- Tuesday
- August 5th, 2025

துப்பாக்கி முனையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு அரசு முயல்கின்றதாக நல்லிணக்க கருத்தறியும் செயலமர்வில் பெண்மணி ஒருவர் சுட்டிக் காட்டினார். இலங்கையில் சட்டம் நீதியான முறையில் நடைபெறவில்லை. குமாரபரம் படுகொலைச் சம்பத்துடன் தொடர்புடைய 6 பேருக்குமான தண்டணை வழங்குவதற்கு யூரர் சபையினை நீதிச்சேவை ஆணைக்குழு நியமிக்கின்றது என்றால், ரயலட் பார் நியமித்து விசாரணை செய்து தண்டனை விதித்திருக்கலாம். ஏன்,...

திருகோணமலை மொராவ கன்புலம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாரான பேரின்பராசா தனபாலசிங்கம் வயது 40 என்ற முன்னால் போராளி கடந்த 02/08/2016 செவ்வாய்க்கிழமை மர்மமாக மரணமடைந்துள்ளார் என்று அறியப்படுகிறது. மேலும் இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது கடந்த 29/07/2016 அன்று தனது மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது சிறிய விபத்துக்குள்ளானார் என்றும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று...

யாழ் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அச்சமின்றி சுதந்திரமாக கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு மாணவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ் பலகலைக்கழகம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் உடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி...

வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதா என்பது தொடர்பிலும் ஆய்வுசெய்து அறிக்கை சமர்பிக்குமாறு நீர்வள சபைக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார். குறித்த கிணறுகளில் உள்ள நீரை மக்கள் பருக முடியுமா இல்லையா என்பது தொடர்பாகவும் ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறித்தியுள்ளார். கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதால்...

வடமாகாணத்தில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான படையினர் உள்ள நிலையில், சமாதனத்தையும் நல்லிணக்கத்தையும் எவ்வாறு எதிர்ப்பார்க்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். வடமாகாண மக்களின் காணிகள் பலவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள நிலையில், மக்களது வளங்கள், வாழ்வாதாரங்கள் சூறையாடப்பட்டு வருவதாக, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியான ஜோடி கறஸ்கோ முனோஸிற்கு, முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜரோப்பிய ஒன்றிய,...

னர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து வரும் நிலையில், இதுகுறித்த சந்தேகங்கள் வலுவடைந்து வருகின்றன. அரசாங்கம் இதுகுறித்து உடற்கூற்று பரிசோதனை நடத்துவதற்கு தயாரென தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறு உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சுமார் 800 போராளிகள் தயாராக உள்ளனரெனவும், அரசாங்கம் உடன் இப் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜனநாயக...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 8 ஆம் திகதி அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கணேசன் நிமலரூபனின் நான்காவது ஆண்டு நினைவை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் போராட்டம்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எவ்வித அச்சமுமின்றி கல்வியைத் தொடரமுடியுமெனவும் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (வியாழக்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் அடங்கிய குழுவினரையும் சிங்கள மாணவர்களின் பெற்றோர்களையும் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த சிறீலங்கா அதிபர் சந்திப்பின் பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது மாணவ குழுக்கழுக்கிடையில் நடைபெற்ற...

"இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் கிழக்கில் வெள்ளைக்கொடியுடன் வந்து படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் உடனே சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள். சரணடைந்தவர்களில் ஏனையோருக்கு என்ன நடந்தது என்று தெரியாது. இது தொடர்பில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணை நடத்த வேண்டும்." இவ்வாறு நல்லிணக்க செயலணி முன் கதறியழுது வலியுறுத்தியுள்ளனர் இறுதிப்போரில் உயிர்பிழைத்த வடக்கு மக்கள். போர்க்குற்ற விசாரணைகளை...

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்யா கொலை வழக்கின் விளக்கமறியல் மற்றும், யாழ் தாதியர் வேலைநிறுத்தப் போராட்டத் தடையுத்தரவு உள்ளிட்ட 3 முக்கிய வழக்குகள் 10 ஆம் திகதி யாழ் மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. வித்யா கொலை வழக்கின் விளக்கமறியல் தொடர்பான விசாரணை, மாற்றுத்திறனாளி பெண் மீதான கூட்டுப்பாலியல் வழக்கு, தாதியர் வேலைநிறுத்த தடையுத்தரவு ஆகிய மூன்று...

'புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் பலரும் இனங்காணப்படாத மர்மமான நோய்த் தாக்கங்களுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்து வருவதாக, அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றது. இது தொடர்பில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம், சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்றை அண்மையில் நடத்தியுள்ளார். இதன்போது, அண்மைக் காலமாக உயிரிழக்கும், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பில் விசேட கவனம்...

யாழ்ப்பாண குடாநாட்டில் சுமார் 30 வீதமான படை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு உடனடியாக படையினரை விலக்கிக் கொள்ள முடியாது எனவும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். படை குறைப்பு குறித்த விடயத்தில் தாம் வடக்கு முதலமைச்சரின் கருத்துகளுக்கு தாம் உடன்பட வில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படையினருக்கு பயிற்சிகளை வழங்க...

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக, அளித்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றத்தவறியதால், எதிர்வரும் 08 ஆம் திகதி அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என வாக்குறுதி அளித்து தமிழ் மக்களிடம் வாக்குகளை பெற்ற போதிலும், இன்று வரை அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை....

தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கத்தின் அபகரிப்பிலிருந்து தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகவேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் மக்களின் காணிகளில் அரசாங்கத்தைத் தலையிடவேண்டாமெனவும் தமிழர் விடுதலைக் கூட்டணி கோருவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியினால் விடுக்கப்பட்ட அறிக்கையில்...

போர் குற்றத்திற்கான நீதி, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பன கிடைக்கும் வரை தேசிய நல்லிணக்கத்திற்கு இடமில்லை என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்ற நியாயப்பாடு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது....

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோப்பாய் பொலிஸார், மேலும் சில மாணவர்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தமிழ் மாணவர்கள் சிலருடைய பெயர்விபரங்களை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பொலிஸார் கோரிப் பெற்றுள்ளனர். கடந்த மாதம் 16ம் திகதி யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் புதுமுக...

கடத்தப்பட்டவர்கள் , மற்றும் காணாமல் போனோர்களை மீட்டு தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பாதிக்கப்பட்டவர் பிடித்து யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கண்டியை சேர்ந்தவரும் தற்போது சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வசித்து வந்தவருமான கிருஷ்ணன் (வயது...

தமது நான்கு பிள்ளைகளையும் பௌத்த மதத் துறவிகளாக, தமிழ் தந்தையொருவர் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வசித்து வந்த வீட்டை அடகு வைத்து மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த குறித்த நபர், மனைவி பற்றிய எவ்வித தகவல்களும் இல்லாத காரணத்தினால் இவ்வாறு பிள்ளைகளை பௌத்த மதத் துறவிகளாக மாற்றியுள்ளார். 56 வயதான சித்திரவேல் சுந்தரலிங்கம் என்ற நபரே இவ்வாறு...

இலங்கையில் இந்துக்கள் புனிதமாகக் கருதும் யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஆடி அமாவாசை தினத்தையொட்டி, கீரிமலையில் நடைபெற்ற பிதுர் கடன் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். இந்த வைபவத்தில் கல்வி ராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணனும் கலந்து...

தமிழ் மக்களை அநியாயமாக படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறைகள் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணி இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகத்தில் யாழ். மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின்...

All posts loaded
No more posts