Ad Widget

நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா திரிபு ஆபத்தானது!!

நாட்டில் பரவி வரும் கோவிட்-19 வைரஸின் டெல்டா திரிபு மிகவும் கடுமையானது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த டெல்டா திரிபு 15 வினாடிகளுக்குள் பலருக்கு பரவும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

முன்னதாக நாட்டின் பிற பகுதிகளுக்கு பரவிய கோரோனா வைரஸ் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் மற்றவர்களுக்கு பரவியதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்டா வைரஸ் பாதிப்பு இந்தியா மற்றும் பிரிட்டன் உள்பட பல நாடுகளை பாதித்துள்ளது.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் டெல்டா திரிபு நொற்றால் பாதித்தவர்கள் உள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இலங்கையில் தினசரி கோரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 5ஆவது நாளாக இரண்டாயிரத்தைத் தாண்டியது.

இலங்கையில் நேற்று 2 ஆயிரத்து 420 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என்று கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related Posts