- Tuesday
- December 23rd, 2025
புதிதாக ஆட்சி அமைத்து ஒரு வருட காலத்திற்குள் அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதி அளித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக ஐக்கிய...
அன்பான தமிழ் மக்களே, இன்று நாம் முன்னெப்போதும் இல்லாதவாறு சிங்கள பேரினவாதத்தின் திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு கிடக்கின்றோம். தமிழ் மண் சிதைவுற்றுள்ளது. தமிழரின் குடித்தொகை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கில் இருந்து கிழக்கு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தோற்கடிக்கப்பட்ட மக்கள் என்ற மனநிலையுடன் எமது தாயகம் தேர்தல் அரசியற் சகதிக்குள் மூழ்கியுள்ளது. நம்பிக்கையற்ற நடைபிணங்களாய் ஈழத் தமிழ் மக்கள்...
எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் பேரணி இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதன் காரணமாக கடைகள் அனைத்தும்...
முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைக்கப்பட்ட தமிழர் உடல்களோடு உடலாக, அனைத்துலக மனித உரிமை கோட்பாடுகளையும், வரையறைகளையும், நியமங்களையும், நம்பிக்கையினையும் சேர்த்தே புதைக்கபட்டுவிட்டதை இன்றளவும் மெய்ப்பிப்பதாகவே தமிழினப் படுகொலைக்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது. போர் வலயத்தில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்த சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் போர் முடிவுக்கு...
வடக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரமற்ற குடும்பங்களுக்கு உதவுவதாகத் தெரிவித்து பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்திடம் பல கோடி ரூபா நிதியை மோசடி செய்த முக்கியஸ்தர் ஒருவர் உள்பட இருவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் இலங்கையில் தலைமறைவாகி உள்ளதாக அவர்களிடம் உதவித் திட்ட நிதியை வழங்கிய நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில் இலங்கை...
வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வவுனியா பொலிஸாருக்கு இன்று (புதன்கிழமை) காலை இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு மோப்பநாய் சகிதம் சென்ற வவுனியா பொலிஸார், தீவிர தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இதனால் வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள், பொதுமக்கள் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே உள்ளே...
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று யாழ்.சங்கிலியன் பூங்காவில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போது பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்...
அரச வேலை பெற்றுத்தருவதாக இளம் பெண்களிடம் சேட்டை செய்த வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சிக்கினார்!!
அரச வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளம் பெண்களை அழைத்து தகாத முறையில் நடந்துகொண்ட அரசியல்வாதி சித்தன்கேணி இளைஞர்களிடம் கையும் மெய்யுமாக சிக்கிக்கொண்டார். வலி. மேற்கு பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரே இவ்வாறு பிடிபட்டார். அவர் இளைஞர்களால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்றது. ஐக்கிய தேசியக்...
யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று வெள்ளிக்கிழமை(06) நண்பகல்-12 மணி முதல் அரைநாள் தொழிற்சங்கப் போராட்டத்தையும், கவனயீர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேற்படி போராட்டங்களுக்கான அழைப்பினை விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் தவிர்ந்த சகல கல்விசாரா ஊழியர்களையும், இணைந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்...
யாழ்.சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துள்ளார். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியுள்ளது. மேலும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நியமனம் பெறவுள்ள சுகாதாரத்...
பலாலி இராணுவ முகாமின் இராணுவக் காவலரணில் கடமையிலிருந்த படைச் சிப்பாய் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்தார். சிப்பாய் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பலாலி இராணுவக் காவலரணில் கடமையிலிருந்த படைச் சிப்பாய் மீது முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும்...
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மருத்துவர் சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில், இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். “சின்னமணி டனீஸ்வரன், இரத்தினம் கிருஷ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னத்துரை, விநாயகமூர்த்தி நிஜிலன் ஆகிய நால்வரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று ரி. நிர்மலராஜ், ரூபன் ஜேசுதாசன்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய அவர் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்குச் வரவுள்ளார். ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அவர் இன்று இடம்பெறவுள்ள 8 நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். முதல் நிகழ்வாக பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல்லை மைத்திரிபால சிறிசேன நாட்டவுள்ளார். தொடர்ந்து அலுவலகம்...
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை மட்டு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிசார் புதைத்ததை எதிர்த்து பொதுமக்கள் நேற்று மாலை மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினால் ஏற்பட்ட பதற்றமான சூந்நிலை தற்போது தணிந்துள்ளது. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயித்த ஞாயிறு தினத்தில் தற்கொலை...
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் படையினரின் முகாம்களை அகற்றும் அல்லது குறைக்கும் எண்ணம் ஒருபோதும் தனக்கில்லை என, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளை விடவும், நாட்டின் பாதுகாப்புக்கு எந்தெந்த இடங்களில் எவ்வளவு படையினர் இருக்க வேண்டும் என்பது தொடர்பில், முப்படையினருக்கே அதிகளவில் தெரியுமென்றும் புலனாய்வுத்...
தீவிரவாத பயிற்சிகளைப் பெற்ற பலர் இன்றும் சுதந்திரமாகத் சுற்றித் திரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த தீவிரவாதத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான பலமான சட்டக்கட்டமைப்பொன்று இலங்கையில் இதுவரை ஸ்தாபிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் மீண்டுமொரு இனவழிப்பு ஏற்படலாமென காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர். மேலும் தங்களின் அவல நிலைக்கு அவரே காரணமென்றும் எனவே அவர் ஜனாதிபதியாக வருவதை ஒருபோதும் தாம் விரும்பவில்லையென்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கல்முனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக...
அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையானது தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சோதனை, கைது, தடுத்து வைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் நாட்டில் அவசரகால சட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் அமுல்படுத்தப்பட்டது. இதேவேளை, நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவத்தின்...
அவசரகால சட்டம் காலாவதியான நிலையில், முப்படையினருக்குமான தேசிய பாதுகாப்பு அதிகாரத்தை வழங்கும் விதமாக புதிய வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். நேற்று (23) நள்ளிரவில் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானியின் படி, இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும், நீர்ப்பரப்புக்களிலும் பொதுஅமைதியை பேணுவதற்கு ஜனாதிபதியினால் முப்படையினருக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பளை வைத்திய சாலை வைத்திய அதிகாரி, வைத்தியர் எஸ். சிவரூபனுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி பளை வைத்திய சாலை வைத்திய அதிகாரி வைத்தியர் சி.சிவரூபனை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
