- Thursday
- May 21st, 2026
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய (திங்கட்கிழமை) நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 129 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், வைத்தியசாலைகளிலும் இட ஒதுக்கீடு முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை,...
அரசாங்கம் தினசரி வெளியிடும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் பதிவாகியுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று ஊடக சந்திப்பின் போது பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சேனாரத்ன, இலங்கையின் தினசரி கொரோனா வைரஸ் மரணங்கள், மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை விட முப்பது மடங்கு அதிகம்...
நாட்டில் 30-40வீதமான கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர். அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்து சிகிச்சையளிக்க முடியாது. முடிந்தளவு பொதுமக்களை வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்குவதே இப்போது இருக்கும் ஒரே வழிமுறையாகும். ஆகவே குறைந்தது 21 நாட்களேனும் அவர்களைவீடுகளில் தனிமைப்படுத்தியத்தினால் நிலைமைகளை வெகுவாக குறைக்க முடியும் எனபொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன...
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உட்பட ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த (69 வயது) பெண் ஒருவரும் நெல்லியடியைச் சேர்ந்த (64 வயது) ஆண் ஒருவரும் சுன்னாகத்தைச் சேர்ந்த (76 வயது) ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதேவேளை, மந்திகை ஆதார...
பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த இளம் பெண் (22 வயது) உள்ளிட்ட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை சேர்ந்த குறித்த பெண், மூன்று நாள்களாக காய்ச்சலுடன் சுகயீனமாக இருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மூச்சு எடுப்பத்தில் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார். இதனால் குறித்த பெண்ணை, மந்திகை...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கும் பட்சத்தில் 7 ஆயிரத்து 500 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தால் நியமிக்கப்பட்டுள்ள சுயாதீன தொழில்நுட்ப குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதேநிலைமை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை நீடித்தால் 10 ஆயிரம் பேரை பாதுகாக்க முடியும் எனவும்...
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் விசேட...
யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும் கொழும்புத்துறையைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்தனர். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...
சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி பெற்றவர்களை விட 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதம் 8.1 மடங்கு அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பைசர், அஸ்ட்ரா-செனெகா மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளைப் பெற்ற 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பேராசிரியர்...
யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மேலும் 5 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த 5 பேருக்கே கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் மருதடி லேனைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும் சங்கானையைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண்...
நாட்டில் நேற்று (24.08.2021) கொரோனா தொற்றால் மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில், ஆண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 37 ஆண்களும், 14 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 81 ஆண்களும். 65 பெண்களுமாக 198 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாட்டில் கொரோனா...
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. கடந்த 20 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் அதனை தொடர்ந்தும் நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என சுகாதார சேவைகள்...
யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம், 5.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு...
நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை முடக்கம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொரொனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவார காலத்துக்கேனும் நாட்டை முடக்கி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பொருத்தமான தீர்மானங்களை எடுக்குமாறு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கோத்தபாய செவி சாய்த்துள்ளார். கொவிட்-19 தடுப்பூ பணிக்குழுவின் கூட்டதிற்கு பின்னர், அது குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் நாட்டை முடக்குவது தொடர்பான...
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் இறப்புகளும் அதிகரித்துச் செல்லும் நிலைமையே காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கவலை வெளியிட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொதுமக்களும் சமூக பொறுப்புணர்ந்து செயற்பட...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 186 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை புதிதாக 3 ஆயிரத்து 806 பேருக்கு நேற்று (வியாழக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 3 ஆயிரத்து 793 பேர்,...
யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம், இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில், இராணுவத்தில் 512 ஆவது பிரிகேட் பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடமாடும் தடுப்பூசி வழங்கும் வேலைத்...
நாட்டை முழுமையாக முடக்காது, பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு முடக்கப்பட்டால், பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியாது என்றும், அன்றாடம் வாழ்க்கை நடத்துபவர்கள் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்....
இலங்கையில் கொரோனா வைரஸ் டெல்டா வகையின் மூன்று பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. SA 222 – V, SA 701-S மற்றும் SA 1078-S ஆகிய பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இவை டெல்டா வகையின் கூர்மையான பிறழ்வுகள் என்றும் இலங்கையில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவாக...
Loading posts...
All posts loaded
No more posts
