Ad Widget

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி?

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , தமக்குள்ள அதிகாரத்தின் கீழ் நாடாளுமன்றத்தை இன்று கலைக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

மேலும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில், நான்கரை வருட நிறைவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலொன்றுக்கு அரசாங்கம் செல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமாயின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையின் கீழ் நாடு வழி நடத்தப்படும்.

குறித்த செயற்பாட்டின்போது இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஆகியோர் தமது பதவிகளை இழப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts