- Wednesday
- December 31st, 2025
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சானிலுள்ள மக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இன்று(சனிக்கிழமை) மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி இப்பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். கடந்த புதன்கிழமையன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில்...
இலங்கை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதி காணிகளை பார்வையிட இராணுவத்தளபதி கிருஷாந்த டி சில்வா நேற்றைய தினம் அப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இதனால் முல்லைத்தீவில் அரச படைகளின் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை அரச கடற்படை ஆக்கிரமித்துள்ளது. அக் காணிகளை நிரந்தரமாக...
ஓமந்தையிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த 73 வயதான தா.மகேஸ்வரன் நேற்றிரவு 9.30 மணியளவில் தனது போராட்டத்தைக் கைவிட்டார். வவுனியாவில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தெரிவில் பாரிய இழுபறி நிலை காணப்பட்டு வந்த நிலையில் இறுதியாக மாங்குளம் மற்றும் வவுனியா மதகுவைத்தகுளம்...
"பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சீனா தயாரிப்பு வலி நிவாரணி ஸ்பிரே (Spray) அடித்து எம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள்." இவ்வாறு முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது:- "நாம் இறுதிப் போரில் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வு முகாமில் இருந்து என்னை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கொழும்புக்கு விசாரணைக்கு என அழைத்துச்...
அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சந்தேகத்திற்கிடமாக ஊசி ஏற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குறித்த அரசியல் கைதியை உடனடியாக வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தாம் கோரியதையடுத்து புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்....
புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டது எனக் கூறப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டில் எந்தவித உண்மையுமில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு வயிற்றுவலி வாந்திபேதிக்கு ஊசி ஏற்றியிருக்கலாம் எனவும் குதர்கமாகப் பேசியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் குழுநிலைக் கூட்டம் கடந்த 9ஆம் திகதி...
கடத்தலுக்கும் எமது எல்லைப்புற கடல் பாதுகாப்பு துறையினருக்கும் இடையில் ஒற்றுமைகள், உடன்பாடுகள் இருக்கின்றனவா என்பதுடன், அரசியல்வாதிகளுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா என்பது பற்றியும் ஆராயப்பட வேண்டி இருக்கின்றதென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். மாகாண மட்டத்திலான பொலிஸ் பொது மக்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே...
தற்போது அமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை மீண்டும் சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது என, 141 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 141 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரை பிணையில்...
காணாமற்போனோர் அலுவலக அமைப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தங்கள் உடனேயே இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக இதனை நிறைவேற்றுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.இதனால் பாராளுமன்றத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டிருந்தது. மேலும் பாராளுமன்ற நடவடிக்கைகளும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டிருந்ததுடன், கட்சித் தலைவர்கள் கூட்டமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட, இரவு நேர தபால் ரயில்மீது கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு சமீபமாக கடுமையான கல்வீச்சு நடத்தப்பட்டதில் மூன்று பெட்டிகள் சேதமடைந்துள்ளதுடன் சில பயணிகள் காயமடைந்துமுள்ளனர். கிளிநொச்சி ரயில் நிலையத்தில் தரித்துவிட்டு, ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், ரயில் பாதைக்கு சற்றுத் தள்ளி நிகழ்வொன்று இடம்பெற்ற இடத்திலிருந்தே இந்த...
இறுதி யுத்தத்தின் போது காணாமல்போன எனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புகைப்படத்தில் நிற்கின்றார். அவளை எனக்கு இதுவரை காட்டாதவர்கள் எப்படி நீதியை பெற்றுத்தரப்போகிறார்கள். எமக்கு இந்த அரசாங்கத்திலும் நம்பிக்கை இல்லை என தாயார் மு.ஜெயவனிதா தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பிலான கருத்தறியயும் செயலணியிடமே அவர் இவ்வாறு...
இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக எங்களின் கருத்துக்களை அறியும் ஆவணம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் போர்குற்றம் தொடர்பான எந்த விடயங்களும் இடம்பெறவில்லை.இது தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற வட மாகாண சபையின் 58ஆவது அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 'ஐக்கிய நாடுகள் சபையின்...
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பூநகரியைச் சேர்ந்த நடராஜா கலியுகராஜா (வயது 54) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த மாதம் 24ஆம் திகதி திடீர் காய்ச்சல் காரணமாக பூநகரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இவர் மேலதிக...
கிளிநொச்சி இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் மூன்றாவது வீதி காணப்படுகின்ற ஆலயத்திற்குச் சொந்தமான காணிக்குள் மிகப்பெரும் விகாரைக்கான சுற்றுமதில் அமைக்கும் பணியில் இராணுவத்தினர் மிக தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 1957 ஆம் ஆண்டு இரனைமடு குளத்தினை தீர்த்த தளமாக கொண்டு யோகர் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு...
துப்பாக்கி முனையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு அரசு முயல்கின்றதாக நல்லிணக்க கருத்தறியும் செயலமர்வில் பெண்மணி ஒருவர் சுட்டிக் காட்டினார். இலங்கையில் சட்டம் நீதியான முறையில் நடைபெறவில்லை. குமாரபரம் படுகொலைச் சம்பத்துடன் தொடர்புடைய 6 பேருக்குமான தண்டணை வழங்குவதற்கு யூரர் சபையினை நீதிச்சேவை ஆணைக்குழு நியமிக்கின்றது என்றால், ரயலட் பார் நியமித்து விசாரணை செய்து தண்டனை விதித்திருக்கலாம். ஏன்,...
திருகோணமலை மொராவ கன்புலம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாரான பேரின்பராசா தனபாலசிங்கம் வயது 40 என்ற முன்னால் போராளி கடந்த 02/08/2016 செவ்வாய்க்கிழமை மர்மமாக மரணமடைந்துள்ளார் என்று அறியப்படுகிறது. மேலும் இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது கடந்த 29/07/2016 அன்று தனது மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது சிறிய விபத்துக்குள்ளானார் என்றும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று...
யாழ் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அச்சமின்றி சுதந்திரமாக கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு மாணவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ் பலகலைக்கழகம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் உடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி...
வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதா என்பது தொடர்பிலும் ஆய்வுசெய்து அறிக்கை சமர்பிக்குமாறு நீர்வள சபைக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார். குறித்த கிணறுகளில் உள்ள நீரை மக்கள் பருக முடியுமா இல்லையா என்பது தொடர்பாகவும் ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறித்தியுள்ளார். கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதால்...
வடமாகாணத்தில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான படையினர் உள்ள நிலையில், சமாதனத்தையும் நல்லிணக்கத்தையும் எவ்வாறு எதிர்ப்பார்க்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். வடமாகாண மக்களின் காணிகள் பலவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள நிலையில், மக்களது வளங்கள், வாழ்வாதாரங்கள் சூறையாடப்பட்டு வருவதாக, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியான ஜோடி கறஸ்கோ முனோஸிற்கு, முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜரோப்பிய ஒன்றிய,...
னர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து வரும் நிலையில், இதுகுறித்த சந்தேகங்கள் வலுவடைந்து வருகின்றன. அரசாங்கம் இதுகுறித்து உடற்கூற்று பரிசோதனை நடத்துவதற்கு தயாரென தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறு உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சுமார் 800 போராளிகள் தயாராக உள்ளனரெனவும், அரசாங்கம் உடன் இப் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜனநாயக...
Loading posts...
All posts loaded
No more posts
