- Sunday
- December 21st, 2025
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, வண்ணார்பண்ணையைச் சேர்ந்த (63 வயது) பெண் ஒருவரே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார்.
கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் 19 பேர் கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பிலியந்தலை, கொழும்பு ஆகிய இடங்களில் டெல்டா திரிபுடன் கூடிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பிலியந்தலையைச் 22 வயதான ஆணொருவரும் இவர்களில்...
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களில் 48 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது. அதனையடுத்து பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியினால் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளருக்கும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிபாளருக்கும் நேற்றிரவு முன்வைக்கப்பட்ட கோரிக்கை அமைய உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை வடமேற்கு (J388)...
பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டிய சந்தை மேற்கு பகுதியில் சந்தேகத்துக்கு இடமானோரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் ஐவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் சந்தை வியாபாரிகள் என்றும் இருவர் சந்தை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். அதனால் பருத்தித்துறை சந்தையை தற்காலிகமாக மூடுவதா அல்லது...
வல்வெட்டித்துறையில் நேற்று 38 பேர் உள்பட இரண்டு நாள்களில் 48 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எழுமாற்றாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நேற்று 38 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சந்தேகத்தின் அடிப்படையில் 156 பேரிடம் நேற்று பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 29 பேருக்கு தொற்று...
இலங்கையில் கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் முழுமையாக தயாராக இல்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் வைரஸின் மற்றொரு அலை உருவாக வாய்ப்புள்ளது என சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார். இலங்கை விழிப்புடன் இருப்பதாகவும் உலக முன்னேற்றங்களை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். வைரஸை ஒழிக்க முடியாது என்பதை...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டுக்காக 41 வயதுடைய நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த அவர், 2019 ஆம் ஆண்டு கட்டாருக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், பின்னர் அவரை கைதுசெய்ய இன்டர்போல் நீல நோட்டீஸ் அனுப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி சந்தேக நபர் கட்டாரில் கைதுசெய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு...
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது. மேலும் 35 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது. 18 பெண்களும் 17 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 502ஆக அதிகரித்துள்ளது.
லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லம்ப்டா வைரஸ் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 40 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 11 பெண்களும் 29 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 68 ஆயிரத்து 676...
நிதி அமைச்சராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர். கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஜே – 276 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பதிவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. அந்நிலையில் மாப்பிள்ளை...
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸூக்கு எதிராக பல தடுப்பூசிகள் வெற்றிகரமாக கண்டறியப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்த தொற்றுக்கான சிகிச்சை முறை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். குறிப்பாக தொற்றுக்கு எதிராக புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் (ஜிசி376) மூலம் சிகிச்சை அளித்தால் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்....
உலகின் அநேகமான நாடுகளில் கொவிட் - 19 வைரஸின் புதிய திரிபுகள் பரவ ஆரம்பித்து 2 - 3 மாதகாலத்தின் பின்னரே அதன் மோசமான தாக்கங்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. எனவே தற்போது எமது நாட்டிலும் டெல்டா வைரஸ் திரிபுகள் இனங்காணப்பட்டுவரும் நிலையில், இருமாதகாலத்தின் பின்னர் இதன் தாக்கங்கள் வெளிப்படத்தொடங்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்...
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் எழுமாற்றாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் ஆறு பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், மந்திகை பகுதியில் 6 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை நகரில் எழுமாறாக 100 பேரிடம் நேற்று பெறப்பட்ட மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு...
நாடளாவிய ரீதியில் பெறப்பட்ட 142 மாதிரிகளில் பத்தில் ஒன்று அதாவது 14 பேருக்கு டெல்டா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையானது கவலைக்குரிய நிலைமையாகும். இது குறித்த உண்மையான தகவல்கள் வெளிப்படுத்தப்படாவிட்டாலும் தற்போது நாட்டில் நூறு அல்லது ஆயிரக்கணக்கான டெல்டா தொற்றாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மாத்திரம் உறுதியாகக் கூற முடியும் என்று சுகாதார கொள்கை நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் வைத்தியர்...
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதற்கமை யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த (57 வயது) ஆண் ஒருவரே நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார் இவரின் சடலம், சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்பட்டுள்ளதாக...
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவமொன்றில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் கோண்டாவில் பகுதியில் உள்ள இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள செல்வபுரம் சிவன் கோவிலடியில் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர். இதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தாவிட்டால் இன்னும் 10 வாரங்களில் இலங்கையினுள் பரவும் பிரதான வகை கொவிட் வைரஸாக டெல்டா வைரஸ் திரிபு மாறக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோ பிள்ளை இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "60 வயதிற்கு...
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற நயினாதீவைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். அதேபோல், யாழ்ப்பாணம் – வெள்ளாந்தெரு பகுதியைச் சேர்ந்த 60 வயது ஆணும் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணம்...
Loading posts...
All posts loaded
No more posts
