- Monday
- August 3rd, 2026
யாழில் முன்னெடுக்கப்பட்டு வரும் 65 ஆயிரம் வீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு வலியுறுத்தி வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பொது நிகழ்வுகளிலும் கலந்து...
நல்லாட்சி எனக்கூறும் இந்த அரசாங்கத்தில்கூட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கடந்த மாதம் மட்டும் இருபத்துமூன்றுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வடக்குக் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இதில் மூன்றுபேரைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் பூசா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அண்மையில்...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தமிழ் இளைஞர்கள் தொடர்ந்து கடத்தப்படுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு துணை நிற்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதன் பின்னணியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் கைதாகியுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு...
வடமாகாண சபையில் நாங்கள் விடுகின்றபிழைகளை சுட்டிக்காட்டுங்கள். அதை விடுத்து தமிழர்களை பிரிவினைவாதிகளாக சித்தரித்து சுயலாபங்களை பெற்றுக் கொள்ள முனையாதீர்கள் என்று தினேஸ் குணவர்த்தனவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன். வடமாகாண சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த பொது எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன,கடந்தகாலத்தில் வடகிழக்கு மாகாண முதலமைச்சர்...
விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களால் யாழ் குடாநாட்டு மக்களின் வாழ்வும் இருப்பும் மெல்ல மெல்ல அழிந்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் பெருகிவரும் மக்கள் தொகையினால் இயற்கைச் சமநிலையில் பல மாறுதல்கள் ஏற்பட்டு சூழலில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. அதற்கு யாழ் குடாநாடும் விதிவிலக்கல்ல. போருக்கு முன்னரும், போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரமும் இயற்கைப் பசளை,...
மியான்மர் நாட்டில் (பர்மா) வடமேற்கு பகுதியில் 7.0 அளவுள்ள கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்புக்கு கீழே 122 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்....
வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 6.1 ஏக்கர் காணிகள், நேற்று செவ்வாய்க்கிழமை (12) கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 26 வருடங்களாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஜே-226 கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட 17 பேருக்குச் சொந்தமான காணிகளே இவ்வாறு கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட நிலையில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் கனகராஜா ஸ்ரீமுருகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்பகுதியில் உள்ள...
சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீட்டை வன்மையாகக் கண்டித்துள்ள வடக்கு மாகாண சபை, இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரேரணை ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரனினால் சமர்ப்பிக்கப்பட்டது. பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றிய ரவிகரன்,...
கிராம சேவையாளர்களை அவர்களது கடமையை மேற்கொள்ளவிடாது இடையூறு விளைவித்த இராணுவத்தினரைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட கிராம சேவையாளர்களால் நேற்று திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் கிராம சேவையாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கில், தென்னிலங்கை மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் வாடிகள் அமைத்து தொழில் நடவடிக்கையில்...
மத்திய அரசாங்கத்தின் மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வட மாகாணசபை முட்டுக்கட்டையாக செயற்படுகிறது என்று சிறைச்சாலை மறு சீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் யுத்தத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு 65,000 வீடுகளை அமைப்பதற்கு மீள் குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு...
நாரஹேன்பிட்டியில் கூரியர் நிறுவன தலைமையகம் ஒன்றில் மீட்கப்பட்ட புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பயன்படுத்தும் தொப்பி தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. லண்டனுக்கு அனுப்பப்பட இருந்த குறித்த தொப்பி விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொட்டு அம்மானினால் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் சில தகவல்கள் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ள நிலையில் அதனை உறுதி...
இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஐக்கிய நாடுகள் சபை அறிந்து வைத்திருந்தமை குறித்த தகவல் அம்பலமாகியுள்ளது. இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய...
யாழில் சுவீகரிக்கப்படவிருந்த காணிகளை சுவீகரிக்காது தடுத்து நிறுத்துமாறு வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் யாழ். அரசாங்க அதிபர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். யாழ். ஆணைக்கோட்டை, கூழாவடி இராணுவ முகாம் பகுதியிலுள்ள ஐந்து தனிநபர்களுக்கு சொந்தமான 16 ஏக்கர் பரப்பளவு காணிகளை இன்று திங்கட்கிழமை நில அளவையாளர்கள் அளப்பதற்கு முற்பட்டனர். இந்தநிலையில்,...
தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வின் முன்மொழிவு வரைவு தீர்வு திட்டம் இன்று ஏகமனதாக வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய வைத்திய கலாநிதி ப.லக்ஸ்மன் தெரிவித்தார். இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் அச்சு பிரதிகளையும் மிக விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....
யாழ்ப்பாணம் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 36 ஏக்கர் காணி கடற்படையினரால் இன்று சனிிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – சேந்தாங்குளத்திலுள்ள ஆலயத்திற்கு சொந்தமான குறித்த ஏக்கர் காணிகள் கடந்த 26 வருடங்களுக்கு மேலாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தநிலையில், கத்தோலிக்க மக்கள் மற்றும் குருக்களின் எதிர்ப்பினால் குறித்த காணி விடுவிக்கப்பட்டதாக அருட்தந்தை ஜெ.ஏ.அருள்தாஸன் தெரிவித்தார். குறித்த காணியை...
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின் எதிர்காலத்தில் நாட்டை பிரிப்பதற்கான ஆயுதக் கிளர்ச்சிகள் மீண்டும் தலைதூக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகாவின் மக்கள் புரட்சி சுதந்திர வெற்றியின் 60ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும்...
தென்மராட்சி – வரணிப் பிரதேசத்தில் இனந்தெரியாத குழுவினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் பாடசாலை மாணவன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். வரணி மத்தியகல்லூரிக்கு அருகிலுள்ள வீதியூடாக குறித்த நால்வரும் பணித்துக்கொண்டிருக்கையில் இடைமறித்த குழு ஒன்று அவர்களை வாள்களால் வெட்டியதுடன் இரும்புக் கம்பிகளாலும் தாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
புதிய அரசின் மீது வடக்கு மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தற்போது குறைந்து கொண்டு போகிறது என யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஜேர்மனிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். ஜேர்மனிய நாடாளுமன்றத்தின் அங்கத்தவர்காளான 9 பேர் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட்...
யாழ்ப்பாணத்தில் படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களின் நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் சுமார் 60 ஏக்கர் காணியும், ஆனைக்கோட்டை பகுதியில் 16 பரப்பு காணியும் படையினரின்...
யுத்தத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனுக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். யுத்தத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடுகள் தொடர்பான...
Loading posts...
All posts loaded
No more posts
