- Tuesday
- December 23rd, 2025
ஜனாதிபதித் தேர்தலில் ஐந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் வலுவான முடிவுகளை எடுக்கவுள்ள நிலையில் முந்திக்கொண்டு அறிக்கைகளை விட்டு கூட்டை சிதறடித்தவர் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனே என குற்றம் சுமத்தியுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தாங்கள் எடுத்த முயற்சியை சரியாக அணுகாது ஐந்து தமிழ் கட்சிகளும் தவறிழைத்துள்ளன என குற்றம் சாட்டியுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக மாணவர்கள்...
ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் குண்டு வெடிப்பொன்று இடம்பெறும் சாத்தியமுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் குண்டு வெடிப்பொன்று இடம்பெறும் சாத்தியமுள்ளதாக என்ற கருத்திலான டுவிட்டர் தகவலொன்று தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக பொலிஸ் தலைமையகம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....
எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில், இலங்கைக்கு ஜனநாயக ரீதியாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்தற்கான தேர்தல் 2019 நவம்பர் 16ஆம் திகதி...
வவுனியாவில் 50இற்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியதை தொடர்ந்து, பொறுமையிழந்த மக்கள் நேற்றிரவு வீதிக்கிறங்கினார்கள். வவுனியாவில் நான்கு இடங்களில் வீதிகளை மறித்து மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதனால் ஏ9 வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. நேரம் செல்லச்செல்ல போராட்டம் தீவிரமடைந்து வவுனியப புகையிரத நிலையத்திற்கு அண்மையாக புகையிரதத்தையும் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருளில் மூழ்கியுள்ள வவுனியாவில்...
சென்னை- யாழ்ப்பாணம் இடையே எதிர்வரும் 11ஆம் திகதி முதல் அலையன்ஸ் எயர் நிறுவனம் விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. அதற்கமைய வாரத்தில் மூன்று நாட்களுக்கு விமான சேவைகள் இடம்பெறுமென அலையன்ஸ் எயர் நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையை அலையன்ஸ் எயர் நடத்தவுள்ளது. அதன்பின்னர், கூடிய...
யாழ்.வேம்படி மகளிா் கல்லுாாியில் குண்டு தாக்குதல் நடாத்தப்போவதாக கல்லுாாியின் முன்னாள் அதிபருக்கு எச்சாிக்கை கடிதம் அனுப்பபட்டிருப்பது தொடா்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. திகதியிடப்படதாத அந்தக் கடிதத்தில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்னும் ஒரு மாதத்தில் குண்டு வெடிக்கும் என்று ஆங்கில மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. வேம்படி பாடசாலை முன்னாள் அதிபர் வேணுகா...
ஊடக அறிக்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா? இலங்கைத்தீவில் கடந்த பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானதாகும். அந்த நோக்கில் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தீரக்கமான முடிவுகளை எடுத்து பேரம்பேச வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இத்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவராத நிலையில் நாளை இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமிழ்மக்களைக் கோர முடியாதுள்ளது. எனினும், தமிழ் மக்கள் தமது வாக்குரிமையைத் தவறாது பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கும் ஐந்து கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன. எதிர்வரும்...
ஜனாதிபதி தேர்தலில் தம்மால் யாரையும் ஆதரிக்க முடியாது, மக்கள் விரும்பியவர்களிற்கு வாக்களிக்க வேண்டுமென அறிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன். அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்- திங்கட் கிழமை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட 5 கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பின்னர் அந்தக்...
நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தெற்காக காணப்படும் வளிமண்டலத் தளம்பல் நிலையானது தெற்கு கடற்பரப்புகள் ஊடாக நாட்டிற்கு மேற்காக காணப்படும் கடற்பரப்புகளைநோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. இத்தொகுதியின் தாக்கம்...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், கடந்த 25-ம் தேதி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 63 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது....
பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களின் அரசியல், சமூக பிரச்சினைகளில் உறுதியாக முன்வைக்கும் தீர்வு என்ன என்பதை அவதானித்து அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக தீர்வு என்ன என்பதை கவனித்து பொறுமையாக தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளது. எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும்...
இலங்கை கடற்படையினரின் பல இரகசிய முகாம்களில் 2008 முதல் 2014 வரை இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு இதன் காரணமாக உலக நாடுகள் இலங்கை கடற்படையுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது...
யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது. பொது நலம் காக்கும் நபராக இருந்தால் பொதுநல சேவைகள் செய்த ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய முடியும். வீதியில் செல்பவர் வந்து இவ்வாறான மனுவைத் தாக்கல் செய்ய முடியாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மாநகர சபை சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ....
ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளது. கோட்டாபய சீன சார்பு நிலைப்பாட்டில் இருந்தால், அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட 13 அம்சங்களையும் ஆதரிக்க தயாராக இருக்கிறோம். கோட்டா இந்திய சார்பு நிலையெடுத்தால், ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குவோம் என்ற செய்தியை இந்தியா இதன்மூலம் வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் அடையாளங்காணப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்படவுள்ளன. முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் குறித்த மனித எச்சங்கள் இன்று (திங்கட்கிழமை) மீட்கப்படவுள்ளன. சுதந்திரபுரம் – கொலனி பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்து அகழப்பட்ட மண் நேற்று பிறிதொரு பகுதியில் கொட்டப்பட்டது. இதன்போதே, குறித்த மனித எச்சங்கள்...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவர்கள் இருவரை கப் ரக வாகனம் மோதியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவன் படுகாயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவத்தையடுத்து உள்ளூர் மக்கள் ஒன்றுதிரண்டு வாகனத்தைச் செலுத்தி வந்த சிங்கள சாரதியை தாக்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார் சாரதியை பொது மக்களிடமிருந்து மீட்டுச் சென்றனர்....
கொழும்பில் உள்ள பல ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட பிரிவு ஒன்றை அமைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கையொப்பதுடன் கடந்த இரண்டாம் திகதி கொழும்பில் உள்ள ஹோட்டல்கள் சிலவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன. மீண்டும் உயிர்த்த...
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அதியுச்ச இனத்துவசத்தின் இன்னொரு பரிணாமம், மியன்மார் பாணியிலான பெளத்த மத தீவிரவாதம் சிறிலங்காவிற்கு புதியது அல்ல. கடந்த காலங்களில் மென்போக்கு அணுகுமுறையை கடைப்பிடித்த பௌத்த தீவிரவாதம் தற்போது கடும்போக்கு அணுகுமுறையை கையிலெடுத்திருப்பது என்பது சிறிலங்காவின் பெரும்பான்மை சனநாயக விழுமியங்களை முற்று முழுதாகவே இல்லாதொழிக்கின்றது என தமிழர் மரபுரிமை பேரவையினால் இன்று சமர்ப்பிக்கப்பட்ட...
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைப்பெறும் என்றும் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று மாலை தெரிவித்திருந்தார். இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும்...
Loading posts...
All posts loaded
No more posts
