நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் மரணம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ,இதன்படி, கொழும்பு-10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண், இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் மற்றும் கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 71 வயது பெண் ஆகியோர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன், கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த...

கொழும்பில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறியுள்ளதா?

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் சமூக தொற்றாக மாறியுள்ளதா என்பது தொடர்பாக சுகாதார அமைச்சு தெளிவுப்படுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்...
Ad Widget

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாவால் 3 இறப்புகள் பதிவு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனைகளைத் தொடர்ந்து அவருக்கு நீரிழிவு நோயுடன் கொரோனா வைரஸ் தொற்று...

இலங்கையில் கடந்த 15 நாட்களில் கொரோனா வைரஸால் 45 மரணங்கள் பதிவு

நாட்டில் கடந்த 15 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றால் 45 மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி வரையில் 13 கொரோனா மரணங்களே பதிவாகியிருந்த நிலையில், சடுதியாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றினால் மூன்றாவது முறையாகவும் நேற்று ஒரே நாளில் 5 மரணங்கள்...

உயிரிழந்த முதியவரின் உடலை உரிய அனுமதிகளின்றி கொண்டு வரப்பட்டதால் 14 குடும்பங்கள் ஊர்காவற்றுறையில் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொரோனா அபாயமுள்ள வெளி மாகாணமொன்றில் உயிரிழந்த முதியவரின் உடல் உரிய அனுமதிகளின்றி யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டதால், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட எழுவைதீவு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் மாகாணமொன்றில் உயிரிழந்த 95 வயதான முதியவரின் சடலமே எழுவைதீவிற்கு கொண்டு வரப்பட்டது....

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட.பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றது- கஜேந்திரன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இத்தகைய செயற்பாடுகள் தொடர்ந்தால், அரசாங்கம் பாரிய தோல்வியை சந்திக்க நேரிடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நாடாளுமன்ற...

இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா: கடந்த 24 மணித்தியாலங்களில் 5 பேர் உயிரிழப்பு – 635 பேருக்கு தொற்று

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 5 மரணங்கள் பதிவாகியதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில், அவருக்கு தொற்று அதிகரித்தமையால் ஏற்பட்ட மாரடைப்பால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல்...

இலங்கையில் கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம் பதிவு!!

இலங்கையில் கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளது. பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 80 வயதுடைய பாணந்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் ஐவர் உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 41 ஆக பதிவு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ராகமை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து ராகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட...

மேல் மாகாணத்துக்கான தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள்!- யாழ் அரச அதிபர்

பொதுமக்கள் தேவையற்ற மேல் மாகாணத்துக்கான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்ட தற்போதைய நிலைமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆகப் பதிவாகியுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணத்தில்...

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 35ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 78 வயதான ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாகவும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தமை தெரியவந்ததாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவரது மரணத்துக்கான காரணம்...

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொ்றறினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் இருவர் ஆண்கள் எனவும் மூவர் பெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் கொழும்பு 02, 12, 14, 15 மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு-02 பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் கொரோனா...

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றையதினம் (வியாழக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் சிறுவனும் உள்ளடங்குவதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். கடந்த மாதம் கொழும்பு, பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்தவருக்கு...

நாட்டை முடக்க முடியாது: நடைமுறைகளைப் பின்பற்ற மக்கள் பழக்கப்பட வேண்டும்- ஜனாதிபதி

நாட்டை முடக்காமல், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றுவதற்கு மக்கள் பழக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றினால் எந்தப் பிரச்சினைகளும் இன்றி நாட்டை முன்கொண்டு செல்ல முடியும் எனவும் சரியான...

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்களுக்கு இடையில் பயணத் தடை: ஜனாதிபதி

மக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்காமல், பொருளாதாரத்தை மோசமாகப் பாதிக்காமல் கொரோனா பரவலைத் தடுக்கும் பல அறிவிப்புக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். கொவிட்-19 ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது பல முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி, மக்களை தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அவர்களை தங்கள்...

கொரோனா தொற்றாளர்களுடன் பேருந்தில் யாழிற்கு பயணித்த ஆறுபேர் தலைமறைவு!

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஆறு பேர் தொலைபேசியை நிறுத்திவைத்து தலைமறைவாகியுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர்கள் ஆறு பேரையும்...

வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் 14 நாள்களுக்கு சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் – யாழ்.மாநகர முதல்வர் அறிவிப்பு

வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணம் மாநகரத்திற்கு வருகை தரும் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அறிவித்துள்ளார். இந்த நடைமுறை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பின்பற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நகர மத்தியை...

வடக்கில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று: யாழில் ஆறு பேர்!

வடக்கில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்படி, யாழ். மாவட்டத்தில் ஆறு பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், யாழ்ப்பாணத்தில் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும் உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில்...

கொரோனா அச்சுறுத்தல்: யாழ்.மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன

வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவோர் அந்தப் பகுதி கிராம அலுவலகர் ஊடாக தங்களது முழு விபரங்களை பதிய வேண்டும் என அம்மாவட்ட கொவிட் -19 உயர்மட்டக் குழு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது....
Loading posts...

All posts loaded

No more posts