- Thursday
- August 28th, 2025

கோவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்கடி காரணமாக தனது உயிரை மாய்த்துள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை – ஆழியவளையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவதரன் (வயது-34) என்ற 2...

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இன்று காலை வரையில் எவ்வித அறிவுறுத்தலும்...

சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகுதி சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அதன்படி, இன்று (06) காலை ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்ததடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். மேலும், ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி நாட்டுக்கு அனுப்பி...

யாழ்ப்பாணம்- சுன்னாகம், மயிலங்காடு பகுதியிலுள்ள 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என அவர்கள் மறுப்புத் தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குறித்த தொற்றாளர்களுக்கு, இவ்விடயத்தில் சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியபோதும் அதனை ஏற்காது அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களை சிகிச்சை நிலையத்துக்கு...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலுள்ள சிகிச்சை களத்தில் வைத்திய சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்கள், தபால் ஊடாக அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார் ஆகவே இன்றிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறும் நோயாளர்கள், தமக்குரிய மருந்துப் பொருட்களை 021- 2214249, 021- 2222261, 021- 2223348...

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு கூறினார். ஜூன் 14 ஆம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க முடிவு எட்டப்பட்டால்,...

கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணிப்பாளர் வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் இளையதம்பி உதயகுமார் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை மாலை வரை 49 ஆயிரத்து 280 கோவிட்-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோவிட்- 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு...

தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 14 ஆம் காலை 04 மணி வரை குறித்த பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்றும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். முன்னர் அறிவிக்கப்பட்ட பிரகாரம் எதிர்வரும் 7 ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்றும் அவர்...

யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாக காணப்படுகின்றது. எனவே மக்கள் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து விடுபட அனைவரும் அச்சமின்றி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோவிட் – 19 உலகளாவிய தொற்றின் மூன்றாவது அலை இன்று இலங்கையில் வெகு தீவிரமாகப்...

யாழ்ப்பாணத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியே வழங்கப்படுகின்றமையினால், மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இன்றும் இடம்பெற்று...

யாழ்ப்பாணத்தில் 12 மையங்களில், தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள 50,000 தடுப்பூசிகளை, அதிக தொற்று ஏற்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்குரிய நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். மேலும் இந்த தடுப்பூசிகளை எதிர்வரும் 15 நாட்களுக்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் மிகத் துரிதமாக வழங்குவதற்குரிய...

கடந்த 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்பட்டவேளையில் பொதுமக்கள் செயற்பட்ட விதம் நோய்த்தொற்று மேலும் பரவுவதற்கு இடமளித்ததைப் போன்றதாகும். நோய்த்தொற்று பரவுவதை தடுப்பதற்கு அரசு எடுக்கும் முயற்சிகள் இதன்மூலம் தோல்வி அடைய கூடுமென்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனவே ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை பயணத்தடையை மேலும் நீடிப்பதற்கு ஜனாதிபதி...

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்குவதற்கு சுகாதாரத் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் J/103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு பகுதியான அரசடியை தனிமைப்படுத்துவதற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டச் செயலாளர் ஊடாக கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியினால் கோரிக்கை முன்வைக்கட்டுள்ளது. நல்லூர்...

பருத்தித்துறை ஓடக்கரை பகுதியில் 37 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 15 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் இன்று வியாழக்கிழமை ஓடக்கரைக் கிராமத்தில் 37 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 15 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஓடக்கரைக் கிராமத்தில் அண்மைய நாள்களில் தொற்றாளர்கள் அடையாளம்...

பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள போது யாழ் மாவட்ட மக்களை தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்... யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் இணைப்பாளர் என்ற...

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்கள் மற்றும் பூசகரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர். காலமானவரின் மகன் யாழ்ப்பாணத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றுகின்றார். அவருக்கு நேற்றுமுன்தினம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தன. அதன் பெறுபேறுகள் நேற்று மாலை கிடைக்கப்பெற்ற போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் வங்கியாளரின் தந்தை...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 62 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 77 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை (மே 20) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 272 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு...

நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது. இதனையடுத்து மீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

இணுவில் கந்தசுவாமி ஆலய பிரதம குருக்களான உருத்திரமூர்த்தி குருக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து கொரோனா சுகாதார விதிமுறைகளுக்கு...

All posts loaded
No more posts