- Thursday
- August 28th, 2025

நாடளாவிய ரீதியில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது. இதனையடுத்து மீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 840 பேரின் மாதிரிகள் நேற்று (புதன்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 69 பேருக்கும் கிளிநொச்சியில் 23...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 36 மரணங்கள் பாதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 19 ஆண்களும் 17 பெண்களுமே இவ்வாறு மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் எம்பிலிபிட்டி, நாவலப்பிட்டி, புசல்லாவ, வென்னொருவ, பன்னல, இரத்மலானை, இராஜகிரிய, வத்தளை, கலபிட்டமட, துல்கிரிய, அஹங்கம, ஊராபொல, கட்டுவ, செவனகல,...

வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 937 பேரின் மாதிரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பேருக்கும் கிளிநொச்சியில் 31...

இலங்கையில் கொரோனா வைரஸினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் இலங்கையில் மேலும் 2 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...

21 ஆம் திகதி 11 மணிமுதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். மீண்டும் 25 ஆம் திகதி இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இதேவேளை...

முல்லைத்தீவு மாவட்டத்தில் 327 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 378 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கு மாகாணத்தில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை இதுவேயாகும். யாழ். போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பயங்கரவாத அமைப்பை நினைவுகூராமலும், கொரோனா விதிமுறைகளை மீறாமலும் நினைவேந்தலை நடத்தலாமென முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பொலிசார் தாக்கல் செய்த தடை மனுவை இரத்து செய்யக் கோரி, இன்று தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 21 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு...

சவுதி அரேபிய கடற்பரப்பில் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழ் அமுக்கம் காரணமாக இலங்கைகை்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சில தினங்களில் இந்தத் தாக்கம் தீவிரம் பெற்று இலங்கையின் வடபகுதியைக் கடக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாளை முதல் இந்தத் தாழமுக்கம் மேலும் தீவிரமடையலாம் என்றும் தீவிரம் பெற்ற சூறாவளி இலங்கையின் வடமேல்...

இலங்கையில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்....

நாட்டில் தற்போதுள்ள கொவிட்-19 பரவல் தீவிர நிலைமையைக் கருத்திற் கொண்டு விசேட போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நாடளாவிய ரீதியில் முழுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகளும், நேற்று புதன்கிழமை முதல் மே 31 ஆம் திகதி வரை இரவு நேர கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை இரவு 11 மணி...

வடக்கு மாகாணத்தில் மேலும் 82 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம் ஆகியவற்றில் 977 பேரின் மாதிரிகள் நேற்று (புதன்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 67 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில்...

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் , நினைவு தூபி உடைக்கப்பட்டுள்ளது. அதேவேளை இம்முறை புதிதாக நாட்டுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த 6.5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பொது நினைவுக்கல்லும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமான நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு...

நாளை (வியாழக்கிழமை) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17) அதிகாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் பயண தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார். இதவேளை மேல் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஊரடங்கு உத்தரவைப் போன்ற குறித்த பயணத் தடை...

கோவிட் -19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் பி.சி.ஆர் சோதனைகள் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையிலான தொற்றுநோயாளர்களை வெளிப்படுத்தும். மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகள் போதாது. எங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். கோரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 35 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை (மே 11) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 18 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன....

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 23 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இரத்மலானை,பிலிமத்தலாவ, பத்தன,தலவாக்கலை, ஹால்கரன்ஓய, எல்கடுவ மெனிக்கின்ன, மாத்தறை, தல்கஸ்வல, மொரன்துடுவ, மஹரகம, ஹல்தொட, வஸ்கடுவ, களனி, மொரட்டுவ மற்றும் பாணந்துறை பகுதிகளிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அத்தோடு, மாத்தளையில் 3 மரணங்களும் மடுல்கல பொலன்னறுவை ஆகிய...

கொரோனா தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், முதல் கட்டமாக, வடக்கு மாகாணம் முழுவதிலும் இடைநிலை சிகிச்சைகளை நிலையங்களை மாவட்ட ரீதியில் புதிதாக அமைத்து வருவதாக...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. காலி, ஹெட்டிபொல, பல்லேவெல, கண்டி, மத்துகம, பாதுக்கை, மீகஹகொடை, அக்குரஸ்ஸ, மொரான்துடுவை, அநுராதபுரம், கொழும்பு-6, கலுஹக்கல, மொரட்டுவை, மல்வானை, கொழும்பு 15, பொரளை, கந்தானை, மாஸ்வெல, வத்தேகம, மாலபே ஆகிய பகுதிகளிலும் யாழ்ப்பாணம், களுத்துறை மற்றும்...

All posts loaded
No more posts