- Thursday
- August 28th, 2025

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம், மக்கள் ஒன்றுகூடும் அனைத்து கூட்டங்களையும் இரத்து செய்யவும்...

முழு நாட்டையும் முடக்குவதற்கான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்தார். எனினும், அடுத்துவரும் நாட்களில் மாகாணங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். இவ்வாறு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அத்தியாவசிய...

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொவிட் செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் திகதியிலிருந்து அரச...

நாட்டின் கோரோனா வைரஸ் தொற்று நிலமை காரணமாக நாட்டை முழுமையாக அல்லது 75 சதவீதம் மூடுவதற்கு தயாராக இருக்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் தலைவர்கள் கலந்துரையாடலுக்கு வரவழைக்கப்பட்டனர். எதிர்காலத்தில் நாட்டில்...

நாட்டில் நேற்று இரண்டாயிரத்து 672 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில், 13 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் ஒரேநாள் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தைக் கடந்த முதல் சந்தர்ப்பம் இன்றாகும். இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்...

வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், .யாழ்ப்பாணத்தில் கொரோனா பாதிப்பினால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளாார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 486 பேரின் மாதிரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாவட்ட...

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், “யாழ். மாவட்டத்தில் நேற்று மாத்திரம்...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 807 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில்...

நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! நேற்று மட்டும் 1895 பேருக்குக் கொரோனா தொற்று!!
நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 745ஆக அதிகரித்துள்ளது. இதே வேளை நாட்டில் நேற்று மட்டும் 1895 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு...

நாட்டினை ஒரு வாரகாலத்திற்காகவது முழுமையாக முடக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இவ்வாறு அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே அவர், இலங்கை அரசாங்கத்திடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவும் வீதத்தை விட இலங்கையில் கொரோனா பரவும் வேகம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் எம் பாலசூரிய இந்தவிடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சனத்தொகை மற்றும் இலங்கையின் சனத்தொகைக்கமைய பதிவாகும் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது தெளிவாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த தமிழ் சிங்கள புதுவருடத்தின் பின்னர் நாளாந்தம் ஆயிரத்து 900...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம்...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உள்ளம நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 749 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 43...

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பாக வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில். “யாழ். மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று அதிகரித்துள்ளது....

தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகள் மறு அறிவித்தல்வரை முடக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளே நேற்று இரவு முதல் முடக்கப்படுகிறது. குறித்த பகுதிகளில்...

வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் ஆய்வுகூடங்களில் 824 பேரின் மாதிரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 37 பேருக்கும்...

நாட்டில் மேலும் 13 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ள மொத்த உயிரிழப்பு 700ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 709ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்று மட்டும் ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 705ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 764 பேர் நேற்று வைத்தியசாலைகளில் இருந்த வெளியேறிய நிலையில்,...

தற்போது நாடுமுழுவதும் பரவி வரும் கோவிட்- 19 நோய்த்தொற்றின் மூன்றாவது அலை காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கோவிட்-19 நோயாளிகளின் தீவிர சிகிச்சைக்காக ஜோன் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் மூன்று தீவிர சிகிச்சை பிரிவுகளை அமைக்க ஏற்பாடுகள்...

அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வடமாகாண குழந்தை நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றுவரை 1544...

All posts loaded
No more posts