- Sunday
- July 27th, 2025

எனக்கும் அப்பாவை கட்டிப்பிடிச்சுக் கொண்டு பைக்கில இருந்து பள்ளிக் கூடம் போக ஆசையாக இருக்குது மாமா ஆனா…. அப்படி நடக்குமா? என தனது பெரும் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள் அருள்பிரகாஸ் றஜிதா தரம் நான்கில் கல்வி கற்கும் ஒன்பது வயது மாணவி. கிளிநொச்சி அம்பாள்குளத்தில் வசித்துவரும் றஜிதாவின் அப்பா அருள்பிரகாஸ் வயது 44 கடந்த எட்டு வருடங்களாக...

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து கடந்த 18 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரும் இன்று வெள்ளிக்கிழமை பகல் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளனர். இந்த தகவலை தமிழ் அரசியல் கைதி உறுதிப்படுத்தினார். மிகவிரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் சார்பாக நீதின்றத்தில் இன்று முன்னிலையான...

உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார். உண்ணாவிரதம் இருக்கும் 13 தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் சிறைச்சாலையினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் இதன்போது, குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானது என்பதால் அவர்களுக்கு எதிராக...

கடந்த காலங்களில், அனைத்துத் தரப்பினரும் எம்மை ஏமாற்றிவிட்டனர். அதனால், இனியும் எவரிடத்திலும் நாம் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை. எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில், எமது இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை' என்று கொழும்பு மெகசின் சிறைச்சாலையில், உண்ணாநிலைப் போராட்டமொன்றை முன்னெடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு போராட்டம் நடத்திவரும் கைதிகளின் நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக,...

தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணிவரை அந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக...

ஆசைப்பேச்சுக்களுக்கு மயங்கியோ அல்லது பயமுறுத்தல்களுக்குப் பயந்தோ தமது பூர்வீக காணிகளை இராணுவ தேவைகளுக்கு விற்க வேண்டாம் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, போர் முடிவுற்று பல ஆண்டுகளான பின்பும் நாட்டில் சமாதானம்...

இறுதிக்கட்டப் போர் முழுமையாக முடிவடைவதற்கு முன்னரே போர் முடிவடைந்துவிட்டது என்ற அறிவிப்பை மஹிந்த ராஜபக்ஷ விடுத்தார் என்றும், 2009 மே 19ஆம் திகதிகூட பிரபாகரன் உயிரிழக்கவில்லை என்றும் இறுதிக்கட்டப் போருக்குத் தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டார். அத்துடன், இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது...

ஆனையிறவு இராணுவ முகாம் மீது ஓயாத அலைகள் 3 அணிகளில் இணைந்து தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் சந்தேகநபரான விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் ஒருவரை, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் விடுதலை செய்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22, 23ம் திகதிகளில் ஆனையிறவு...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் எனக்கூறும் அரசாங்கம், அவர் எப்போது கொல்லப்பட்டார் மற்றும் அவரது சடலத்துக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் எந்தத் தகவலையும் இதுவரையும் வெளியிடவில்லை' என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது....

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும், அவர்களது உண்ணாவிரதப் பேராட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கிலும் கிளிநொச்சியில் சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை 8.10 அளவில் ஆரம்பமாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ன. இதற்கமைய கிளிநொச்சி திரேசம்மா தேவாலயத்தில் இந்த கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி, நகர் பிள்ளையார் கோவில்...

கீரிமலை பகுதியில் காணி சுவீகரிப்பிற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்ட நிலையில் யாழ். திருவடிநிலை பகுதியில் காணி அளவீடுகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இதனடிப்படையில் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் – திருவடிநிலை பகுதியில் இந்த நடவடிக்கை...

இலங்கையில் நடந்த போரின் போது, புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளில் பொதுமக்களுக்கு உரியதை, அவர்களிடமே கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போரின்போது, போர் வலயப் பகுதிகளிலிருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட நகைகள் குறித்து, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு...

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் 14 அரசியல் கைதிகளையும் தொடர்ந்து எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்படுவீர்கள் என வடமாகாண ஆளுநா் ரெஜினோல்ட் கூரே, அமைச்சா் டி.எம் சுவாமிநாதன் ஆகியோர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று உறுதியளித்த நிலையிலும் நீதிமன்றம் இன்று புதன்கிழமை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. நீண்டகாலமாக தடுத்து...

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் விடுத்த கோரிக்கையை கைதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கைதிகளின் விடுதலை தொடர்பில் கூட்டமைப்பு முன்னெடுத்த கலந்துரையாடலில் மேற்கொண்ட தீர்மானங்களை அறிவிக்க மகஸீன் சிறைச்சாலைக்கு சென்றிருந்த போதே, அவர்கள் இவ்வாறு கூறியதாக...

தமது விடுதலையை வலியுறு்தி உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் ஆறு பேரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை வைத்திய சாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமக்கு உரிய பதில் வழங்கப்பட வேண்டும். அதுவரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்து 14 அரசியல் கைதிகளும் நேற்று போராட்டத்தை தொடர்ந்திருந்தனர். கடந்த சனிக்கிழமை...

உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை தான் ஏற்பார் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நாடாளுமன்றில் உறுதியளித்தார். இருப்பினும், இந்தக் கைதிகளை விடுவிப்பதா இல்லையா என்பது குறித்து தன்னால் எந்த முடிவையும் எடுக்கமுடியாது என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காணாமல் போனோர் மற்றும்...

ஒரு வருடத்தில் இலங்கையில் ஐயாயிரம் சிறுநீரக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய உற்பத்திகளுக்காக நச்சு இரசாயனப் பொருட்களை பயன்படுத்துதல், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய் நிலைமைகள் இதற்கு பிரதான காரணங்களாகும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதோடு, இந்த...

இலங்கையில் நடந்த போரின் போது, காணாமல் போன மற்றும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க கடந்த அரசும் புதிய அரசும் தவறிவிட்டன என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். போரின் போது காணாமல்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான விவாதம், நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வேளையே எதிர்க்கட்சித் தலைவர்...

‘எனது மரணம் இலங்கைத் தமிழர்களுக்கான விடுதலையாக இருக்கட்டும்’ இந்த கூற்று மதுரை அருகே நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்ட அகதியின் கடைசி குரல். இலங்கையில் இருந்து குழந்தைகளுடன் உயிர் பிழைக்க தப்பி வந்து தமிழகத்தில் உள்ள முகாம்களில் ஆண்டுக்கணக்கில் தங்கியிருக்கும் அகதிகளின் அவலம் சொல்லி மாளாது. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு 1983-ம் ஆண்டில் இருந்து 2013-ம்...

தமிழ், முஸ்லிம் எல்லைப் பகுதியில் ஒரே நேரத்தில் 6 கடைகள் உடைக்கப்பட்டமை இன ஒற்றுமையைக் குழப்பும் திட்டமிட்ட சதி - நாச வேலை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஏறாவூர் 4 ஆம் குறிச்சியில்...

All posts loaded
No more posts