- Tuesday
- December 23rd, 2025
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். 23ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (திங்கட்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த பதவியை வகித்திருந்தார். இந்நிலையில் அவரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்திருந்தது. இதனையடுத்து இராணுவத்தின் புதிய தளபதியை நியமிப்பது தொடர்பாக...
பளை வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் சின்னையா சிவரூபன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மருத்துவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். பளையில் முன்னாள் போராளி ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மருத்துவர் சிவரூபனிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். இந்த...
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார் என உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், அவரது பதவிக்காலத்தை இன்னும் சில மாதங்களுக்கு நீடிப்பதா- அல்லது புதிய இராணுவத் தளபதியை நியமிப்பதாக என்று...
தமிழ் மக்கள் கோட்டாபாயவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். வாக்களிக்க கூடாது. சுயமாக சிந்திக்கும் தமிழர்கள் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள். நான் சுதந்திரக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக விசயம் தெரியாத சிலர் வதந்தி பரப்புகிறார்கள் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன். விக்னேஸ்வரன் சுதந்திரக்கட்சியில் போட்டியிட போகிறார் என சிலரால் பரப்பப்பட்டு வந்த வதந்தி...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்ப முழுமூச்சாக செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று (வியாழக்கிழமை) மயிலிட்டி துறைமுகத்தினை திறந்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் இன்று புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு...
நல்லுாா் ஆலயத்திற்குவரும் பக்தா்களின் நன்மைகளுக்காகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ள்ளதாக இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க கூறியுள்ளாா். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவர், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டிலுள்ள நிலைமைக்கு அமைவாக, நல்லூர் கோயிலுக்கு வரும்...
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஆரம்பித்துள்ளனர் என கொழும்பு டெலிகிராவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவு அறிவிக்கப்பட்டு சில மணி நேரங்களில் இந்த முயற்சி ஆரம்பமாகிவிட்டதாக கொழும்பு டெலிகிராவ் சுட்டிக்காட்டியுள்ளது....
நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனமண்டபத்தில் நேற்ற முன்தினம் வியாழக்கிழமை(08) இரவு அண்மைக்காலத்தில் சைவசமயம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இந்த விசேட கலந்துரையாடலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன், இந்துசமயக் குருமார்கள், இந்துமதத் தலைவர்கள், இந்து...
வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத 21 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ள மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு இருந்தும், அது தொடர்பில் மக்களை அறிவுறுத்த தமிழ் அரசியல்வாதிகள் தவறியுள்ளனர். இதன் காரணமாக காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 30 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது. வாக்களர்கள் நீக்கப்பட்டால், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின்...
நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகலிலும் இரவிலும் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு, நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் தற்போது...
முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தவர்களை நோக்கி நேற்று இரவு இராணுவத்தினர் துப்பாக்கி சூட்டு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அம்பகாமம் பகுதியில் தற்பொழுது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“பயங்கரவாதம் என்பது புற்றுநோய் போன்றது. ஒன்று முடிந்தது என்று நாம் அமைதியாக இருந்துவிட முடியாது. நாம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். நாம் நினைக்க முடியாதவற்றை அவர்கள் செய்வார்கள். ஆயுதம் என்பது துப்பாக்கி மட்டுமல்ல. சிறிய கத்தியும் ஆயுதம்தான். வாகனங்களைக் கொண்டு மக்கள் மீது மோதி ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். நாங்கள்தான் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்” என்று பிரதமர்...
எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதை விடுத்து நான் யாழ்ப்பாணம் சென்று மக்களை சந்தித்து வந்த பின் எம்மை பற்றி விமர்சிக்க அவர்களிற்கு என்ன தகுதி உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் இன்று நாமல்...
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, இந்த மாதம் அடுத்தடுத்து நிகழும் மத மற்றும் கலாசார விழாக்களில் ஆயிரக்கணக்கான படையினரும், பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இலங்கையில் சிறியளவிலான தீவிரவாத தாக்குதல்களுக்கு வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. இந்தநிலையிலேயே, பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த...
"ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பல கிட்டவில்லை. கிடைத்தவைகளும் முழுமை பெறவில்லை என்பதே உண்மையான விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதும் செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஐபக்சவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஐபக்ச வடக்கிற்கு வந்து கூறுவதானது உண்மைக்குப் புறம்பான குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவை என்பதுடன் உண்மைத் தன்மையோ நியாயமோ இல்லாத அவருடைய இந்தக் கருத்துக்களை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சின்னப் பையனான...
ஏற்கனவே அரச பணியிலிருந்துகொண்டு வேலையற்ற பட்டதாரிகளிற்கான நியமனத்தில் உள்வாங்கப்பட்ட 104 பேர் நேற்றுவரையில் இனம்கானப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே பணிபுரியும் தகவலை மறைத்து நியமனம் பெற முயற்சித்நமை கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வேலையில்லாப் பட்டதாரிகளிற்கான நியமனம் தற்போது வழங்கப்படும் நிலையில் இன்னமும் ஆயிரக் கணக்கான பட்டதாரிகளிற்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய நிலையில் ஏற்கனவே...
மதவாச்சி – அனுராதபுரம் பிரதான வீதியின் வஹமளுகொள்ளேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்றும் தம்புள்ளை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(திங்கட்கிழமை) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பேருந்தில் பயணித்த 8 பேர் பலத்த காயமடைந்த...
சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிய அரசியலமைப்பு தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து...
புத்தளத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் பயங்கரவாதிகளுடையவை எனும் பட்சத்தில், அவர்கள் ஈஸ்டர் தாக்குதல்களைப் போன்று 30 தொடக்கம் 40 தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும் என குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தெரிவித்தார். அத்தோடு உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகள் தங்கள் முகங்களை பொதுமக்களிடமிருந்து மறைக்கக்கூடாது என்றும் இரகசிய கள நடவடிக்கைகளில் ஈடுபடும் புலனாய்வாளர்கள் மட்டுமே...
Loading posts...
All posts loaded
No more posts
