காரணம் காட்டி இந்த கதைகள் கட்டப்பட்டுவருகின்றது. எனினும்...
இன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இடையில் எதிர்க்கட்சி தலைவர் மோதல் வந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘எதிர்க்கட்சி தலைவரின் கன்னியுரை இன்று சபையில் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவா என்ற...
தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் (வயது-26) என்ற இளைஞர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. 5 நண்பர்களுடன் தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த போதே...
மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணம் வரை அதிவேக அதிவேகப் நெடுஞ்சாலை அமைக்கப்படுமென்று பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார். கண்டி - கொழும்பு மத்திய அதிவேகப் நெடுஞ்சாலை 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்படுகிறது. இவற்றில் 2 கட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2 வருடங்களுக்குள் மத்திய அதிவேகப் பாதையின்...
“உங்கள் பிள்ளைகளை முதலைக்கு வெட்டிப் போட்டு விட்டார்கள். அவர்கள் திரும்பி வருவார்களா? இங்கு எதற்காக வந்து கத்திக் கொண்டிருக்கிறீர்கள்?“ என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கேட்டுள்ளார் தமிழ்ப் பெண்ணொருவர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் (30) கிளிநொச்சியில் நடத்திய போராட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்தது. கரைச்சி பிரதேசசபைக்கு முன்பாக உள்ள காணி தொடர்பான...
அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சிறந்த சூழலை நாட்டில் உருவாக்குவதே தனது நோக்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில், “மலர்கின்ற இந்த புத்தாண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் எனதன்பிற்குரிய பிள்ளைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமைய...
பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாயை குடும்பம் ஒன்று இழந்துள்ளது. யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தின் குடும்ப தலைவர் மன்னாரில் பணி நிமிர்த்தம் அங்கு தங்கி நின்று பணியாற்றி வரும் நிலையில் தாயும், மகளும் யாழில் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த ஒரு மாத...
Loading posts...
All posts loaded
No more posts
