Ad Widget

வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரிப்பு!

வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சரத் பிரேமசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

வளிமண்டலத்தின் தூசு துகள்கள் தொடர்பான அமெரிக்க குறியீட்டின் அடிப்படையில், 50 முதல் 100 வரையிலான அளவு தூசு துகள்கள் வளிமண்டலத்தில் உள்ளன.

இந்த நிலையில், சில சந்தர்ப்பங்களில் அந்த நிலைமை 100 முதல் 150 வரையில் அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம், குருநாகல் நகரில், வளிமண்டலத்தின் தூசு துகள்களின் செறிவு உயர் தன்மையை அடைந்துள்ளது.

இந்த நிலைமையை, வாகன நெரிசல் நிலவும் நகரங்களில் அதிகளவில் அவதானிக்க முடிவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.

Related Posts